Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, August 8, 2012

நோன்பு கால சமையல்-6 அரபியன் முர்தபா

அரபியன் முர்தபா:
தேவையான பொருட்கள்
  • மைதா - 1/2 கிலோ
  • நெய் - 2 ஸ்பூன்
  • சோடா உப்பு – சிறிதளவு
  • வெங்காயம் - 2
  • கேரட் - 2
  • உருளை கிழங்கு - 1
  • இறைச்சி – கால் கிலோ
  • முட்டை - 3
  • பச்சை மிளகாய் - 1
  • பச்சை பட்டாணி - 1 கப்
  • கரம் மசாலா - 1ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்\
  • கொத்தமல்லி-கொஞ்சம்
  • எண்ணெய் - தே.அளவு
  • உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
  • மைதா மாவில் உப்பு, சோடா உப்பு போட்டு நெய்யை சூடாக்கி ஊற்றி தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து தனியாக வைக்கவும்.
  • ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி முதலில் பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் உருளை கிழங்கை போட்டு கொஞ்ச நேரம் வதக்கவும்.
  • பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இறுதியாக கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், வேக வைத்த பட்டாணி,இறைச்சி(கீமா) மற்றும் உப்பு சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
  • மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதில் எண்ணெய் தடவி வைக்கவும்.முட்டைகளை நன்கு அடித்து கலக்கி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்..
  • ஒரு உருண்டை மாவை எடுத்து அதை சதுர வடிவில் ரொட்டி போல பரப்பி, அதன் நடுவில் செய்து வைத்திருக்கும் அடக்கத்தை கொஞ்சம் ரொட்டி முழுவதும் பரவலாக பரப்பி வைக்கவும்.
  • அதன் மேலே கலக்கி வைத்திருக்கும் முட்டையை கொஞ்சம் ஊற்றவும்.
  • பின் கலவை வைத்த ரொட்டியை நான்காக சதுர வடிவில் மடித்து. பின் அவற்றை எடுத்து சூடாக்கிய தவாவில் கொஞ்சம் எண்ணெய் தடவி இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். இதை சாப்பிடுவதற்கு தோதாக கத்தியால் குறுக்கும் நெடுக்குமாக கீறி விடவும்.
  • அதன் மேல் கொஞ்சம் நறுக்கிய கொத்தமல்லித் தூவி பரிமாறவும். இதோ சுவையான அரபியன் முர்தபா ரெடி.
  • இந்த முர்தபாவை நோன்பு திறந்த பிறகு இரவினில் இரவு சாப்பாடாக சாப்பிடலாம்.

    குறிப்புகள்: மெஹர் சுல்தான்

நோன்பு கால சமையல்-7 சுவையான மீன்வடை

சுவையான மீன் வடை
மீன் வடையின் சுவை அலாதியானது. அதிகம் முள் இல்லாத மீன்தான் வடை செய்ய ஏற்றது
தேவையான பொருட்கள்
மீன் துண்டுகள் - 500 கிராம்
முட்டை - 1உருளைக்கிழங்கு - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் - 3உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
வடை செய்முறை
மீனை கழுவி சுத்தம் செய்து வானலியில் சிறிதளவு நீர்விட்டு வேக வைக்கவும். பின்னர் அதை எடுத்து முள், தோல் நீக்கி நன்கு பிசையவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக வெட்டவும்.
மீன், உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, முட்டை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். எண்ணெயைக் காய வைத்து சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும். ருசியான மீன் வடை தயார். இதை தோசைக்கல்லில் தட்டி வைத்து கட்லெட் போல செய்யலாம். சுவை சூப்பராக இருக்கும்.
குறிப்புகள்: மெஹர் சுல்தான்

நோன்பு கால சமையல்-8 இறால் பஜ்ஜி

இறால் பஜ்ஜி
· தேவையான பொருட்கள்
  • இறால் - 10
  • கடலை மாவு - ஒரு கப்
  • மிளகாய் பொடி அரை தேக்கரண்டி
  • எலுமிச்சைச்சாறு -அரை தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு கொஞ்சம்
  • முட்டை - ஒன்று
  • சூடான எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
  • ரெட் கலர்=கொஞ்சம்
  • உப்பு - தேவைக்கேற்ப
  • எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
  • இறாலை சுத்தம் செய்து கழுவி நீளவாக்கில் இரண்டாக வெட்டி கொள்ளவும்.
அடித்தமுட்டையில் மிளகாய் தூள்,, உப்பு, இஞ்சி,பூண்டு விழுது,எலுமிச்சை சாறு, கொஞ்சம் சூடான எண்ணெய், இவற்றை ஒன்றாக கலக்கி, இறாலை அதில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்..
  • கடலை மாவில் உப்பு,கொஞ்சம் மிளகாத்தூள், ரெட் கலர் சேர்த்து பஜ்ஜிக்கு கரைப்பது போல் கலக்கி கொஞ்ச நேரம் வைக்கவும்.
  • பிறகு எண்ணெயை சூடாக்கி தீயை மிதமாக வைத்து ஒவ்வொரு இறாலாக முக்கி எடுக்கவும்.
  • முட்டை சேர்ந்திருப்பதால் இறால் நன்கு உப்பி வரும்..
  • இதோ சூடான இறால் பஜ்ஜி நோன்பு திறக்கும் போது சாப்பிட ரெடி.
குறிப்புகள்:மெஹர் சுல்தான்

நோன்பு கால சமையல்-9 சூப்பர் பாயா

  • சூப்பர் பாயா
(படம்: நன்றி என் இனிய இல்லம்)
தேவையான பொருட்கள்
• ஆட்டுக்கால் – 4
• வெங்காயம் - 2 (பெரியது)
• தக்காளி - 2 (பெரியது)
• இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
• கரம் மசாலா - கால் தேக்கரண்டி
• மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
• சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
• மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
• மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
• மிளகாத் தூள் - ஒரு தேக்கரண்டி
• பச்சை மிளகாய் - 2
• கொத்தமல்லி,கறிவேப்பிலை - கொஞ்சம்
• துறுவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி
• முந்திரி பருப்பு - கொஞ்சம்
• மைதா மாவு - 2 மேசைக்கரண்டி
• எண்ணெய்,உப்பு – தேவைக்கு
செய்முறை:
  • வெங்காயம், தக்காளி, கொத்த மல்லியை நறுக்கி கொள்ளவும். தேங்காய் மற்றும் முந்திரிப்பருப்பை நன்றாக விழுதாக அரைத்து வைக்கவும்.
  • துண்டுகளாக நறுக்கிய (ஒரு காலை மூன்றாக வெட்டலாம்.கடைக் காரரே வெட்டிக் கொடுப்பார்) ஆட்டுக்காலை கழுவி குக்கரில் போட்டு நறுக்கின வெங்காயம், தக்காளி, மல்லிக்கீரை, மசாலாத்தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • கொதி வந்த பின்பு குக்கரை மூடி வெயிட் போட்டு 4-5 விசில் வந்த பின்பு அடுப்பை குறைத்து வைக்கவும். குறைந்தது அரை மணி நேரமாவது வேக விட வேண்டும்.கால் நன்கு வெந்ததும் அதனுடன் அரைத்த தேங்காய், முந்திரிபருப்பு விழுதை சேர்க்கவும்.
  • சிம்மில் வைத்து கால் மணி நேரம் கொதிக்க விடவும்.தேங்காயின் பச்சை வாடை போனதும் குழம்பு கொஞ்சம் கெட்டியாக கொழ கொழ பருவத்தில் இருக்கும்.
  • பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலையை வதக்கி கொட்டவும்
  • சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி.
  • இதை இடியாப்பம், ஆப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆஹா அமிர்தமாக சுவைக்கும். நோன்பு காலங்களில் இடியாப்பம்,ஆப்பம் போன்றவைகளை வீட்டில் செய்வது சற்று சிரமமாகத் தோன்றும். தரமான ரெடிமேட் இடியாப்பம் இப்போது எல்லா இடங்களிலும் கிடைக்கிரது. அதனை வாங்கி உபயோகித்துக் கொள்ளலாம்.
குறிப்புகள்: மெஹர் சுல்தான்

நோன்பு கால சமையல்-10 ஸ்ட்ராபெர்ரி டேங் கடற் பாசி

  • ஸ்ட்ராபெர்ரி டேங் கடற் பாசி
  • தேவையான பொருட்கள்:
கடற்பாசி – தேவையான அளவு
ஸ்ட்ராபெர்ரி டேங்க் பவுடர் - 2 டே.ஸ்பூண்
சர்க்கரை – 3 டே.ஸ்பூண்
· தண்ணீர் - 2 கப்
செய்முறை
  • இரண்டு கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் கொதி வந்ததும்,அதில் கழுவிய கடற்பாசியை போடவும்.
  • கடற்பாசி கரைந்து வரும் போது அதில் கொஞ்சம் தண்ணீரில் டேங்க் பவுடரை கரைத்து சேர்க்கவும்.அதனுடன் சர்க்கரையும் சேர்த்து கொதிக்க விடவும். அதை அகன்ற தட்டினில் ஊற்றி ஆற விட்டு பின் ஃபிரிட்ஜில் அது நன்கு உறையும் வரை வைத்திருக்கவும். பின் வேண்டிய மாதிரி வேண்டிய சைஸில் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
இப்போது டேங்க் பவுடர் பலவிதமான Flavour களில் கிடைக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு flavour ஆக சேர்த்துக் கொள்ளலாம்

குறிப்புகள்: மெஹர் சுல்தான்

நோன்பு கால சமையல்-11 ஓட்ஸ் நோன்பு கஞ்சி

ஓட்ஸ் நோன்பு கஞ்சி


தேவையான பொருள்கள்:
----------------------------------
ஓட்ஸ்-அரை கப்
தேங்காய் விழுது-1டீஸ்பூன்
மிக்ஸ் வெஜிடபில்-கால் கப்
இஞ்சி,பூண்டு-அரை டீஸ்பூன்(விழுது)

பூண்டு-3பல்வெங்காயம்-ஒன்று
தக்காளி-ஒன்று
பச்சை மிளகாய்-இரண்டு
புதினா,கொத்த மல்லி-சிறிதளவு
எண்ணை-2டீஸ்பூன்
மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன்
மிளகாய் தூள்-அரை டீஸ்பூன்
கரம் மசாலா-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
செய்முறை:
----------------

தக்காளி,வெங்காயம், பச்சை மிளகாய்,பூண்டு
எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை சூடுபடுத்தி அதில் எண்ணை விட்டு
வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கவும் பின் தக்காளி,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும் எல்லாம் நன்கு
வதங்கியதும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை
வாசம் போகும் வரை வதக்கவும்.

அதனுடன் அனைத்து தூள் களையும் சேர்த்து வதக்கவும்
பின் தேங்காய் விழுது, வெஜிடபில்,உப்பு சேர்த்து கிளறவும்
பிறகு அரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
நன்கு கொதித்ததும் ஓட்ஸ் போட்டு கொதிக்க விடவும்
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து வெஜிடபில் வெந்ததும்
புதினா,மல்லி தூவி இறக்கவும்.

சுவையான ஓட்ஸ் நோன்பு கஞ்சி ரெடி.
இணையத்திலிருந்து
Engr.Sulthan

நோன்பு கால சமையல்-12 நேந்திரம் பழ சாண்ட்விட்ச்

நேந்திரம் பழ சாண்ட்விட்ச்
தேவையானவை: நேந்திரம் பழம் - ஒன்று, பொடித்த வெல்லம் - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: வெல்லத்தை கரைத்து வடிகட்டவும். இதனுடன் நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து பூரணம் போல சுருள கிளறி இறக்கவும். நேந்திரம் பழத்தின் தோலை நீக்கி நீளவாக்கில் இரண்டாக வெட்டவும். ஒரு பாதியின் மீது பூரணத்தை தடவி, மேலே இன்னொரு பாதியை வைத்து மூடி சாண்ட்விச் போல் பரிமாறவும்.
இணையத்திலிருந்து மெஹர் சுல்தான்...

நோன்பு கால சமையல்-13 பழம் பொரிச்சது

பழம் பொரிச்சது
தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், நேந்திரம் பழம் (முழுக்க கனியாதது) - ஒன்று, சர்க்கரை - ஒரு கப், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, சீரகம், உப்பு - சிறிதளவு.

செய்முறை: நேந்திரம் பழத்தை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கவும். மைதா மாவை சலித்து உப்பு, சீரகம், சர்க்கரை சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். எண்ணெயை காய வைத்து, கரைத்து வைத்துள்ள கலவையில் நறுக்கிய பழத் துண்டுகளைத் தோய்த்து பொரித்து எடுக்கவும்.

இணையத்திலிருந்து மெஹர் சுல்தான்

நோன்பு கால சமையல்-14 ரிச் ஃபுரூட் சலாட்

ரிச் ஃபுரூட் சலாட்
 
 
 
 
தே.பொருட்கள்
கஸ்டட் பவுடர் - ஒரு மேசை கரண்டி முழுவதும்
பால் - இரண்டு டம்ளர்
கண்டென்ஸ்ட் மில்க் - ஒரு சிறிய டின்
பாதம் - முன்று
முந்திரி - முன்று
சாப்ரான் - நாலு இதழ்
பழங்கள்
பச்சை திராட்சை - ஆறு
கருப்பு திராட்சை - ஆறு
பப்பாளி பழம் - அரைகப்
கிரீன் பியர்ஸ் - கால் கப்
ஆப்பிள் - கல் கப்
ஸ்ட்ராபெர்ரி - ஆறு
ஐஸ்கிரீம் - ஏதாவது இரண்டு (அ) முன்று பிளேவர்கள்

செய்முறை
1.பழங்கள் ரெடி மேட் டின்னைஐ விட பிரெஷாக இருந்தால் நல்ல இருக்கும்.
2.பாலை சாப்ரான் போட்டு காய்ச்சவும். கால் கப் தண்ணீரில் கஸ்டட் பவுடரை கரைத்து பாலுடன் சேர்த்து மீண்டும் காய்ச்சவும்.காய்ச்சும் போது கை விடாமல் இரண்டு நிமிடம் தொடர்ந்து காய்ச்சி இரக்கி ஆற வைக்க வேண்டும்.
3.ஆறிய கஸ்டடை பிரிட்ஜில் நல்ல குளிரவிடவும்.
4.முந்திரியை பட்டரில் வருத்து வைக்கவும், பாதத்தை பொடியக அரிந்து (கொர கொரப்பாக) அதையும் பட்டரில் வருத்து கொள்ளவேண்டும்.
5.பழங்களை நல்ல பொடியாக அரிந்து பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
6.சாப்பிடும் நேரத்தில் பிரெஷாக கஸ்டடில் கண்டெண்ஸ்ட் மில்க் கலந்து முன்று அல்லது நான்கு சேலட் கப்பு களில் ஊற்றி, அதன் மேல் ஒவ்வொரு கப்பிலும் ஒரு முந்திரி, சிறிது பாதம் தூவ வேண்டும்.
7.பிறகு பொடியாக அரிந்து வைத்துள்ள பழங்களை ஒன்றாக கலந்து முன்று மேசை கரண்டி அளவு போட்டு மேலே முன்று அல்லது இரண்டு பிளேவர் ஐஸ்கிரீமை வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
8.ஐஸ்கிரீம் ஸ்ட்ரபெர்ரி , சாக்லேட் பிளேவர் என்றால் எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

குறிப்பு: முதலே பழங்களை காய்ச்சிய கஸ்டடில் போடு வைத்து விட்டால் சாப்பிடும் போது கருத்து போய்விடும். ஆகையால் பழங்களை சாப்பிடும் போது போட்டு கலக்கி கொண்டால் போதும்.மாம்பழம், வாழைபழம் கூட சேர்க்கலாம். நோன்பு நேரத்தில் வாஙகும் பழங்கள் சில நேரம் புளிப்பாகிவிடும் அதை கூட இப்படி செய்யலாம். பார்டிகளுக்கு வைத்தால் நல்ல ரிச் லுக் கிடைக்கும்.

நான்கு நபர்கள் சாப்பிடலாம்.
இணையத்திலிருந்து மெஹர் சுல்தான்

நோன்பு கால சமையல்-15 டிப்ஸ்!

நோன்புகால சமையல் டிப்ஸ்!
 
1. நோன்பு என்றதும் முதலில் நினைவுக்கு வருவது நோன்பு கஞ்சி தான். இதற்கு தேவையான அரிசி, பாசி பருப்பு, வெந்தயம் போன்றவற்றை முதலே திரித்து கலந்து வைத்து கொள்ளுங்கள். மொத்தமாக சிக்கன் (அ) மட்டன் கீமாவை அரை கிலோ அளவிற்கு தாளித்து வைத்து கொள்ளுங்கள். தினம் தாளித்த கீமாவை தேவைக்கு போட்டு கொதிக்க விட்டு கலந்து வைத்துள்ள அரிசியை தேவைக்கு ஊறவைத்து செய்து கொள்ளலாம். இல்லை கஞ்சி மொத்தமாக முன்று நாளைக்கு ஒரு முறை தயாரித்து வைத்து கொள்ளலாம்.
2. எண்ணையில் பொரிக்கும் அயிட்டத்தை கடைசி நேரத்தில் பொரிக்காதீர்கள். அது அவசரத்தில் கடைசி நேரத்தில் பொரிக்காதீர்கள்.பொரித்த எண்ணையை மறுநாள் சுடும் போது அதில் தண்ணீர் படாமல் முடிவைகக்வும். மறு நாள் பொரிக்கும் போது அதை வடி கட்டி கொள்ளுங்கள்.லேசாக தண்ணீர் பட்டாலும் அது உங்கள் முகத்தில் தான் தெரிக்கும். இப்படி ஒருவருக்கு முன்பு ஆகி இருக்கு கடைசி நேரத்தில் அவசரமா பொரிக்கும் போது மேலே தெரித்து உடனே அந்த நேரத்தில் ஹாஸ்பிட்டல் போய் இருக்கிறார்கள். குழந்தையை வைத்து கொண்டு செய்பவர்கள் ரொம்ப உஷாராக இருக்கவும்.நோன்பு நேரத்தில் இந்த டென்ஷன் வேறு தேவையா?ஒரு நாள் பொரித்து விட்டுஅந்த எண்ணையை முன்று நாட்களுக்குள் முடித்து விடுங்கள்.
3. வடைக்கு மொத்தமாக முன்று நாளைக்கு சேர்த்து அரைத்து கை படாமல் எடுத்து முன்று பாகமாக பிரித்து வையுங்கள்.
4. சுண்டல் வகைகள் நிறைய செய்யலாம். அதையும் அரை கிலோ அளவில் ஊறவைத்து வேக வைத்து வைத்து கொண்டால் தேவைக்கு அன்றாடம் தாளித்து கொள்ளலாம்.
5. பாசி பருப்பு இனிப்பு சுண்டர். கொண்டைகடலை கருப்பு மற்றும் வெள்ளை சுண்டல், வேர்கடலை அவித்தும் சாப்பிடலாம்.
6. சோமாஸ், க‌ட்லெட் ச‌மோசா வ‌கைக‌ளை முன்பே த‌யாரித்து பிரீஜ் செய்து வைத்து கொள்ள‌லாம்.
7. ஜூஸையும் இர‌ண்டு நாட்க‌ளுக்கு சேர்த்து க‌ரைத்து வைத்து கொள்ள‌லாம். இத‌னால் நேர‌த்தை மிச்ச‌ ப‌டுத்தி கொள்ளலாம்.
8. கடல் பாசி ஒரே வகையில் செய்யாமல் நல்ல கலர் புல்லாக செய்து வைத்தால் பிள்ளைகளுக்கு நோன்பு நேரம் ரொம்ப பிடிக்கும், அதை செய்து அவர்களை கட் பண்ண்ண சொல்லுங்கள்.
9. வ‌யிறு கேஸ் பிராப்ள‌ம், அல்ச‌ர் உள்ள‌வ‌ர்க‌ள். வெள்ளை க‌ஞ்சி பூண்டு , தேங்காய் பால் சேர்த்து செய்து குடிக்க‌வும்.
10. தின‌ம் ஜ‌வ்வ‌ரிசி பாயாச‌ம், க‌ஞ்சி செய்து குடித்தால் அல்ச‌ர், வ‌யிறு பிராப்ள‌ம் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு ரொம்ப‌ இதமாக‌ இருக்கும், குளிர்ச்சியாகவும் இருக்கும். இல்லை ஜ‌வ்வ‌ரிசியை ஊற‌வைத்து வேக‌ வைத்து தின‌ம் பாலில் சேர்த்தும் குடிக்க‌லாம்.
11. பிரெஷ் பழ ஜூஸ்கள் தயாரித்து குடித்தால் உடல் தெம்பாக இருக்கும், புருட் சேல‌டும் கூட‌ அடிக்க‌டி செய்து சாப்பிட‌லாம்.
12. நோன்பு க‌ஞ்சியும் ஒரே மாதிரியாக‌ செய்யாம‌ல் சிக்க‌ன் க‌ஞ்சி, ம‌ட்ட‌ன் க‌ஞ்சி, வெள்ளை க‌ஞ்சி, ஸ்வீட் கார்ன் சிக்க‌ன் சூப், த‌க‌காளி சூப், பால‌க் சூப், ஓட்ஸ் சூப் என்று ப‌ல‌ வ‌கையாக‌ செய்து குடிக்க‌லாம்.
13. ப‌ஜ்ஜிக்கு காய் க‌ளை முத‌லே அரிந்து பிரிட்ஜில் வைத்து கொள்ள‌வும். இது சுடும் போது ரொம்ப‌ வ‌ச‌தியாக‌ இருக்கும். ப‌ஜ்ஜி யில் ப‌ல‌ வித‌மாய் சிக்க‌ன் ப‌ஜ்ஜி, வெங்காய‌ம், த‌க்காளி வெள்ள‌ரி, வாழக்காய், பேபி கார்ன் , க‌த்திரிக்காய் என்று ப‌ல‌ வித‌மாக‌ ப‌ஜ்ஜி செய்து சாப்பிட‌லாம்.
14. ப‌கோடா செய்யும் போது அதில் காய் க‌றிக‌ள் ம‌ற்றும் இஞ்சி சேர்த்து கொள்ளுங்க‌ள்.இது நெஞ்சி கரிக்காமல் இருக்கும், வழக்கம் போல் பூண்டும் தட்டி போட்டு கொள்ளுங்கள்.
15.அப்பளம் , வத்தல் கூட கொஞ்சம் அதிகமா பொரித்து எண்ணை வடிந்ததும் அதை ஒரு கவரில் வைத்து பிரிட்ஜில் வைக்கலாம்.
16. லோ பிரெஷர் உள்ளவர்கள் பிரெஷ் ஆரஞ்ச் ஜூஸில், உபபு ஒரு சிட்டிக்கை, குளுக்கோஸ் சேர்த்து குடிக்கவும், அதே போல் லெமன் ஜூஸிலும். இது நல்ல எனர்ஜியை கொடுக்கும். அடிக்கடி மயக்கம் வருவதை த‌டுக்கும்.
17 .ஆள்வள்ளி கிழங்கு (மரவள்ளி) , சர்க்கரை வள்ளி கிழங்கு அவித்து சாப்பிடலாம் அதில் சர்க்கரை , நெய், தேங்காய் சேர்த்து உருண்டை பிடித்தும் சாப்பிடலாம்.
18. வெங்காய பஜ்ஜி செய்யும் போது வெங்காயத்தை மாவு கலவையில் முக்கியதும் பிஞ்சி போகும் அதற்கு வெங்காயத்தை முதலே வட்ட வடிவமாக அரிந்து பிரிட்ஜில் வைத்து விடுங்கள். மாலை பொரிக்கும் போது நல்ல கிரிப்பாக இருக்கும், இதே போல் வாழக்காய், மற்றும் உருளையையும் செய்யலாம். பஜ்ஜியில் கண்டிப்பாக பூண்டு பொடி (அ) இஞ்சி பூண்டு பேஸ்ட் (அ) பெருங்காயப்பொடி சேர்த்து செய்யவும். வயிறு உப்புசம் ஆகாது.
19. தினம் ஜூஸ் குடிப்பதால், பழங்கள் சாப்பிடுவதால் தொண்டை கட்டும், சிலருக்கு தொண்டை கர கரப்பு ஏற்படும், தராவீஹ் தொழும் போது கனைத்து கொண்டே இருப்பார்கள், அதற்கு சுக்கு, ஏலம், கிராம்பு, மிளகு தட்டி போட்டு டீ குடிக்கலாம். இல்லை இதை பொடித்தும் டீ தூளுடன் கலந்து கொள்ளலாம்.
20.கடல் பாசி செய்து ஆறவைக்கும் போது காய்ச்சியதும் சின்ன தட்டில் ஊற்றி மேல கீழ கொட்டுவதை விட இப்படி ஒரு பெரிய சட்டியில் காய்ச்சி ஆறவத்து குளிர வைக்கலாம். ஆறி கட்டி ஆகி குளிர்ந்ததும் துண்டுகள் உடையாமல் தனித்தனியாக எடுக்க வரும்.
21. தினம் செய்யும் கஞ்சிக்கு அரிசியை பொடித்து வைத்து கொள்ள வேண்டும் அதன் அளவு ஒரு கிலோ அரிசியை மிக்சியில் நன்கு பொடித்து கால் கிலோ அளவிற்கு பச்ச பருப்பை கருகாமல் வருத்து , ஒரு மேசை கரண்டி அளவிற்கு வெந்தயம் சேர்த்து கலந்து வைக்கவும்.தினம் தேவைக்கு அரை டம்ளர் ஒரு டம்ளர் என்று எடுத்து செய்து கொள்ளலாம்.
22. சமோசா, ஸோமாஸி கட்லெட் போன்றவற்றை அதிகமாக செய்து பிரிட்ஜில் ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும், ஒரு மணி நேரம் கழித்து அது நல்ல பிரீஜ் ஆகி இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து ஒரு கவரில் அல்லது கண்டெயினரில் போட்டு வைத்து கொள்ளலாம். நோன்பிற்கு பொரிக்கும் சமையத்தில் அரை மணி நேரம் முன் எடுத்து ஒரு தட்டில் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் அடுக்கி வைத்து ஐஸ் விட்டதும் பொரித்து கொள்ளலாம்.
23. இஞ்சி பூண்டு பேஸ்ட் எல்லாவகையான அசைவ சமையலுக்கும் தேவைபடும், அது ஒரு கிலோ இஞ்சிக்கு, 600 கிராம் பூண்டு சேர்த்து அரைத்து லேசாக உப்பு தூவி ஒரு பெரிய பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளலாம். சில பேருக்கு இஞ்சி பூண்டு அரைத்து வைத்தால் பச்சையாகிவிடும் அது பூண்டு அதிகம் சேர்த்து இருந்தால் அப்படி ஆகும்.
24. தினம் ரொட்டி , சப்பாத்தி பரோட்டா சாப்பிடுபவர்கள், மாவு குழைத்து உருண்டைகள் போட்டு இப்படி மாவு தூவி டைட்டான கன்டெயினரில் போட்டு இப்படி வைத்து கொண்டால் சுடும் போது எடுத்து சுட்டு சாப்பிட்டு கொள்ளலாம். ரொம்ப ஈசியாக இருக்கும் தண்ணீர் விடாமல் இருக்கும்.
25.சிலர் சகருக்கு சாப்பிட சாதம் பிடிக்காது அவர்கள் இது போல் மொத்தமாக ரொட்டியை அடுக்கு போட்டு லேசாக எண்ணையில்லாமல் இரண்டு பக்கம் திருப்பி போட்டு ஆறவைத்து மொத்தமாக அடுக்கிவைத்து கொள்ளலாம். தேவைக்கு எடுத்து எண்ணை விட்டு சுட்டு சாப்பிடவும்.
26. நோன்பில் சகரில் ஈசியாக சாப்பிட்டு முடிக்க கட்டு சாதம் (லெமென் ரைஸ், புளி சாதம், லைட் மசாலா கொடுத்து பிரியாணி, தக்காளிசாதம், தயிர் சாதம், மோர்குழம்பு, ரசம் வகைகள் சேமியா ) இதுபோலும் செய்து சாப்பிடலாம்.
27. சிலர் மீதியான சாதத்தில் கஞ்சி செய்வார்கள் அது அந்த அளவிற்கு டேஸ்ட் வராது , அரிசி பொடித்து நொய்யில் போடுவது தான் நல்ல இருக்கும்.
28. தினம் ரசம் செய்ய, புளி குழம்பு செய்ய புளி பேஸ்ட் செய்து பிரீஜ் செய்து வைத்து கொள்ளுங்கள், தேவைக்கு உடனே இரண்டு முன்று கியுப்ஸ் எடுத்து போட்டு கொள்ளலாம்.புளி பேஸ்ட் செய்வது (கால் கிலோ அளவிற்கு புளி எடுத்து குக்கரில் முன்று நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு இற‌க்குங்கள் ஆறியதும் கரைத்து வடிகட்டி ஐஸ்கியுப்கள் அல்லது சின்ன கவர்களில் ஒரு நாளைக்கு தேவையான அளவை கட்டி வைத்து கொள்ளலாம்.
29. குருமா, கஞ்சிக்கு தினம் தேங்காய் பால் தேவைபடும் அதற்கு தேங்காய், முந்திரி பாதம் சேர்த்து அரைத்து ஐஸ் கியுபுகளாக்கி பிரீஜரில் வைத்து கொண்டால் வேலை சுலபம். வெளி நாடு களில் தேங்காய் பொடி கிடைக்கிறது.
இணையத்திலிருந்து மெஹர் சுல்தான்
Engr.Sulthan

நோன்பு கால சமையல்-17 கடல் பாசி - ரூஃப் ஹப்சா

கடல் பாசி - ரூஃப் ஹப்சா
தேவையான‌ பொருட்க‌ள்
கடல் பாசி = 10 கிராம்
தண்ணீர் = முன்று டம்ளர்
ரூ ஆப் ஷா = ஒரு குழி கர‌ண்டி
சர்க்கரை = தேவையான அளவு
பாத‌ம் , பிஸ்தா = வேண்டிய நட்ஸ் வகைகள் = ஒரு மேசை கரண்டி

செய்முறை
1. ஒரு வாயகன்ற சட்டியில் முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி கடல்பாசியும் சேர்த்து + சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
2. நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும்.
3. நன்கு கொதித்து கடல் பாசி கரைந்து தண்ணீர் தெளிய ஆரம்பிக்கும் போது சட்டியை அடுப்பில் இருந்து இரக்கவும்.வடிகட்டி கொள்ளவும்.மீதி அதில் தங்கும் கடல் பாசியை மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடலாம்.
4. இப்போது ரூ ஆப் ஷா சேர்த்து, ந‌ட்ஸ் வ‌கைக‌ளை பொடியாக‌ தூவி ஒரு த‌ட்டில் ஊற்றி ஆற‌வைத்து பிரிட்ஜில் வைத்து செட்டாக்க‌வும்.
5. வேண்டிய‌ வ‌டிவில் க‌ட் செய்து சாப்பிட‌வும்.
குறிப்பு: இந்த கடல்பாசியை தேங்காய் உடைத்த தன்ணீர், இளநீர், ஜவ்வரிசி,டேங்க்,மற்றும் ரஸ்னா ஜுஸ் பவுடர்கள், பால் சேர்த்து பல வகையாக தயாரிக்கலாம்.
அதில் பழங்கள் போட்டு செய்தால் இன்னும் சுவை கூடும்.கலர்புல்லாக இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
வயிற்று புண் மற்றும் வாய் புண்ணிற்கும் நல்லது.
நோன்புகாலத்தில் உடம்பு ரொம்ப டிரையாகி வாயில் வெடிப்புகள் வரும் அது சூட்டினால் வருவது அதற்கும் இது ரொம்ப நல்லது.
இணையத்திலிருந்து மெஹர் சுல்தான்
Engr.Sulthan

நோன்பு கால சமையல்-18 பாதாம் ஃபிர்னி

பாதாம் ஃபிர்னி

இனிப்பு வகைகளில் இந்த பிர்னி சத்தானது, சுவையானது. இந்த ரக இனிப்புக்களின் பிறப்பிடம் ஜம்மு - காஷ்மீராகும். பார்த்த மாத்திரத்தில் நாக்கில் எச்சிலை ஊற வைக்கும் மணமும் சுவையும் கொண்ட பிர்னி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக் கூடியது. பண்டிகை நாட்களிலும், விருந்தினர் வருகையின்போதும் பரிமாறிப் பாராட்டைப் பெறலாம்.
தேவையானப் பொருட்கள்:
பாஸ்மதி அரிசி
150 கிராம்
சர்க்கரை 200 கிராம்(அல்லது தேவைக்கேற்ப)
கிரீம் மில்க் (அ) சுண்டக்காய்ச்சிய பால் 400 மில்லி
மில்க் மெயிட் 100மி
பாதாம் பருப்பு 25 (எண்ணிக்கை
முந்திரிப்பருப்பு 15
பிஸ்தாப்பருப்பு 100கி
தண்ணீர் 500மி.
ஆயத்தம்:
1. பாஸ்மதி அரிசியக் களைந்து 20 நிமிடம் ஊறவிட்டு நீரை வடித்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
2. மூன்று பருப்புகளையும் 10 நிமிடம் ஊற வைத்து வடிய விட்டு, பாதாம் பிஸ்தா இரண்டையும் தோல் நீக்கவும்.
3. மூன்று பருப்புகளிலும் பாதியை எடுத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
4. மீதியை மெல்லிய இழைகளாக கத்தியால் சீவிக்கொள்ளவும்.
5. ஒரு ஸ்பூன் நெய்யில் பருப்பு இழைகளை 2 நொடிகள் பிரட்டி எடுக்கவும்.

செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள அரிசியையும், நீரையும் கலந்து அடுப்பை மிதமான தணலில் வைத்து விடாமல் கட்டித்தட்டாமல் மாவு வேகும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.கொஞ்சம் விட்டாலும் கட்டியாகிவிடும். மாவு வெந்து இறுகி வரும்போது பால்,அரைத்துவைத்துள்ள விழுது, மில்க் மெயிட் எல்லாம் சேர்த்து கிளறவும். மிகவும் கெட்டியில்லாமல் தளர இருக்க வேண்டும்.இரண்டு கொதிவந்ததும் சர்க்கரையைக் கலந்து கொதித்ததும் நெய்யில் புரட்டியதைக்கலந்து இறக்கவும். ஃபிர்னி மீடியம் அடர்த்தியில் இருக்க வேண்டும். சுவையான ஃபிர்னி ரெடி பிரிஜ்ஜில் வைத்து குளிர்ச்சியாகப் பரிமாற, சாப்பிடுபவர்கள் எல்லாம் குளிர்ந்து போவார்கள். பிறகு என்ன பாராட்டு மழையில் நீங்களும்தான்!

குறிப்பு
:
இதில் கொடுக்கப்பட்டுள்ள அளவு 10 பேருக்கு போதுமானது. எண்ணிக்கைக்கு ஏற்ப அளவைக் கூட்டிக்கொள்ளலாம். சிரமம் பார்க்காமல் மாவை கட்டித் தட்டாமல் கிளறுவதில் தான் சுவையே இருக்கிறது.

நன்றி: ஆர். நூர்ஜஹான்ரஹீம்

Engr.Sulthan

நோன்பு கால சமையல்-19 கார்லிக்(பூண்டு) பேஸ்ட்

கார்லிக்(பூண்டு) பேஸ்ட் :

தேவையான பொருட்கள்:



பூண்டு -10 பல்



முட்டை வெள்ளைக்கரு - 2



எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்



ஆலிவ்எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்



உப்பு, தேவைக்கேற்ப
செய்முறை:
தோல் உரித்த பூண்டு பற்களை ஆவியில் அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்
வேக வைத்த பூண்டுடன்,உப்பு,எலுமிச்சை சாறு விட்டு ப்ளெண்டரில் நன்கு மை போல் அரைக்கவும். பின் இதனுடன் எண்ணெய்,முட்டை வெள்ளைக்கரு சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை அடிக்கவும்.அவ்வளவு தான். கார்லிக் பேஸ்ட் ரெடி.பிரிட்ஜில் வைத்து தேவைப் படும் போது எடுத்து ரொட்டி, நாண், கிரில் சிக்கன் இவற்றோடு சேர்த்து சாப்பிட மிகுந்த சுவையாக இருக்கும்.
குறிப்புகள்: மெஹர் சுல்தான்