Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, November 27, 2015

இன்றைய முகநூலில் என் பதிவுகள்(6)################################################################
வெளியே இருந்து பார்க்கும் வரை எல்லோருடைய வாழ்க்கையும் சொர்க்கமாய் தான் தெரியும்,
உள்ளே அவன்/ள் அனுபவிக்கும் நரக வேதனை யாருக்கும் தெரியாது...
 #####################################################################
மச்சி டேய் தென்னைமரத்துல ஏறி பாத்தா லேடீஸ் காலேஜ் தெரியுதுடா..
அப்டியே ரெண்டு கையும் விட்டுப்பாரு மெடிக்கல் காலேஜ் தெரியும்
😂
###############################################################
அமீர் கான் , ஷாரூக் கான் ஆகிய
இரண்டு நடிகர்களை கொன்று தலையை வெட்டி
தெருமுனையில் தொங்கவிடுவேன்
என அகில பாரத இந்து மஹாசபாவின்
தேசிய தலைவர் கமலேஷ் திவாரி பகிரங்கமாக
அறிவித்துள்ளார் .
👉இந்தியாவில் இதுவரை எத்தனையோ நபர்கள்
கொல்லப்பட்டுள்ளனர் ஆனால் இதுவரை யாரும்
நாட்டை விட்டு போக வேண்டும் என சொல்ல
வில்லை முதலில் ஷாரூக் கான் சொன்னார்
இப்போது அமீர் கான் நாட்டில் முஸ்லீம்களுக்கு
பாதுகாப்பு இல்லை அதனால் இந்த நாட்டில் வாழுவது
ஆபத்தானது என கூறியுள்ளார் ..
👉இந்த இரண்டு நடிகர்களையும் கொன்று தலையை
தெரு முனையில் மாட்ட வேண்டும் என நயவஞ்சக
கருத்துகளை கமலேஷ் திவாரி கூறியுள்ளார்
இந்து மஹாசபா தலைவரின் இந்த கருத்துக்கு
மத்திய அரசு என்ன பதில் சொல்லும்..
👉 எப்போதும் போல்
பிரதமர் மோடி மெளனம் காப்பாரா ?
👉கமலேஷ் திவாரியை மத்திய அரசு உடனே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்...
###############################################
பசுவை தாக்கும் வி.எச்.பி தொண்டர்கள்: சமூக வலைதளங்களில் வைரலாகும் காட்சிகள்
கடந்த சில தினங்களுக்கு முன் காலமான விஷ்வ இந்து பரிஷத் மூத்த தலைவர் அசோக் சிங்காலின் அஸ்தி கரைக்கும் நிகழ்ச்சி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. அஸ்தியை கரைக்க விஷ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் ஊர்வலமாக வந்தனர். அப்போது, ஊர்வலத்திற்கு குறுக்கே வந்த மாடு ஒன்றை வி.எச்.பி தொண்டர்கள் காலால் உதைத்து தள்ளுவதாக அந்த வீடியோவில் தெரிகிறது. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
###########################################################################################################################################
இன்றைய ஜும்மா தொழுகை சென்னை புதுப்பேட்டை ஜாக் மர்கஸில்...
மௌலவி இக்பால் பிர்தௌ்ஸி அவர்களின் சீரிய உரை...
அல்லாஹ்வின் எச்சரிக்கைகள் எனும் தலைப்பில் பயான்..
ஏகத்துவ எழுச்சி இன்று தொய்ந்து போய் இருப்பது பற்றியும், நம் மக்களிடம் அனாச்சாரங்கள் தலை விரித்தாடும் அவலத்தைப் பற்றியும், இன்று நாம் காணும் மழை, வெள்ளம் போன்ற இடர்கள் அல்லாஹ்வின் எச்சரிக்கைகளே என்று நிகழ்கால நிகழ்வுகளை சுட்டிக் காட்டும் விதத்தில் அவரின் உரை அமைந்திருந்தது..
அல்ஹம்துலில்லாஹ்!
86:11 (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
86:12 
86:12. (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
86:13 
86:13. நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
18:41. “அல்லது அதன் நீர் முழுதும் உறிஞ்சப்பட்டதாகி - அதை நீ தேடிக்கண்டு பிடிக்க முடியாதபடியும் ஆகிவிடலாம்” என்று கூறினான்.
18:42 
18:42. அவனுடைய விளைபொருட்கள் அழிக்கப்பட்டன. அதற்காக தான் செலவு செய்ததைக் குறித்து (வருந்தியவனாக) இரு கைகளையும் பிசைந்து கொண்டிருந்தான். அ(த்தோட்டமான)து வேரோடு சாய்ந்து கிடக்கின்றது. (இதனைப் பார்த்த) அவன் “என் இறைவனுக்கு எவரையும் நான் இணை வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே!” என்று கூறினான்.
16:93. மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயத்தவராய் ஆக்கியிருப்பான்; என்றாலும் தான் நாடியவர்களை வழி கேட்டிலே விட்டு வைக்கிறான் - இன்னும் தான் நாடியவர்களை நேர் வழியில் சேர்ப்பான்; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக (மறுமையில்) நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
16:94. நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் (சதி, துரோகம்) ஆகியவற்றுக்குக் காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; (அவ்வாறு செய்வதால்) நிலை பெற்ற (உங்களுடைய) பாதம் சறுகி விடும்; அன்றியும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுத்துக்கொண்டிருந்த காரணத்தால், (இம்மையில் பெருந்) துன்பத்தை அனுபவிக்க நேரிடும்; (மறுமையிலும்) உங்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.######################################################################################
93 வயதுடையவரை, டேய் நீ இன்னும் சாகலயா என்பான்.
கட்டுமரம் எப்ப கடலில் மூழ்கும் என்பான்.
திமுகவின் தலைவரின் குடும்பத்தையே விமர்சிப்பான் .
அவரின் மகளையும் விமர்சிப்பான்.
ஏன், திமுகவிற்காக எழுதினால் பேசினால் என்னையும் , உன்னையும், நம் குடும்பத்தையே விமர்சிப்பான்.....
ஆனால், அவாளின் ஆட்சியை விமர்சித்தால் அவதூறு வழக்காம், கைதாமே , தேசத்துரோகமாம்.
வாழ்க ஜனநாயகம். ஒழிக ஏதேச்சதிகாரம்!
-- By Suresh Sureka Dmk
######################################################
#‎தந்தி‬ தொலைக் காட்சிக்கு ஓர் எச்சரிக்கை!
இனி தந்தி தொலைக் காட்சி விவாதங்களில் திமுக தோழர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் எனும் தலமைக் கழகத்தின் முடிவை வரவேற்கிறேன்...
அனைத்து விவாதங்களிலும், பாண்டே, ஹரி போன்றவர்கள் ஆளும் கட்சியினரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை திமுக விடம் கேட்பதும், நம்மவர்கள் பதில் சொல்ல முற்படும் போது நெறியாளர் குறுக்கிட்டு அவர்களின்
கருத்தினை பதிவு செய்ய விடாமல் தடுப்பதும் வாடிக்கையாகி விட்டது..திமுக நண்பர்களிடம் கேள்வி வைக்கும் போது மேசையை தட்டி தட்டி கேள்வி கேட்பதும், அதே நேரம், அதிமுக அடிமைகள் பதில் கூறும்போது அதிக
நேரம் கொடுத்து அவர்களின் பேச்சில் குறிக்கீடு செய்யாமல் சிரித்து மழுப்புவதும் தந்தியின் கூறு கெட்ட நடு நிலையை நன்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள்..
உதாரணமாக திமுக ஆட்சியில் 11 மேம்பாலங்கள் கட்டி இருக்கும் போது கடந்த 4 வருட அதிமுக ஆட்சியில் ஒரு பாலம் கூட கட்ட வில்லையே என்று கேட்டால் மழுப்புவதும், அதற்கு பதில் பெற திராணி இன்றி,
திமுகவிடமே நீங்கள் ஏன் ஏரிகள் அமைக்கவில்லை என்று ஒரு தலை பட்சமாக பேசுவதிலிருந்து அவர்களின் பாழாய் போன ஊடக தர்மம் நன்கு வெளிப்படுகிறது..பார்ப்பவர்கள் எள்ளி நகையாடும் விதத்தில் இருக்கிறது..
ஆளும் கட்சியை விமர்சிக்க திராணியற்றவர்கள், எதிர் கட்சிகள் குறிப்பாக திமுக மீது வசை மாறி பொழிவதை இனியும் எந்த திமுக தொண்டனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்..
ஆளும் கட்சியிடமிருந்து விளம்பரங்கள் என்ற பெயரில் கோடி கோடியாக பணம் கிடைப்பது என்பதற்காக ஊடக தர்மத்தை காலில் போட்டு மிதிப்பதை தன் மானமுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..
தந்தி டீவி இனியும் நடுநிலை மீறி இது போன்று தொடர்ந்தால் திமுக தரப்பின் எதிர்வினைகளை சந்தித்தே தீர வேண்டும்..
நாங்கள் ஒன்றும் உன் அடிமையல்ல. நீ சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டு மௌனமாய் இருப்பதற்கு...
தந்தி டீவியை இதன் மூலம் மிகக் கடுமையாக எச்சரிக்கிறேன்...
கொஞ்சமாவது நடுநிலையுடன் செயல் படுங்கள்...
நம் கழக முகநூல் உடன்பிறப்புகள் எப்போதும் போல என் பதிவுகளுக்கு மௌனம் காக்காமல் இப் பதிவையாவது அதிகதிகம் ஷேர் செய்வதன் மூலம் நம் எதிர்ப்புகள் பெருமளவில் தந்தியின் கதவை தட்ட வேண்டும். .
மேலும் தினமும் தந்தி டீவி விவாதங்களை பாருங்கள்..திமுகவுக்கு எதிரான தவறான தகவல்கள் கூறப்படுமானால் உடனே நம் முகநூல் மூலம் பதிலடி தாருங்கள்..
இதில் நம் முகநூல் பங்கு ரெம்பவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்..
இறுதியாக, இனியும் தந்தி டீவியின் நீதி செத்த நடுநிலையை இங்கு ஆதரிப்பவர்கள் என் நட்பு வட்டத்திலிருந்து விலகி கொள்ளலாம்...
####################################################################
##################################################################################

பாராளுமன்றத்தில் பிஜேபியினரை அலறவிட்ட எதிர்கட்சி தலைவர் காங்கிரஸ் மல்லிகர்ஜுணா
"அம்பேத்கருக்கு பல இன்னல்கள் வந்த போதிலும் அவர் நாட்டைவிட்டு செல்லவில்லை" - ராஜ்நாத் சிங்
மல்லிகர்ஜீணா கார்க்கே :- "அம்பேத்கர் பற்றி பேச உங்களுக்கு தகுதியில்லை அவரை வஞ்சபுகழ்ச்சியால் புகழ்கிறீர்கள், நாங்கள் இந்நாட்டின் பூர்வீக குடிகள் ஆனால் நீங்கள், ஆரியர்கள், வந்தேரிகள், இந்தநாட்டை நயவஞ்சகத்தால் பிடித்துக்கொண்டு இந்த பூமியின் பூர்விக குடிகளை வஞ்சிக்கிறீர்கள்...
அம்பேத்கர் இந்நாட்டின் பூர்வீக சொத்து அவர் போகவில்லை என பேசுவதற்க்கு நீங்கள் யார் ?
அண்டை நாட்டில் பிழைப்பு நடத்துபவர்கள் பூர்விக குடிகளை விமர்சிப்பதா ? அவரின் தேசபற்றி பேச உங்களுக்கு துளியளவும் தகுதியில்லை.

####################################################################
"சகிப்புத்தன்மை குறைந்து வருது நல்லதல்லனு சொல்றார் ஜி.."
யார் அது ?
பிரணாப் முகர்ஜி ஜி..
அவரா.. நம்ம ஆளு தான்.. விட்டுடு..
சகிப்பின்மை இருந்தால் இந்திய பொருளாதாரம் வளராதுன்னு ரகுராம்ராஜான்னு ஒருத்தர் சொல்றார் ஜி..
அது ஒரு மேட்டர் இல்ல விடு, விடு..
சகிப்பின்மை வளர்ந்து வருவது உண்மைதான் ஒருத்தர் சொல்றார் ஜி,
அப்டியா சொன்னான்.. யாரவன்..
யாரோ நாராயணமூர்த்தியாம்..
ஓ, அவரா.. அந்த ஆளுகிட்ட மல்லுகட்டி பிரயோஜனம் இல்லை, விட்டுடு..
"ஹலோ.. நான் அப்துல்லா பேசுறேன்.. இந்தியாவுல ச..."
யோவ் நிறுத்து.. நிறுத்து..
ஜி, அப்துல்லா இந்தியாவுல சகிப்புத்தன்மை இல்லைன்னு யார்கிட்டயோ போன்ல சொல்றான் ஜி..
யாரு அப்துல்லாவா, செம்ம மேட்டர் சிக்கிருக்கு. புடிடா அவன.. ஏண்டா.. உங்களுக்கெல்லாம் போன் பேச அனுமதி கொடுத்தா.. இந்தியாவுல சகிப்புத்தன்மை இல்லைன்னு சொல்றீங்களா.. அவன் பாக்கெட்ல எவ்ளோ காசு வச்சுருக்கானு பாரு.. அது புடிங்கிட்டு போய்.. பாகிஸ்தானுக்கு ஒரு டிக்கெட் வாங்கிட்டு வந்து இந்த ஆள பிளைட் ஏத்தி விடுடா..
யோவ்.. நான் எப்போயா அப்படி சொன்னேன்..?!!
அதான்.. இந்தியாவுல ச... னு ஆரம்பிச்சியே..
யோவ்.. நான் இந்தியாவுல சனிக்கிழமை லீவுவுன்னு சொல்ல வந்தேன்யா.. எங்க என்ன முழுசா பேச விட்ட.. போய அங்கிட்டு..
-- By Akila Ramakrishnan
##########################################################################################

எப்பொழுதும் திரையரங்குகள் மீது எனக்கு இனம் புரியா மரியாதை உண்டு...!! எளியவர்களை முன் இருக்கைகளில் அமர வைத்து அழகு பார்க்கும் ஒரே இடம்...!!!#############################################################################
/"அவமானங்களை சந்தித்தபோதும் அம்பேத்கர் நாட்டை விட்டு வெளியேற நினைத்ததில்லை" ---- பிஜேபி அமைச்சர் ராஜ்நாத் சிங்//
அம்பேத்கார் இந்த நாட்டின் பூர்வீக இனம்... அவர் சந்தித்த அவமானங்களால், நாட்டை விட்டு வெளியேறாமல், சனாதான வர்ணாசிரம ஹிந்துமதத்தை விட்டு வெளியேறினார்....
சரி, அப்போது அம்பேத்காரை அவமானப்படுத்தியது யார் என்பதை ராஜ்நாத் சொல்வாரா?? சொல்லமாட்டார்.... ஏனென்றால், அம்பேத்காரை அவமானப்படுத்தியதே ஹிந்துத்துவா சக்திகள் தானே... அதனால் தானே, ஹிந்துவாக பிறந்த நான், ஹிந்துவாக சாகமாட்டேன் என்று மதம் மாறினார்...
ராஜ்நாத் சொல்வது இதுதான்... அப்போது அம்பேத்காரை அவமானப்படுத்தியதை போல, இப்போது சிறுபான்மையினரை அவமானப்படுத்துவோம், சிறுமைப்படுத்துவோம்.. யாரும் எதிர்க்க கூடாது....
prakash jp
#####################################################################

"தேசத்தை அவமதித்த " ஆமீர்கானை கண்டித்து நாளை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறது.
ஆமீர்கான் அப்படியென்ன இந்த தேசத்தை அவமதித்துவிட்டார்?
இந்திய வரைபடத்தில் இருக்கின்ற ஒரு மாநிலத்தேர்தலில் ஒரு அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தானில் வெடி வெடித்து கொண்டாடுவார் என்றார்களே அதைவிடவா இது அவமானம்?
இந்த தேசத்தின் தந்தையான மகாத்மா காந்தியை கொலை செய்தவருக்கு கோயில் எழுப்புவோம் என்று ஒரு கூட்டம் கிளம்பியதே அதைவிடவா ஆமீர் அவமானம் தேடித்தந்துவிட்டார்?
எல்லாவற்றையும் விட சுதந்திர இந்தியாவின் உச்சபட்ச அவமானமான பாபர் மசூதி இடிக்கப்பட்டதே.. அதைவிட ஒரு பேரவமானம் இந்த தேசத்திற்கு வேறு இருக்கிறதா?
-- By Sivasankaran Saravanan
############################################################
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு தினம் - சிறப்பு பகிர்வு
நவம்பர் 27: விஸ்வநாத் பிரதாப் சிங் சுருக்கமாக வி.பி.சிங் மிகக்குறுகிய காலம் நாட்டை ஆண்ட மிகச்சிறந்த பிரதமர். நேருவின் காலத்தில் அரசியலில் குதித்த இவர், ராஜ வம்சத்தை சேர்ந்தவர்,இன்னொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டவர். எமெர்ஜென்சியில் ஆட்சியை இழந்து பின் மீண்டும் ஆட்சியை காங்கிரஸ் பிடித்த பின்பு உத்தர பிரதேசத்தின் முதல்வர் ஆனார்
மனிதர்; கொள்ளையர்களை அடக்க பல நடவடிக்கைகள் எடுத்தார் .
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கொள்ளையர்களை பிடிக்க முடியாததால் பதவி விலகுவதாக சொல்லி நாற்காலியை துறந்தார். இந்திராவின் மறைவுக்கு பிந்திய ராஜீவ் அமைச்சரவையில் நிதி அமைச்சர் ஆனார், அம்பானிக்களை நோண்டி எடுத்தார் ,வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கணக்குகளை ஃபேர்ர்பாக்ஸ் என்கிற அமைப்பை கொண்டு விசாரித்தார்.
காங்கிரசுக்கு கரன்சிகளை அள்ளி விட்டுக்கொண்டிருந்த பலரின் தலைகள் உருளுவதை ராஜீவ் பார்த்து இவரை நிதி மந்திரி பதவியில் இருந்து நகர்த்தி பாதுகாப்பு மந்திரி ஆக்கினார். .போபர்ஸ் பீரங்கி ஊழலை நோண்டி எடுத்தார் ;பல ஆதாரங்கள் இவரிடம் இருப்பதாக கிசுகிசுக்கபட இவரை அமைச்சரவையை விட்டு இறக்கினார் ராஜீவ்.
தனிக்கட்சியை தொடங்கினார் வி.பி.சிங் ; தேர்தல் நடந்தது. காங்கிரசிற்கு மெஜாரிட்டி இல்லாமல் போகவே பிஜேபி ஆதரவோடு ஆட்சி அமைத்தார். பி.ஜே.பியின் நிர்பந்தத்தால் பிரச்சனைக்குரிய ஜக்மோகனை காஷ்மீர் கவர்னர் ஆக்கினார்.
இந்திய அமைதிப்படையை இலங்கையை விட்டு வெளியேற்றினார் ;பொற்கோயிலில் போய் இந்திரா காலத்தில் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார். தன் நிலத்தில் பெரும்பங்கை ஏழைகளுக்கு கொடுத்த அவர் மண்டல் கமிஷனின் பிற்படுத்தபட்டோருக்கு 27 % இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். இவரின் புகழ் உச்சத்தை நெருங்குவதை கவலையோடு காங்கிரஸ் மற்றும் பிஜேபி கவனித்தன. சோம்நாத்தில் இருந்து அயோத்தி நோக்கி ரதயாத்திரை கிளம்புவதாக அத்வானி சொல்ல ஆட்சி பறிபோகும் எனத்தெரிந்தும் அறம் சார்ந்து அவரைக்கைது செய்ய உத்தரவிட்டார்.
காவிரி நடுவர் மன்றத்தை அமைத்ததும் இவரே.
ஆட்சி போனதும் தேர்தல் வந்தது ராஜீவின் மரணம் காங்கிரசை அரியணை ஏற்ற நல்ல பிரதமர் ஒருவரின் காலம் முடிவுக்கு வந்தது , மீண்டும் பிரதமர் ஆக வாய்ப்பு கிடைத்த பொழுதும் அதை மறுத்தார். தபோவனத்து முனிவர் போல வாழ்ந்த அவர் இதே நாளில் மரணம் அடைந்தார்...


Engr Sulthan

No comments:

Post a Comment