Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, October 10, 2014

#குலசை_தசராவும் #மனித_நேயமும்!!




இந்தியாவில் நடைபெரும் மிகப் பிரமாண்டமான தசரா விழா மைசூருக்கு அடுத்து குலசையில் தான் பெரிய அளவில் கொண்டாடப் படுகிறது..
ஒரே நாளில் (பத்தாம் நாள்) பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த சிறிய ஊரில் கூடுகிறார்கள். நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகிறார்கள்.. இந்த கூட்டத்தை தாங்கும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் இல்லாத ஊர் இது.. இருப்பினும் ஊர் மக்களும், பஞ்சாயத்து நிர்வாகமும் வரும் கூட்டத்திற்கு வேண்டிய வசதிகளை முடிந்தளவு செய்து கொடுக்கிறார்கள்..


வரும் பத்து லட்ச மக்களும் ஊரின் பல தெருக்களில் உள்ள வீடுகளின் திண்ணைகளிலும், திறந்த வெளிகளிலும், கடற்கரையிலும் தங்கி தமது கடமைகளை நிறைவேற்றுகிறார்கள்..
இதில் ஒரு சிறப்பம்சம் என்னவெனில், முஸ்லிம் மக்கள் வாழும் தெருக்களில் உள்ள இஸ்லாமியர்கள் இனிய முகத்துடன் இம் மக்களை தங்களது வீட்டு திண்ணைகளில் தங்க வைத்து, தண்ணீர், கழிப்பறை வசதிகள் கூட செய்து கொடுத்து, விருந்தாளிகளாக இவர்களை கவனித்து அனுப்புவார்கள். இது பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு அதிசய நிகழ்வு. இங்கு இந்த விருந்தோம்பலை மதங்கள் எனும் வரப்பினை கடந்து ஒரு வித மனிதாபிமான அடிப்படையில் செய்து வருவது குறிப்பிடதக்கது..

மேலும் ஊரிலுல்ள தர்காக்களிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் தங்க இடம் கொடுத்து உபசரிக்கிறார்கள் தர்கா நிர்வாகத்தினர்.
குலசை வடக்கூரில் கடற்கரையோரம் அமைந்திருக்கும் தர்காவில் இவ் வருடம் 2500 பேர்களுக்கும் மேல் தங்க வைக்கப் பட்டு, பெண்களுக்காக தர்காவில் உள்ல கழிப்பறைகளையே கொடுத்து உதவி இருக்கிறார்கள்.. தர்ஹாக்கள் இந்த வகையிலாவது பொது சேவையினை செய்து பயனளிப்பது,சற்று ஆறுதலான விடயம்., ஒரு ஏகத்துவ வாதியின் நிலையில் இருந்து நான் பாராட்டுகிறேன்..

இந்த சேவையினை முன்னின்று நடத்தியிருக்கிறார், தர்கா நிர்வாகியான ஹசனியா தெருவை சார்ந்த மீரான் அவர்கள்.. ஊர் மக்கள், முத்தாரம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் கோடி நன்றிகள் மீரான் பாய்!
இது தான் மதங்கள் கடந்த மனிதாபிமானம்..இவ் விசயத்தில் எங்க ஊர் முன்னிலையில் நிற்பது எங்களுக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது..

இவ்வருடம் காவல் துறையினர் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.. போக்கு வரத்தையும் சிறந்த முறையில் ஒழுங்கு படுத்தியிருந்தனர்.. நன்றி காவல் துறை..

வரும் வருடங்களில் இன்னும் சிறந்த முறையில் வரும் கூட்டத்தை ஒழுங்கு படுத்தி, அவர்களுக்கான வசதிகளை, குறிப்பாக கழிப்பிட வசதிகள் செய்து தரும்படி மாவட்ட ஆட்சியருக்கு நேரில் வேண்டுகோள் வைக்கப் பட்டிருக்கிறது.. மேலும் திட்டமிட்டப்படி, அண்ணா சிலையிலிருந்து கோவில் வரையிலான கடற்கரை சாலையை போர்க் கால அடிப்படையில் நிறைவேற்றினால், இனி வருங் காலங்களில் பக்தர்கள் ஊருக்குள் வராமலேயே கடற்கரை சாலை வழியாக கோவிலை சென்றடைய ஏதுவாக இருக்கும்..பஞ்சாயத்து நிர்வாகம் துரித கதியில் இதை நிறைவேற்றுவார்களா??,

No comments:

Post a Comment