Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 22, 2014

முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல்: துவங்கியது உடைக்கும் பணி


மும்பை: இந்திய கப்பற்படைக்கு பெருமை சேர்த்ததும்,இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.விக்ரந்த் ஏலம் விடப்பட்ட நிலையில் நேற்று அதனை உடைக்கும் பணியை தனியார் நிறுவனம் துவக்கியது.

எச்.எம்.எஸ். ஹர்குலிஸ் என்ற பெயரில் விமானம் தாங்கி போர்க் கப்பல் கடந்த 1943-ம் ஆண்டு டிசம்பரில் பிரிட்டன் கப்பற்படையான ராயல் நேவி படையில் சேர்க்கப்பட்டது . 1945-ல் செயல்பட துவங்கி இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1957-ம் ஆண்டு இந்தியாவிற்கு விற்கப்பட்டது. 1959-ம் ஆண்டு இந்திய கப்பற்படையில்சேர்க்கப்பட்டது. பின்னர் மறு கட்டுமானம் செய்யப்பட்டு 1961-ல் பணிகள் முடிந்த நிலையில் ஐ.என்.எஸ்.விக்ரந்த் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இந்திய கப்பற்படையில் முறைப்படிசேர்க்கப்பட்டு செயல்பட துவங்கி1971-ல் இந்தியா-பாக் போர் ஏற்பட்ட போது இக்கப்பல் பயன்படுத்தப்பட்டது.



35 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவின் கப்பற்படையின் பெருமையை பாறைசாற்றி கடந்த 1997-ம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு கொடுக்கப்பட்டது. மும்பையில் உள்ள கப்பற்படை அருங்காட்சியகத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டது.

இந்நிலையில் இக்கப்பலை ஆன்லைன் வாயிலாக ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. கடந்த 2012-ம்ஆண்டு மும்பையை தலைமையிடமாக கொண்ட ஐ.பி. கமர்சியல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ரூ. 60 கோடிக்கு ஏலம் எடுத்தது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. அவை தள்ளுபடியான நிலையில் கடந்த ஜனவரி மாதம் கப்பலை உடைக்க அனைத்து அனுமதியும் கிடைத்தன.

தெற்குமும்பையில் தருக்ஹானா கப்பல் உடைக்கும் தளத்தில் நிறுத்தப்பட்டு உடைக்கும் பணிகள் துவங்கின. இதில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று கப்பலின்முன்பகுதி முழுவதும் உடைத்து பிரிக்கப்பட்டது.

இது குறித்து ஐ.பி.கமர்சியல் நிறுவனத்தின் இயக்குனர் அப்துல் கரீம் ஜஹா கூறுகையில், இன்னும் 7 அல்லது 8 மாதங்களில் முழுவதுமாக உடைக்கும் பிரிக்கும் பணிகள் நிறைவடையும் என்றார்.
கடந்த 71 ஆண்டுகளாக இந்தியாவின் கப்பற்படைக்காக உழைத்த ஐ.என்..எஸ்.விக்ரந்த் தனது கடைசி காலத்தை முடித்து கொண்டது.

ஐ.என்.எஸ். பற்றிய குறிப்புகள்:

* அயர்லாந்தைச் சேர்ந்த விக்டர் ஆம்ஸ்டிராங்க் என்ற பொறியாளர் வடிவமைத்தார்.
*192 மீ (630 அடி ) நீளமும்,213 மீ ( 700 அடி அகலமும் கொண்டது.
* 20 ஆயிரம் டன் எடை கொண்டது.
* மணிக்கு 43 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது.
* இரண்டு மகாவீர் சக்ரா, மற்றும் 12 வீர் சக்ரா ஆகிய விருதுகளை பெற்றுள்ளது.
*பீரிதம் சிங் இப்போர்க்கப்பலின் முதல் கமாண்டராக பணியாற்றினார்.

No comments:

Post a Comment