இறால் பஜ்ஜி 
 
 
          ·         
தேவையான பொருட்கள் 
- இறால் - 10
 - கடலை மாவு - ஒரு கப்
 - மிளகாய் பொடி அரை தேக்கரண்டி
 - எலுமிச்சைச்சாறு -அரை தேக்கரண்டி
 - இஞ்சி பூண்டு கொஞ்சம்
 - முட்டை - ஒன்று
 - சூடான எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
 - ரெட் கலர்=கொஞ்சம்
 - உப்பு - தேவைக்கேற்ப
 - எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
 
 செய்முறை: 
- இறாலை சுத்தம் செய்து கழுவி நீளவாக்கில் இரண்டாக வெட்டி கொள்ளவும்.
 
 அடித்தமுட்டையில் மிளகாய் தூள்,, உப்பு, இஞ்சி,பூண்டு 
விழுது,எலுமிச்சை சாறு, கொஞ்சம் சூடான எண்ணெய், இவற்றை ஒன்றாக கலக்கி, இறாலை அதில் 
15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.. 
- கடலை மாவில் உப்பு,கொஞ்சம் மிளகாத்தூள், ரெட் கலர் சேர்த்து பஜ்ஜிக்கு கரைப்பது போல் கலக்கி கொஞ்ச நேரம் வைக்கவும்.
 - பிறகு எண்ணெயை சூடாக்கி தீயை மிதமாக வைத்து ஒவ்வொரு இறாலாக முக்கி எடுக்கவும்.
 - முட்டை சேர்ந்திருப்பதால் இறால் நன்கு உப்பி வரும்..
 - இதோ சூடான இறால் பஜ்ஜி நோன்பு திறக்கும் போது சாப்பிட ரெடி.
 
No comments:
Post a Comment