Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, February 25, 2014

குர்ஆனில் தேனீயின் (النَّحْل) அதிசயம்!

குர்ஆனில் மலைப்பூட்டும் சான்றுகள்

தொகுப்பு: குலசை சுல்தான்

தேனி (النَّحْل)

அருள்மறைக்குர்ஆனில் அல்லாஹ், ”தேனீக்களைச் சிந்திக்கும் மக்களுக்கு அத்தாட்சி உள்ளது” எனக்கூறுகிறான். 16:68,69


وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ

உம் இறைவன் தேனீக்கு உள்ளுணர்வை அளித்தான். ‘நீ மலைகளிலும் மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள். (என்றும்) 16:68.

ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلاً يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاء لِلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ لآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ



‘பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்)களிலி ருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்’ (என்றும் உள்ளுணர்வை உண்டாக் கினான்.) அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்க ளுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது.அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிட்சை உண்டு. நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.(16:69)

எப்படி தேனை உருவாக்கவேண்டும் என்று தேனீக்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தது பற்றி அருள் மறையில் குறிப்பிட்டது போல கறையான்களுக்கும் அல்லாஹ்வே யாவற்றையும் கற்றுக் கொடுத்துள்ளான்.

வல்ல அல்லாஹ் பார்வையற்ற இந்த உயிரினங் களுக்கு அவைகள் தொடர்பு கொள்ள்வேண்டிய முறைகளைப் பற்றியும் அறிவித்து லட்சக் கணக்கான கறையான்களில் ஒவ்வொன்றுக்கும் அவைகளின் கூடுகளில் செய்ய வேண்டிய அனைத்தையும் கற்றுக் கொடுத்திருக் கிறான் என்பது நாம் பெறும் பாடமாகும்.

16:69 –வது வசனத்தில் தேன் எவ்வாறு உற்பத்தி யாகிறது என்ற உண்மை கூறப்படுகிறது. இன்று நம்மில் பலர் தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது என்ற உண்மையைத் தெரிந்து வைக்கவில்லை.

தேன் உற்பத்தியாகும் அதிசயம்

ஆயினும் தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி வந்து தேன் கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்று புரிந்து வைத்திருக்கின்றனர்.

உண்மை என்னவெனில் மலர்களிலும்,கனிகளிலும் உள்ள குளுகோஸை தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. அவை வயிற்றிற்குள் சென்று மாற்றமடைந்து அதன் வயிற்றிலிருந்து வெளிப்படு கின்ற ஒரு கழிவு தான் தேன்.இதை இன்றைய அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்து இந்த உண்மையை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே திருக்குர்ஆன் தேனீக்கள் தேனை உணவாகச் சாப்பிடுகின்றன எனக்கூறியதோடு மட்டுமல்லாமல்,சாப்பிட்ட பின் அதன் வாயிலிருந்து ‘தேன்’ வெளிப்படுகிறது என்று சொல்லாமல் வயிற்றிலிருந்து வெளிப்படுகிறது என்று கூறியது. 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த எந்த மனிதனாலும் கற்பனை கூட பார்க்க முடியாத ஒரு செய்தியை உலகிற்குச் சொன்னது.

தேனீயின் வேகப்பயணம்

அத்துடன் தேனைத்தேடி மிக எளிதாகச் சென்றுவிட்டு எளிதாகவே தங்கள் கூடுகளுக்கு வந்து சேர்ந்து விடுகின்றன என்ற அறிவியல் உண்மையையும் இணைத்துச் சொல்கிறது.

இன்றைய அறிவியலின் வியப்பு

இந்த அறிவியல் நிறைந்த அரிய கருத்தை எழுதப்படிக்காத முஹம்மது கூறியருக்க முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

தேனின் முக்கியத்துவத்தையும், அதன் மருத்துவக் குணத்தைப்பற்றியும் திருக்குர்ஆன் கூறிய அரிய கருத்துக்களை ஆய்வு செய்த இன்றைய மருத்துவ அறிஞர்கள் அதில் பல ஆயிரம் மூலிகைகளின் மருத்துவக்குணங்கள் அமைந்துள்ளன என்று கண்டு பிடித்துள்ளனர். இது மனிதனின் வார்த்தைகளல்ல என்பதை இன்றைய அறிவுலகம் ஒப்புக் கொண்டுள்ளது

No comments:

Post a Comment