Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, February 27, 2014

ஆண்களை அதிகம் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் வழிகள்!!!


ஏறத்தாழ 6-ல் ஒருவருக்கு புரோஸ்டேட் புற்றுநோயால் தாக்கப்பட்டுள்ளதாகவும், 2012 ஆம் ஆண்டில் மட்டும் 2,41,000 ஆண்களுக்கு இந்த நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. புரோஸ்டேட் புற்றுநோய் வயதான ஆண்களுக்கு வரும் நோயாக கருதப்படுகிறது. ஆனால் தற்போது குறைந்த வயதுள்ள ஆண்களுக்கும் குறிப்பாக அமெரிக்கர்களிடம் அதிகமாக காணப்படும் நோயாக இது உள்ளது.
இந்த நோய் முதிர்ச்சி அடையாமல் இருந்தால் சரிசெய்து விடலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நோயால் தாக்கப்பட்டவர்கள் மிகுந்த வேதனையை அனுபவிப்பதாக கூறுவார்கள்.
இந்த வகை புற்றுநோய் உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையால் வரும் விறைப்பு செயலின்மை, கட்டுப்பாட்டை இழப்பது ஆகியவை பின்விளைவுகளாக வருகின்றன. அதுமட்டுமல்லாமல் புற்றுநோயின் எண்ணம் எப்போதும் மனதை சிதைய செய்துவிடும். ஆனால் ஆண்கள் முன்பே அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும், புரோஸ்டேட் நலத்தையும் கருத்தில் கொண்டால் இந்த புற்றுநோயை தவிர்க்க முடியும். இன்று முதல் ஆண்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டிய புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் சில வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

புரோஸ்டேட் புற்றுநோயை அறிய பரிசோதனை செய்தல் புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் வகையில் அவ்வப்போது புரோஸ்டேட் ஸ்பெசிபிக் ஆன்டிஜென் பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த காரியம் இன்னும் விவாதத்தில் தான் உள்ளது. ஆனால் ஆண்களும் அவர்களது உடலில் உள்ள குறைகளையும் வரப் போகும் அபாயங்களையும் தெரிந்து கொள்ளும் உரிமை உள்ளது என்றும் கருத்து நிலவுகின்றது. PSA மற்றும் DRE (டிஜிட்டல் ரெக்டல் எக்ஸாமிநேசன்) ஆகியவை எந்த வயதுடைய ஆணாக இருந்தாலும் அவர்களது உடலை பரிசோதிக்கும் சோதனைகளாகும்.
புரோஸ்டேட் புற்றுநோயை தடுப்பதற்கு நாம் இயற்கை உணவுகளை உண்ணலாம். புற்றுநோயை கொல்லும் உணவுகள் என்றும் இவற்றை சொல்லலாம். இத்தகைய காய்கறிகளை நாம் எளிய முறையில் தினசரி உணவுகளில் சேர்த்து கொள்ள முடியும். உதாரணமாக ப்ராக்கோலி, காலிஃப்ளவர், கேல் மற்றும் முட்டைகோஸ் ஆகியவை புற்றுநோயை எதிர்க்கும் சக்தி கொண்ட காய்கறிகள் என்று பல ஆய்வுகளில் நிருபணமாகியுள்ளன. இந்த காய்கறிகளில் உள்ள க்ளுக்கோசைநோலேட் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகின்றது. கந்தகம் நிரம்பிய கொண்ட இப்பொருள் உடைந்து பைட்டோ நியூட்ரியன்ட்ஸாக மாறி புற்றுநோயை தடுக்கின்றது.

புரோஸ்டேட் ஆரோக்கியமும்... இணை உணவுகளும்... 
நல்ல ஊட்டச்சத்து உள்ள உணவுகளை உணவில் இயற்கையான முறையில் சேர்த்துக் கொள்வது புரோஸ்டேட் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ளும். இதனால் பினைன் புரோஸ்டாடிக் ஹைப்பர்பிளாசியா என்று கூறப்படும் பெரிய புரோஸ்டேட் மற்றும் புரொஸ்டாடிஸ் ஆகியவை ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த வகை நோயிற்கான அறிகுறிகள் வரும் வரை காத்திருக்க வேண்டாம். இவை வரும் முன் தடுப்பதே சிறந்ததாகும்.

புரோஸ்டேட் புற்றுநோயை தூண்டும் உணவுகளை தவிர்ப்பது 

இறைச்சியை அடுப்பில் வைத்து சமைப்பதற்கு முன்பு இந்த உணவு புரோஸ்டேட் புற்றுநோயை தூண்டுமா என்று சற்று எண்ணிப் பாருங்கள். எத்தகைய உணவுகளை உண்டால் இப்புற்றுநோய் தடுக்கப்படுகின்றதோ, அதே போன்ற வேறு சில உணவு வகைகளால் இப்புற்றுநோய் வரவும் செய்கின்றது. எத்தகைய உணவுகள் புரோஸ்டேட் புற்றுநோயை தூண்டுகின்றன என்பதை உணர்ந்து கொள்ளுவதே இந்த நோயை தடுக்கும் சிறந்த வழியாகும். அனைத்து வகை உணவுகளிலும், குறிப்பாக சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆகியவற்றில் புற்றுநோய் உண்டாக்கும் பொருட்கள் அதிகம் உள்ளன.

கிரீன் டீ 
கிரீன் டீ அருந்தும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதனால் அவர்கள் ஆரோக்கியமான வாழ்வை வாழ முடிகிறது. தினசரி கிரீன் டீயை அருந்துவது புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது மிகச் சுலபமான பாதுகாப்பு வழிமுறையாகும். எந்த ஒரு உணவின் போதும், குளிர்ந்த பானமாகவும், மென்மையாகவும் கிரீன் டீயை பயன்படுத்தலாம்.

இரசாயன மற்றும் நச்சுப் பொருட்களை தவிர்ப்பது எவை 

நமது கண் எதிரே மறைவாய் உள்ளதோ அது எங்கும் நமக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியவையாக உள்ளன. இரசாயன பொருட்களும் அப்படித் தான். நமது கண் எதிரே இல்லாவிட்டாலும், அதன் நச்சுத்தன்மை மாறுவது கிடையாது. சுற்றுச்சூழல் புற்றுநோய் அபாயத்தை குறித்து பிரசிடென்ட் கேன்சர் பேனல் அறிக்கையின் சுற்றுச்சூழல் அபாயம் பற்றி கருத்துக்களின் படி 'சுற்றுச்சூழலால் பரவும் புற்றுநோயை மிகவும் குறைத்து எடை போட்டிருக்கின்றோம்'. இவற்றை குறைத்து மதிப்பிடக் கூடாது, எனினும், இத்தகைய நச்சு கலந்த இரசாயனத்தை கண்டறிந்து அவற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்வது நமது கையில் தான் உள்ளது. இத்தகைய இரசாயனங்களில் புரோஸ்டேட் புற்றுநோயை தூண்டும் நச்சுப்பொருட்கள் உள்ளன.

ஒமேகா-3 உள்ள மீன் வகைகள் 

வாரத்திற்கு ஒரு முறையாவது ஒமேகா-3 உள்ள மீன் வகையை உண்பது புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கும். காலிபோர்னியா பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி முடிவுகளின் படி கருப்பான மற்றும் கொழுப்பு மிக்க ஒமேகா-3 உள்ள மீன் வகைகளை வாரத்திற்கு ஒரு முறையாவது உண்டவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயை 63 சதவிகிதம் வராமல் தடுக்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. ஐகோசாபின்டானாய்க் அமிலம் (EPA) மற்றும் டோகோசா எக்சானிக் அமிலம் ஆகியவற்றைக் கொண்ட இத்தகைய மீன்கள் புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்க பெருமளவில் உதவுகின்றன என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சிகள் 

எடை குறைப்பது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது ஆகிய நற்பண்புகளை கொண்ட உடற்பயிற்சி புரோஸ்டேட் புற்றுநோயையும் தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. புரோஸ்டேட் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள உடற்பயிற்சி உறுதுணையாக உள்ளது. சான்பிரான்சிஸ்கோவில் உள்ள காலிபோர்னியா பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியின் படி, மிகுதியான உடற்பயிற்சியை மேற்கொள்ளுவது புரோஸ்டேட் புற்றுநோயை தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதற்கான ஆய்வுகளில் உடல் சுறுசுறுப்பாக இருக்கும் போது, புரோஸ்டேட் புற்றுநோயை 19 சதவிகிதம் தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. இதர நிபுணர்களும் உடற்பயிற்சி புற்றுநோயை தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment