Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, December 15, 2013

பிரியாணியின் வரலாறு தெரியுமா உங்களுக்கு ?



நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரியாணியின் வரலாறு உங்களுக்கு தெரியுமா ?

பேரரசர் அக்பர் ஒரு உணவு பிரியர், அவருக்கு எப்பொழுதும் உணவு சுவையாக இருக்க வேண்டும். உணவு சுவையாக இல்லையெனில் சமையல் காரர்களை ரொம்பவும் கடிந்து கொள்வார்.


அக்பருடைய தொந்தரவு தாங்க முடியாமல் அரண்மனை சமையல் காரன், ஒருநாள் அக்பர் வேட்டைக்கு சென்று இருந்த நேரம் பார்த்து அரண்மனையை விட்டு ஓடிவிட முடிவு செய்தான்.

அரண்மனையை விட்டு கிளம்பும் நேரத்தில், அக்பர் மீது இருந்த கோபத்தில் அரண்மனை சமையல் கூடத்தில் இருந்த அரிசி, நெய், முந்திரி பருப்பு ஏலக்காய், இலவங்கம், மற்றும் எல்லா காய்கறிகளையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணியையும் ஊத்தி அடுப்பை மூட்டி விட்டு கிளம்ப தயாரானான்.

அப்பொழுதும் அவன் கோபம் தீரவில்லை அதனால் ஒரு பெரிய தட்டை வைத்து அந்த பாத்திரத்தை மூடி அதன்மேல் நெருப்பு சாம்பலை அள்ளி கொட்டி வைத்து விட்டு அரண்மனையை விட்டே ஓடி போய் விட்டான் ...

வேட்டைக்கு சென்ற அக்பர் திரும்பி வந்து பார்க்கையில் சமையல் காரன் ஓடிப் போனது தெரியவந்தது.

வேட்டைக்கு சென்று திரும்பி வந்த பசியில் ஏதாவது சாப்பிட வேண்டுமே என்ற நினைப்பில் சமையலறையை சுற்றிவந்த அக்பருக்கு, ஓடிப் போன சமையல்காரன் செய்து வைத்து விட்டுப்போன நெருப்பு சாம்பலுடன் கூடிய பெரிய பாத்திரம் தெரிந்தது.

நல்ல பசியில் இருந்த அக்பர் பாத்திரத்தின் மேல் இருந்த நெருப்பு சாம்பலை நீக்கிவிட்டு தட்டை திறந்து பார்க்கையில் நல்ல கம கமக்கும் வாசனையுடன் கூடிய அரிசி உணவு நன்கு வெந்து தம் கட்டப்பட்ட நிலையில் உண்ணுவதற்கு சரியான பக்குவத்தில் இருந்தது.

அக்பர் அந்த உணவை உண்டு விட்டு, அதன் சுவையில் மெய் மறந்து போனார்.

சமையல் காரனை.... இன்னுமா திரும்பி வரவில்லை ? இன்னுமா திரும்பி வரவில்லை ? என்று கேட்டுக் கொண்டே சாப்பிட்டார் உருதில்

பிர் ஆயா னி...... பிர் ஆயா னி என்பதாக.... அதுவே மருவி அந்த உணவின் பெயர் பிரியாணி ஆகிவிட்டது.

மேலே சொன்ன இந்த தகவல் உண்மையா பொய்யா என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்...

2 comments:

  1. vanikaththitrkum porukkum perum koottamaaka pokum poluthu soru, kari ena thaniyaaka samaiththu saappiduvathu siramamaaka irunthathu. aathalaal arisiyaiyum kariyaiyum innapira masaalakkalum ondru inaiththu BIRIYAANI seyyappattathu. ithe pol kothumai rotti matrum kari thaniyaaka samaikkaamal, kariyudan kodumai serththu kindappaduvathu HALEEM enappadum unavu இந்த தகவல் உண்மையா பொய்யா என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்...

    ReplyDelete