Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, May 20, 2012

எங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி

நான் பிறந்த சீமை, வளர்ந்து வாழ்ந்து வரும் நெல்லைச் சீமை, படித்ததும் இச் சீமையில் தான். அன்று கல்லூரி நாட்களில் நெல்லை மாநகரை தினம் தினம் சுற்றி திரிந்து மகிழ்ந்த நாட்களை மறக்க முடியாது. சிந்து பூந்துறை ஆற்றுப் படிக்கட்டு, ரெட்டைப் பாலம், இன்றைய பழைய பஸ் ஸ்டாண்டு, மைசூர் கஃபே, நெல்லை லாட்ஜ், சுல்தானியா ஹோட்டல், சென்ட்ரல்,ரத்னா,பார்வதி,ராயல், லட்சுமி, பாலஸ்-டீ-வேல்ஸ் போன்ற திரையரங்குகள், நெல்லையப்பர் கோவில் அமைந்திருக்கும் நெல்லை டவுண், இரவு முழுதும் சுறு சுறுப்பாக இயங்கும் இரவு டிஃபன் கடை(ஜங்ஷனில்), இவை போன்று இன்னும் பல இடங்கள் தினமும் நான் பார்த்துப் பார்த்து ரசித்த இடங்கள். மறக்க முடியா பழைய இனிமையான நினைவுகள். பாளையில் ஜான்ஸ், ஷேவியர், சாரா டக்கர் கல்லூரிகள், அப்பா காலேஜ், இன்றும் எங்கள் சீமைக்கு மகுடம் சூட்டிக் கொண்டிருக்கின்றன.பாளை தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு எனும் பெயர் பெற்றது. இன்று சென்னையில் கொடி கட்டி பறக்கும் போத்தீஸ், RMKV போன்றோர் இந்த சீமையைச் சேர்ந்தவர்கள் தான். சரவணா பவன்,ஸ்டோர்ஸ், புகாரி குரூப் VGP போன்றோரும் நெல்லையைச் சேர்ந்தவர்கள் தான். இன்னும் எங்க ஊரைப் பர்றி சொல்லிக் கொண்டே போகலாம். தொடர்ந்து இரண்டு நண்பர்கள் நெல்லைச் சீமையைப் பற்றி எழுதிய பதிவை படியுங்கள்.

Er..சுல்தான்


எங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி

திருநெல்வேலி என்று சொன்னாலே உங்களுக்கு அல்வா என்றுதான் ஞாபகத்தில் வரும். இங்கு தயாரிக்கப்படும்அல்வாவின் சுவையே தனிதான். அதிலும் நெல்லை டவுணில் உள்ளஇருட்டுக்கடை அல்வாவிற்கு இருக்கும்
ருசியே தனிதான். அந்த கடையில் ஒரே ஒரு பல்பு மட்டும் எரிவதால் இருட்டுக்கடை என்ற பெயர். கூட்டம் அலைமோதும் அந்த கடையில் வியாபாரம் ஓஹோ. திருநெல்வேலிக்கு வருபவர்கள் இங்கே அல்வா வாங்காமல் திரும்ப மாட்டார்கள்.

திருநெல்வேலிக்கு பெயர்க்காரணம் இந்துமத நம்பிக்கையின்படி, ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன்(நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர் பெற்றதாக கூறுகிறார்கள்.

"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும்.

வற்றாத ஜீவநதிகளுள் ஒன்றான தாமிரபரணி வளம்கொழிக்கும் நெல்லைக்கு பல வரலாற்று சிறப்புகள் உண்டு. நம்நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட பல வீரர்களை வித்திட்டபூமின்னு சொல்லலாம். வீரபாண்டிய கட்டபொம்மன், கான்சாகிப், வாஞ்சிநாதன், ..சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, ஊமைத்துரை மற்றும் வரலாற்று ஏடுகளில் சொல்லப்படாதவர்களும் வாழ்ந்த ஊர்ன்னு சொல்லலாம்.

தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் பேசப்படும் வட்டாரமொழிகளில் நெல்லைத்தமிழும் பிரசித்தி பெற்றது. நெல்லையும் தூத்துக்குடியும் பிரிக்கப்பட்டாலும் இன்னும் இங்குள்ள மக்களின் சகோதரத்துவமும் பேச்சுவழக்கும் பழக்கவழக்கங்களும் ஒன்றாகத்தான் இருக்கிறன்றன.

நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தென்காசி, கடையந்ல்லூர், சங்கரன்கோவில், அம்பை (அம்பாசமுத்திரம்), சேரன்மகாதேவி, ஆலங்குளம், நாங்குநேரி, ராதாபுரம் போன்ற 10 சட்டமன்ற தொகுதிகளில் முக்கிய நகரங்கள்உண்டு.

திருநெல்வேலியும்பாளையங்கோட்டையும்இரட்டை நகரங்களாகும். திருநெல்வேலியிலும், பாளையங்கோட்டையிலும் நிறைய கல்விநிறுவனங்கள் நிறைந்துள்ளன. பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்றழைக்கப்படுகிறது.

பாளையங்கோட்டையில்புகழ்பெற்ற மத்திய சிறைச்சாலையும் உள்ளது.

நெல்லை ஜங்சனில் ஆசியாவில் முதல் ஈரடுக்கு மேம்பாலம் போக்குவரத்து சிக்கல் இல்லாமல் காக்கிறது.

இங்குள்ள மக்களில் முஸ்லிம்கள், கிருஸ்துவர்களும் பெருமளவில் இந்து சமுதாயத்தவரும் நிறைந்து காணப்படுகின்றனர். ஒரு சிலபகுதி மக்களை தவிர்த்து மற்ற அனைவரும் நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் இங்கு உண்டு. ‌பேட்டை, மேலப்பாளையம் மற்றும் சிலஊர்களில் உள்ள பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களில்திருமணமாகாத பெண்கள் தங்கள் வருங்கால வாழ்க்கைக்கு பெற்றோர் தயவை எதிர்பார்க்காமல் தம்மால் இயன்றளவுக்கு பொருளீட்டி சம்பாதிக்கின்றனர்.

நெல்லையில் சுற்றிப்பார்க்க நெல்லையப்பர் கோவில், அறிவியல் மையம், ஜூன் ஜூலை மாதங்களில் அரசு சார்பிலும் தனியாரும் பொருட்காட்சி நடத்துவார்கள். சில சமயங்களில் சர்க்கஸ்ம் நடத்துவார்கள். மக்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும். தங்களுடைய ஓய்வு நேரங்களில் இதுமாதிரியான இடங்களுக்கு செல்வார்கள். விடுமுறை நாட்களில் அருகிலுள்ள ஜங்சன் பகுதி, கோபாலசமுத்திரம் மற்றும் சேரன்மகாதேவி ஆற்றுக்கு குடும்பத்தினரோடு சென்று பொழுதை கழிப்பார்கள்.

இதுபோக பாபநாசம், குற்றாலம் அருவிகளுக்கும் மற்றைய சுற்றுலாத் தளங்களுக்கு செல்வார்கள்.

இங்குள்ள மக்களுக்கு விவசாயம் முக்கிய தொழிலாக இருந்துவருகிறது. அதெல்லாம் அப்போ... என்று சொல்லுமளவுக்கு இன்று எங்கும் விளைநிலங்கள் மனைகளாகவும் ரியல்எஸ்டேட் தொழில் செய்பவர்களின் கையில் தஞ்சம் அடைந்துள்ளது வேதனைக்குரியது. எங்கு பார்த்தாலும் அங்கே இத்தன சென்ட் நிலம் குறைவான தொகை, இங்கே இவ்வளவு தொகை என்று கூவிகூவி மக்கள் தொலைத்தொடர்பு சாதனங்களின் மூலம் விளம்பரம். காண சகிக்கலை.

இது நெல்லையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும்தான்.

நன்றி:ensaral.blogspot






திருநெல்வேலி -கொஞ்சம் விரிவாக
எங்கூரு கதை மொத்தத்தையும் இந்த கட்டுரைல சொல்லணும்கிறது தாமிரபரணி ஆத்த சொம்புக்குள்ள அடைச்சி வைக்கிற மாதிரி ஆயிடும். அதனால இப்போ சொல்ற எல்லாமே ட்ரைலரா நெனச்சுகிடுங்க. மெயின் பிச்சர ஒரு தொடரா பின்னாடி எழுதலாம்.தாமிரபரணி! பேரக்கேட்டாலே சும்மா ஜில்லுன்னு இருக்குல்ல... அதாண்ணேஎங்கூரோட முதுகெலும்பு. ஆனா அதுல மண்ணள்ளி.. இல்ல இல்ல, அதுல மண்ணெடுத்து ஆத்தையே முடமாக்கிகிட்டு இருக்காங்க பாவி பயலுவ. சரி இப்ப அந்த சோகம் எதுக்கு நாம ஊரச் சுத்தி பார்க்கலாம் வாங்க., உங்களுக்கொரு விசயம் தெரியுமா? திருநெவேலி 2000 வருஷத்துக்கு முன்னாடியே தோன்றுன ஆத்தங்கரை நாகரீகம்ணே. ஊரை பத்தி பேசுறதுக்கு பதிலா ஆத்தபத்தி பேசினாலே மொத்த ஊரும் அதுக்குள்ள வந்துரும். ஆறு போற எடம் பூரா பச்ச பசேல்னுட்டு கண்ணுக்கெட்டுன தூரம் பூராவயல் வரப்பும், வாய்க்காலுமா இருக்கும் இப்போ அதுல பாதி எடத்த ப்ளாட் போட்டு விக்கிறாங்க அது வேற கத.நம்ம மணி அண்ணனோட ரோஜா படத்துல, மதுபாலாக்காசின்ன சின்ன ஆசைன்னுபாடிக்கிட்டே ஒரு அருவில குளிக்கும்ல‌,அதான் பாணதீர்த்த அருவி. பொதிகை மலையில இருந்து விழும் பாணதீர்த்த அருவி தரை தொட்டு தாமிரபரணியா மாறுத அழக பார்த்துகிட்டே இருக்கலாம்ல. அங்கன ஒருடேம் இருக்கு வெள்ளக்காரன் கட்னது.டேம் உள்ள ஊரு பேரு காரையார்.
இங்கதான், எப்பேர்பட்ட மஞ்சக்காமாலையையும் தன்னோட மூலிகை மருந்தால குணப்படுத்தும் 100 வயசான அன்னம்மாள்பாட்டி இருந்தாங்க(இப்ப இல்ல). நான் கல்கத்தால இருந்தப்ப மஞ்சகாமாலை வந்து, அதனால ஊர் வந்து இவங்ககிட்ட மருந்து சாப்பிட்டு, அவங்க சொன்ன மாதிரி ஆத்துல ஒரு முங்கு போட்டேன். ரெண்டுமாசமாதீராம இருந்த மஞ்சக்காமாலை மருந்து சாப்பிட்ட ஒரு வாரத்துல படிப்படியா கொறஞ்சிட்டுது. அதுதாம்ணே தாமிரபரணி மகிமை.
அப்டி மலையில இருந்து கீழ எறங்குற ஆறு முதல்ல தொடுற இடம் பாபநாசம். இந்த ஊருக்கு இடப்பக்கம் 30 கிமி தள்ளி குற்றாலம் இருக்கு வலப்பக்கம் 20 கிமி தள்ளி மணிமுத்தாறு இருக்கு, அது மேல மாஞ்சோலை எஸ்டேட் இருக்கு. ஊட்டி, கொடைக்கானல் போறவங்க மாஞ்சோலை எஸ்டேட்டுக்கு போகலாம் அவ்வளவு அழகான தேயிலை தோட்டங்கள் நிறைந்த ஊர். போற பாதை செம த்ரிலிங்க இருக்கும்.

அதுல இருந்து அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, வீரவ நல்லூர், சேர்மாதேவி, கல்லூர், சுத்தமல்லி, கோபலசமுத்திரம், கருங்காடு, குன்னத்தூர், மேலப்பாளையம், குறுக்குத்துறை வழியா திருநெல்வேலி சந்திப்ப அடையுது. அங்கிருந்து சிந்துபூந்துறை, கருங்குளம், திருவைகுண்டம், ஆத்தூர் வழியா போய்புன்னக்காயலில் கடல்ல கலக்குது. நெல்லை தொடங்கி தூத்துக்குடி மாவட்டத்தில்முடியுது நம்ம ஆறு.



ஆறு பக்கத்துல இருக்கும் போது மீன்கள பத்தி கேட்கவா வேணும்! கெண்டை, கெளுத்தி,விரால்,அயிரைன்னு நிறைய வகைகள் உயிரோட கிடைக்கும். இது போக வாய்க்கால்ல மட்டும் கிடைக்க கூடிய விலாங்கு, ஆரா மீன்கள் ரொம்ப ஸ்பெஷல்.

இதுல சுத்தமல்லி ஊர்ல இருந்து 5 கிமி தள்ளி இருக்குது பேட்டை.கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் பிறந்த அந்த பேட்டை தான் எங்க சொந்த ஊர். 200 வருடங்கள் பழமை வாய்ந்த புனித அந்தோனியார்பள்ளிலதான் எட்டாம் வகுப்பு வரையும், அதற்கப்புறம் நெல்லை சாப்டர் மேனிலைப்பள்ளியிலும் படிச்சேன்.பேட்டையில காமராஜர் மேனிலைப்பள்ளி, ராணி அண்ணா பெண்கள் மேனிலைப்பள்ளி, மா.தி.தா இந்து கல்லூரி, அரசு .டி.,பக்கத்துல உள்ள பழைய பேட்டையில் மகளிர் கல்லூரி என முழுமையான படிப்பு வசதி உள்ள ஊர் பேட்டை. சுற்றியுள்ள கிராமங்கள்ல இருந்தெல்லாம் வந்து இங்கு நிறைய பேர் படிக்கிறாங்க.பேட்டைக்குள்ளேயே இருக்குற தொழிற்பேட்டையில, பல சிறிய தொழிற்சாலைகள் நடந்துகிட்டுஇருக்கு, எல்லாத்துக்கும் மேலதென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை(பேட்டை மில்) இங்கே இருக்கும் போது நல்ல பணப்புழக்கமும் இருந்துச்சு.இங்குஊதுற சங்குசத்தத்தை வச்சுத்தான் எங்கூர்ல மணியே சொல்வாங்க. இதுக்கு முந்தைய .தி.மு. ஆட்சியில அதுக்கும் சங்கு ஊதிட்டாங்க. அதுக்குபின்னாடி வந்த ஆட்சியில திறக்கிறேனாங்க. இன்னிக்கு வரைக்கும் இல்ல.மா.தி,தா இந்து கல்லூரியோட பள்ளி நெல்லை சந்திப்புல இருக்கு.மகாகவி சுப்பிரமணிய பாரதியார்படிச்ச பெருமையும் இந்த பள்ளிக்கு இருக்கு.நெல்லை நகரோடஒரே பொழுதுபோக்கு தியேட்டர்கள்தான் நீங்க இறங்குற எந்த பஸ் ஸ்டாப்பு பக்கத்துலயும் ஒரு தியேட்டர் இருக்கும். உண்மையைச் சொல்ல போனா தியேட்டரை கணக்கு பண்ணித்தான் பஸ்ஸ்டாப்பே இருக்கும்.அதுக்கு அடுத்ததா ஜங்ஷன் தாமிரபரணி ஆத்து பாலத்தை ஒட்டி மாவட்ட அறிவியல் மையம் அமைஞ்சிருக்கு. இங்கும் குழந்தைகளோட நிறைய பேர் போவாங்க. இங்குள்ள டிஜிட்டல் கோளரங்கம் பார்க்கவேண்டிய ஒன்னு.பேட்டையில இருந்து மூணுகிலோமீட்டர் தூரத்துலதான் நெல்லை டவுண், இங்கே இருக்கும் புகழ் பெற்ற நெல்லையப்பர் கோவிலை சுத்தி இருக்கிற நாலு ரதவீதியும் தான் நெல்லையோட தெற்கு உஸ்மான் சாலை. ஆரெம்கேவி, போத்தீஸ், நாவல்டி, சோனா அப்படின்னு இங்கே இல்லாத துணிக்கடைகளே இல்லை ( இப்ப ஆரெம்கேவியை வண்ணார்பேட்டைக்கு மாத்திட்டாங்க) அதுபோலவே அனைத்து தங்க நகைக்கடைகளும் இங்கதான் இருக்கு.கல்யாணம், காதுகுத்து, சடங்கு, வளைகாப்புன்னு எல்லா விசேஷத்துக்கும் சாமான் வாங்க சொந்த பந்தத்தையெல்லாம் கூட்டிட்டு படைபடையா இங்க தான் வந்து எறங்குவோம். ஒரு பட்டு எடுக்க ஊரையே கூட்டிட்டு போற பெருமையை நாங்க யாருக்காகவும் விட்டுக்கொடுத்ததே இல்ல.அப்புறம் துணிமணி, நகை நட்டெல்லாம் எடுத்துட்டு, எல்லாத்தையும் கூட்டிட்டு ஒரு ஹோட்டலுக்கு போய் டிபனோ அல்லது ஒரு டீயும் வடையுமோ வாங்கி கொடுக்கலைன்னு வைங்க. உங்க பேரு ஊரு பூரா நாறிப்போயிரும்.நெல்லை புரோட்டா சால்னாவுக்கும், சைவச் சாப்பாட்டுக்கும் ரொம்ப பேமஸ் கொறஞ்ச விலையில தரமான சாப்பாடு ஊரைச்சுத்தி கிடைக்கும். இவ்வளவு சொல்லிட்டு இருட்டுக்கடையை பத்தி சொல்லாமலா... நெல்லையப்பர் கோவிலுக்கு எதிர்த்தாப்லதான் இருட்டுக்கடை அல்வா இருக்கு. சாயந்திரம் 5 மணில இருந்து 10 மணி வரைக்கும்தான் வியாபராம் ச்ச்சே.. வியாபாரம். (பாருங்க அல்வாவப்பத்தி பேசுனா எழுத்தே வழுக்குது).இந்த கடைக்கு பேர் போர்டெல்லாம் கிடையாது. ஆனா ஊரைச்சுத்தி இருட்டுக்கடை அல்வான்னு போர்டு தொங்குற கடைகளெல்லாம் ஒரிஜினல் இருட்டுக்கடை கிடையாது. அதே போர்டு வைக்க முடிஞ்சவங்களுக்கு அல்வால அதே டேஸ்ட்ட வைக்க முடியலை.


வெள்ளையடிக்கிற கடைதான் இருட்டுக்கடை

அது போல ஜங்ஷன்ல இருக்குறசாந்தி ஸ்வீட்ஸ்லாலா கடையும் அல்வாவுக்கும் மிக்சர் ,ஸ்வீட்ஸ்க்கும் ரொம்ப பேமஸ். மொய்க்க எடம் கொடுக்காத அளவுக்கு எந்நேரமும் கூட்டம் மொச்சிக்கிட்டு நிக்கும்.
ஊரெல்லாம் சாந்தி ஸ்வீட்ஸ்ன்னு பேர் வச்ச கடைகள் இருந்தாலும் இதுதான் ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ்.
அதுமாதிரி சாந்திக்கு ஸ்வீட்ஸ்க்கு எதிர்த்தாப்ல‌ இருக்குற லட்சுமி விலாஸ் லாலா கடையிலும், அரசன் ஸ்வீட்ஸிலும் தரமான அல்வா கிடைக்கும்.
நெல்லை நகரத்துக்கு இணையா ஆத்துக்கு அந்த புறம் இருக்கிற நகரம் பாளையங்கோட்டைதென்னகத்தின் ஆக்ஸ்போர்டுங்கிற பெருமைக்குரிய நகரம். இங்கதான் நம்ம சித்ராக்கா பிறந்தாங்கங்கிறது இன்னும் சிறப்பு.
இந்த ரெண்டு நகரத்தையும் இணைக்கிற ஆத்துபாலம் வெள்ளைக்காரங்க காலத்துல நமது சுலோச்சன முதலியார் அவங்களால கட்டப்பட்டது.
நன்றி:சிநேகிதன்.blogspot

Engr.Sulthan

No comments:

Post a Comment