செங்குத்து தோட்டம்(Vertical Garden)
நகரங்களில் ஏற்படும் இட நெருக்கடிக்கு இந்த செங்குத்துத்
தோட்டம் தீர்வாக அமையும். அதே சமயம் மக்கும் கழிவுகளுக்கும் இது தீர்வாக
அமையும். பல்வேறு முறைகளை பார்த்ததில் இந்த பை முறை சற்று எளிமையாக
இருப்பதோடு குறைந்த செலவில் இதனை உருவாக்க முடியும். சாதாரணமாக குறைந்த
உயரத்தில் செடிகளை வளர்க்கும் போது அதிக பட்சம் 4 அல்லது 5 செடிகளை மட்டுமே
வளர்க்க முடியும். உயரம் அதிகமான இந்த பையில் பக்கங்களில் துளை செய்து
குறைந்தது 20 முதல் 25 செடிகள் வளர்க்கலாம். குறிப்பாக பாலக்கீரையை
சிறப்பாக வளர்க்கமுடியும். உங்கள் பார்வைக்காக சில புகைப்படங்கள்.
![]() |
| செங்குத்துத் தோட்டதிற்கு பை தயாராகிறது |
| இளம் நாற்றுக்கள் |
![]() |
| நன்கு வளர்ந்த நிலையில் கீரைகள் |
![]() |
| மேற்பகுதியில் 4 அல்லது 5 செடிகள் மட்டுமே வளர்க்க இயலும். |
![]() |
| செங்குத்து நிலையில் 20 முதல் 25 செடிகள் வளர்க்க இயலும். |
![]() |
| அறுவடை செய்யப்பட்ட கீரை |





No comments:
Post a Comment