Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 22, 2014

பன்னிரண்டாவது மாடியிலும்...பலே விவசாயம்!


இயற்கை மீதும்... விவசாயத்தின் மீதும் நமக்கு காதல் இருந்தால்... எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் விவசாயம் செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார், சென்னை மாநகரத்தில் வசிக்கும் நிர்மல் கிஸான். 'எக்ஸ்னோரா' எனும் அமைப்பின் நிர்வாகியாக இருக்கும் இவர், கோயம்போடு மத்தியப் பேருந்து நிலையம் எதிரில் வானுயுர நிற்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 12-ம் தளத்தில் உள்ள தன்னுடைய வீட்டில், விவசாயம் செய்து அசத்திக் கொண்டிருக்கிறார்-முழுக்க முழுக்க இயற்கை முறையில்!

தரையிலிருந்து சுமார் 400 அடி உயரத்தில் இருக்கும் தன்னுடைய பசுமைத் தோட்டத்தை நம்மிடம் காட்டியபடி பேசிய நிர்மல், ''நிலத்தில் மட்டும்தான் விவசாயம் பண்ண முடியும் என்று பலரும் நினைக்கிறார்கள். அது கிடையாது. செடிகளுக்குத் தேவை கொஞ்சம் தண்ணீர், சூரிய வெளிச்சம், சிறந்தப் பராமரிப்பு ஆகியவைதான். இவை மூன்றும் இருந்தால் எங்கும்... எதிலும் செடிகளை வளர்க்கலாம்.
சின்ன வயதில் இருந்தே விவசாயத்தில் எனக்கு ஆர்வம் அதிகம். அந்த எண்ணத்துக்கு வடிகாலாக நானே அமைத்ததுதான் இந்த இயற்கை பிராணவாயுக் கூடம். ஆம், என் வீட்டையே இயற்கை பிராணவாயுக் கூடமாக மாற்றிஇருக்கிறேன். காற்று மாசுபாடு அதிகமாகிவிட்ட சென்னையில்... வீடு முழுவதும் செடி, கொடிகள் இருப்பதால் இயற்கையான சுத்தமான காற்று எங்களுக்குக் கிடைக்கிறது. அதனால் இந்தப் பெயரை வைத்தேன்.
இங்கு குடி வந்ததும், இந்த வீட்டுக்குத் தகுந்த அளவில் தொட்டிகளையும், சிறிய மூங்கில் கழிகளையும் மட்டும்தான் வாங்கினேன். தொட்டிகளில் கத்திரி, தக்காளி, வெண்டை, முள்ளங்கி என பல வகை காய்கறிகள்; பத்து வகையான கீரைகள்; மல்லிகை, ரோஜா போன்ற பல வகைப் பூக்கள் என்று நட்டு வைத்தேன். அனைத்துமே ஆரோக்கியமாக வளர்ந்துள்ளன. இந்தத் தொட்டிகளில் விளையும் காய்கறிகளைத்தான் நாங்கள் சாப்பிடுகிறோம்.  
மூங்கில் கழிகளில் ஒரு கணுவுக்கும் மற்றொரு கணுவுக்கும் இடையில் உள்ள பகுதியில்... பக்க வாட்டில் செவ்வக வடிவில் பெயர்த்து எடுத்து, அதில் தென்னை நார்க்கழிவை இட்டும் செடிகள் வளர்க்க முடியும். இங்கு நிறைய செடிகளை இப்படி வளர்க்கிறேன். மண்ணைவிட தென்னைநார்க் கழிவுதான் சிறப்பாக இருக்கிறது. செடிகள் வளர ஆரம்பித்த பிறகு, இங்கு இயற்கைச் சூழல் வந்து விட்டது. ஆம், தானாகவே சில புறாக்கள் வந்து எங்கள் வரவேற்பறையில் கூடு கட்டி வசிக்கின்றன. பன்னிரண்டாவது மாடிக்கு தவளைகூட வந்து விட்டது. இன்னும் பாம்புதான் வரவில்லை'' என்று சிரித்துக் கொண்டே சொன்ன நிர்மல் நிறைவாக,
''வீட்டுச் சமையலறைக் கழிவுகள், வீணாகும் தண்ணீர் அனைத்தையும் செடிகளுக்குப் பயன்படுத்தி விடுவோம். வாய் கொப்பளிக்கும் தண்ணீரைக் கூட வீணாக்குவதில்லை. அதனால், தண்ணீர் ஒரு பிரச்னையே கிடையாது. வீட்டில் சேரும் குப்பைகளில் மட்கும் குப்பைகளைச் செடிகளுக்கு உரமாக்கி விடுவேன்.
அதிக சூரிய வெளிச்சம் தேவையுள்ள செடிகளை ஜன்னல்கள் மற்றும் பால்கனியில் வைத்திருக்கிறேன். மற்றவற்றை வீட்டுக்குள் வைத்திருக்கிறேன். தவிர, தண்ணீர் பாட்டில், உடைந்து போன குடங்கள், காலணி... என கிடைப்பவற்றில் எல்லாம் விதைகளைப் போட்டுச் செடிகளை வளர்த்து விடுவேன். எல்லோரும் இதைப் போல செடிகளை வளர்க்க ஆரம்பித்தால்... நமது மாநிலத்தை பசுமை மாநிலமாக எளிதில் மாற்றிவிட முடியும்'' என்று சொல்லி சந்தோஷமாக விடை கொடுத்தார்.
தொடர்புக்கு,
நிர்மல் கிஸான்,
செல்போன்: 98416-88255, 98400-34900.

குடியிருப்புக்கும் ஒரு தோட்டம்!
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைதளத்திலும் ஒரு தோட்டத்தை அமைத்து காய்கள், கீரைகள், பூக்கள் மற்றும் மரங்களை வளர்த்து வருகிறார், நிர்மல் கிஸான். அதைப்பற்றி பேசும் நிர்மல், ''கத்திரி, வெண்டை, அவரை, பாகற்காய், முள்ளங்கி, மிளகாய், கொத்தவரங்காய், பீர்க்கன், பூசணி, கீரை வகைகள் எனப் பல வகையான காய்கறிகளை இங்கு இயற்கை முறையில விளைவிக்கிறோம். சாணம், ஆட்டு எரு, குப்பைகள் போன்றவற்றைக் கலந்து மட்க வைத்து அதைத்தான் உரமாகக் கொடுக்கிறோம். இந்தக் காய்கறிகளை, குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம்'' என்கிறார்.

No comments:

Post a Comment