Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, May 20, 2012

உப்பு ரொம்ப தப்பு

உப்பு ரொம்ப தப்பு
சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சர்க்கரை என்பதே வெள்ளை நஞ்சாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் மற்றொரு வெள்ளை அபாயம் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது அது – உப்பு.
எவ்வளவு ருசியாகச் சமைத்தாலும் உப்பில்லாவிட்டால் அதை வாயில் வைக்க முடியாது என்பது உண்மைதான். அதே நேரம், உப்பு அளவுக்கு அதிகமாகும்போதும் பல உபத்திரவங்களை அளித்துவிடும். உங்கள் உடம்பில் உப்பு அதிகரித்தால், அதிகமான தண்ணீரை உடம்பு சேர்த்து வைத்துக் கொள்ள ஆரம்பிக்கும். அப்போது உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சினைகள், சிறுநீரகக்கற்கள் ஏன் பக்கவாத பாதிப்பு கூட ஏற்படும். அதிகமான உப்பு, ரத்தக் குழாய்களில் படிந்து, சீரான ரத்த ஓட்டத்துக்குத் தடையை ஏற்படுத்துவதே முக்கிய காரணம்.
இந்த அடைப்பு நீடிக்கும் போது இதய நோய்கள், மாரடைப்பு போன்ற ஆபத்துகள் அடுத்து வரும். 32 நாடுகளில் 10 ஆயிரம் பேர் அன்றாடம் உணவின் மூலம் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அன்றாடம் 6 கிராம் உப்பு அதிகமாக எடுத்துக் கொண்டாலும் அது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதைக் கண்டுபிடித்தனர். அது இதய நோய்களின் அடித்தளமாகவும் அமைகிறது என்பதை அறிந்தனர். பரம்பரை ரீதியாக இதய நோய் பிரச்சினைகள் இல்லா விட்டாலும் அன்றாட உப்பு அளவில் கவனம் வைப்பது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
உணவில் அதிகமாக உப்புப் போட்டுக் கொள்ளும் வழக்கம் எனக்கில்லையே என்று நீங்கள் கூறலாம். ஆனால் நீங்கள் சாப்பிடும் நொறுக்குத் தீனிகளில் உப்பு அதிகமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு அடிக்கடி குடும்பத்துடன் துரித உணவகங்களில் சாப்பிடும் வழக்கம் இருந்தால் அதன் மூலமும் கூடுதல் உப்பு உங்களுக்குள் செல் கிறது. உடனடி உணவுகளிலும் பேக்கிங் செய்யப் பட்டு வரும் உணவுகளிலும் அவற்றைக் கெடாது பாதுகாக்கும் ‘பிரிசர்வேட்டிவ்’ ஆக உப்பு பயன் படுத்தப்படுகிறது.
பாக்கெட் பாப்கார்ன், ஊறுகாய், சாஸ் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் உப்பு அதிகம். கடைகளில் கிடைக்கும் பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்ற வற்றில் கூட உப்பு இருக்கிறது. இப்படி பெரும்பாலான உணவுப் பொருட்களில் உப்பு சேர்க்கப்படு வதற்குக் காரணம் அது எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கும் பாதுகாப்புப் பொருள் என்பதுதான். சரி, உப்பினால் ஏற்படும் உபத்திரவங்களைத் தவிர்ப்பது எப்படி? உடம்பிலிருந்து நச்சுக் கழிவுகளை எல்லாம் வெளியேற்றும் வகையில் நிறைய தண்ணீர் குடியுங்கள்.
• காரசாரமான நொறுக்குத் தீனிகள், ஊறுகாய் போன்றவற்றைத் தவிருங்கள்.
• துரித உணவுகளைத் தவிர்த்து, வீட்டு உணவை விரும்புங்கள்.
• நிறைய காய்கறிகள், பழங்கள் சாப்பிடுங்கள். உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்தை அவை
அளிக்கும்.
• உடம்பில் தண்ணீர் தேக்கம் ஏற்படுவதால் நச்சுகளின் அதிகரிப்பை நீராவிக் குளியல் போன்றவை மூலம் போக்கலாம்.
• பேக்கிங் உணவுகளில் உப்பு சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். சோடியம் குளோரைடு என்று குறிப்பிட்டிருப்பதால் நாம் அதைக் கவனிக்காமல் போகலாம்.
• உப்பைக் குறைத்து சுவையைக் குறைக்காமல் சமைக்கும் முயற்சிகளில் ஈடுபடுங்கள். அதற்கேற்ப நறுமணப் பொருட்கள் போன்றவற்றைச் சேருங்கள்.
இணையத்திலிருந்து
Engr.Sulthan

No comments:

Post a Comment