Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, November 11, 2013

சூப்பர் பாயா


  •  
தேவையான பொருட்கள்
• ஆட்டுக்கால் – 4
• வெங்காயம் - 2 (பெரியது)
• தக்காளி - 2 (பெரியது)
• இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
• கரம் மசாலா - கால் தேக்கரண்டி

• மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
• சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
• மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
• மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
• மிளகாத் தூள் - ஒரு தேக்கரண்டி
• பச்சை மிளகாய் - 2
• கொத்தமல்லி,கறிவேப்பிலை - கொஞ்சம்
• துறுவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி
• முந்திரி பருப்பு - கொஞ்சம்
• மைதா மாவு - 2 மேசைக்கரண்டி
• எண்ணெய்,உப்பு – தேவைக்கு
செய்முறை:
  • வெங்காயம், தக்காளி, கொத்த மல்லியை நறுக்கி கொள்ளவும். தேங்காய் மற்றும் முந்திரிப்பருப்பை நன்றாக விழுதாக அரைத்து வைக்கவும்.
  • துண்டுகளாக நறுக்கிய (ஒரு காலை மூன்றாக வெட்டலாம்.கடைக் காரரே வெட்டிக் கொடுப்பார்) ஆட்டுக்காலை கழுவி குக்கரில் போட்டு நறுக்கின வெங்காயம், தக்காளி, மல்லிக்கீரை, மசாலாத்தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • கொதி வந்த பின்பு குக்கரை மூடி வெயிட் போட்டு 4-5 விசில் வந்த பின்பு அடுப்பை குறைத்து வைக்கவும். குறைந்தது அரை மணி நேரமாவது வேக விட வேண்டும்.கால் நன்கு வெந்ததும் அதனுடன் அரைத்த தேங்காய், முந்திரிபருப்பு விழுதை சேர்க்கவும்.
  • சிம்மில் வைத்து கால் மணி நேரம் கொதிக்க விடவும்.தேங்காயின் பச்சை வாடை போனதும் குழம்பு கொஞ்சம் கெட்டியாக கொழ கொழ பருவத்தில் இருக்கும்.
  • பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலையைவதக்கி கொட்டவும்
  • சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி.
  • இதை இடியாப்பம், ஆப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆஹா அமிர்தமாக சுவைக்கும். நோன்பு காலங்களில் இடியாப்பம்,ஆப்பம் போன்றவைகளை வீட்டில் செய்வது சற்று சிரமமாகத் தோன்றும். தரமான ரெடிமேட் இடியாப்பம் இப்போது எல்லா இடங்களிலும் கிடைக்கிரது. அதனை வாங்கி உபயோகித்துக் கொள்ளலாம்.
குறிப்புகள்: மெஹர் சுல்தான்

No comments:

Post a Comment