Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, January 8, 2014

கார்களில் வருகிறது ஆண்ட்ராய்ட்


கோடிக்கணக்கான மொபைல் பயனாளிகளின் கைகளில் உலவும் ஆண்ட்ராய்ட் சேவை இனி கார்களிலும் வலம் வர உள்ளது. இதற்காக புதிய தொழில்நுட்ப கூட்டணி அமைக்கப்பட உள்ளது.


‘திறந்த வாகன கூட்டணி’ (OAA) என்ற இந்த அமைப்பில் ஹோண்டா, ஆடி, ஜி.எம்., கூகுள், ஹுண்டாய், ந்விடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தொழில்நுட்ப சேவைகளை வழஙகுவுள்ளன. இந்தக் கூட்டணியானது புதிய கருவிகளை இயக்க உதவி புரிவதுடன், பாதுகாப்பான கார் சேவையுடன், அனைவருக்கும் எளிமையான சேவைகளை வழங்கவும் பாடுபடும்.

இந்த சேவையை வாகனங்களில் பொருத்துவதன் மூலம் தடையற்ற சாலை பயணத்துடன், பாதுகாப்பான வாகன சேவையையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். வாகனத்தில் டிஜிட்டல் வாழ்க்கை முறையை அனுபவிக்க வகை செய்யும் இந்த தொழில்நுட்பத்தை நுகர்வோர் வரவேற்கிறார்கள்.

No comments:

Post a Comment