Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, August 8, 2012

நோன்பு கால சமையல்-11 ஓட்ஸ் நோன்பு கஞ்சி

ஓட்ஸ் நோன்பு கஞ்சி


தேவையான பொருள்கள்:
----------------------------------
ஓட்ஸ்-அரை கப்
தேங்காய் விழுது-1டீஸ்பூன்
மிக்ஸ் வெஜிடபில்-கால் கப்
இஞ்சி,பூண்டு-அரை டீஸ்பூன்(விழுது)

பூண்டு-3பல்வெங்காயம்-ஒன்று
தக்காளி-ஒன்று
பச்சை மிளகாய்-இரண்டு
புதினா,கொத்த மல்லி-சிறிதளவு
எண்ணை-2டீஸ்பூன்
மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன்
மிளகாய் தூள்-அரை டீஸ்பூன்
கரம் மசாலா-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
செய்முறை:
----------------

தக்காளி,வெங்காயம், பச்சை மிளகாய்,பூண்டு
எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை சூடுபடுத்தி அதில் எண்ணை விட்டு
வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கவும் பின் தக்காளி,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும் எல்லாம் நன்கு
வதங்கியதும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை
வாசம் போகும் வரை வதக்கவும்.

அதனுடன் அனைத்து தூள் களையும் சேர்த்து வதக்கவும்
பின் தேங்காய் விழுது, வெஜிடபில்,உப்பு சேர்த்து கிளறவும்
பிறகு அரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
நன்கு கொதித்ததும் ஓட்ஸ் போட்டு கொதிக்க விடவும்
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து வெஜிடபில் வெந்ததும்
புதினா,மல்லி தூவி இறக்கவும்.

சுவையான ஓட்ஸ் நோன்பு கஞ்சி ரெடி.
இணையத்திலிருந்து
Engr.Sulthan

No comments:

Post a Comment