Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, February 25, 2014

வான்மறையில் விந்தைக் கண்கள்!

குர்ஆனில் மலைப்பூட்டும் சான்றுகள்
தொகுப்பு: குலசை சுல்தான்

வைரங்கள் போல் மின்னிடும் அதிசயங்கள் பலவற்றை வான்மறை நெடுகிலும் காண முடிகிறது. கண்டும் காணாமல். கண்டதை ஆராயாமல் அலட்சியப்படுத்தும் மனிதனின் அவல நிலையை கண்டு, எப்படித்தான் அவனால அலட்சியப்படுத்த முடிகிறது? என அல்லாஹ்வே தன் அருள் மறையில் வியப்போடு குறிப்பிடுகிறான்.

‘நமது அத்தாட்சிகளை கண்டும் (காணாமல்) அவர்கள்அலட்சியப்படுத்திச செல்கின்றனர். (அல்-குர்ஆன் 54:2) எனவே, நாம் படிப்பினை பெறவும்,நமது நமடபிக்கையை வலுப்படுத்தவும் நாம் குர்ஆனில் பளிச்சிடும் அதிசயங்களை தொடர்ந்து காண்போம்.




ஒருவன் தன் கண் எப்படி இருக்கிறது? அது எப்படி இயங்குகிறது? ஆதன் மூலம் பார்வை எப்படிக் கிடைக்கிறது? என்பதை ஆராய முற்படின் அவன் இறைவனை ஏற்க வேண்டியது வரும் என்றார் ஓர் அறிஞர்..

ஆம்!உண்மை தான்! மனித உறுப்புகளில் அவனது கண்கள் மிகவும் விந்தையானவை!. அற்புதமானவை! வல்லோனின் வல்லமையை உணர்த்துபவை!



ஆகவே தான் அதனை ஆராய்ந்து பார்ப்பதற்காகவும்,அதன் புதுமைகளை தெரிந்து கொள்வதற்காகவும் இறைவன் திருக்குர்ஆனில்,

‘ நாம் அவனுக்கு இரு கண்களை அமைக்கவில்லையா? ‘ (அல்-குர்ஆன் 90:2) எனக்கேட்டு அதனை ஆராய்ந்து பார்ப்பதற்காக நம் சிந்தையை தூண்டுகிறது அருள்மறை அல் குர்ஆன்.



இன்று விஞ்ஞானத்துறையில் மனிதன் வியத்தகு சாதனைகளைச் செய்தும் கூட கண்களின் இயல்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு போலிக் கண்ணை அமைக்க இன்னும் அவனால முடியவில்லை. இதற்காகவது அந்த வல்ல நாயனுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஐவேளை என்ன ? ஐயாயிரம் வேளைகள் வேண்டுமானாலும் தொழலாம்.

No comments:

Post a Comment