Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, November 16, 2014

எப்.ஐ.ஆர் மிஷின்

பெங்களூரு: வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய இனிமேல் பெங்களூருவாசிகள் போலீஸ் நிலையம் போக அவசியம் கிடையாது; அதற்கு பதிலாக, சாலைகளின் ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மெஷின் போன்ற பிரத்யேக இயந்திரத்தின் மூலமாகவே எப்.ஐ.ஆரை பதிவு செய்து கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இதுபோன்ற வசதியை முதன்முறையாக பெறப்போவது இந்தியாவின் 'ஐடி கேப்பிட்டல்' என்று அழைக்கப்படும் பெங்களூருதான். 


நகை பறிப்போ, வீடு புகுந்து திருட்டோ அல்லது வேறு எந்த சம்பவமோ, காவல் நிலையங்களுக்கு சென்று புகார் அளிப்பது என்பது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பது போலீஸ் நிலைய வாசலை ஏறி இறங்கியவர்கள் நன்கு அறிவர். கூடுமான வரையில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் வெறுமனே புகாரை பெற்றுக்கொள்ளவே பெரும்பாலான போலீஸ் நிலையங்கள் விரும்புகின்றன.

 எப்.ஐ.ஆர் பதிவு செய்தால் அந்த வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்வது போலீசாருக்கு கட்டாயமாகிவிடுகிறது என்பதுதான் இதற்கு காரணம். ஒருவேளை, எப்.ஐ.ஆர் பதிவு செய்ய 'பெரிய மனது வைத்து' முன்வந்தாலும், அதற்கும் லஞ்சம் கேட்கும் ஒரு சில போலீசார் இருப்பதையும் மறுக்க முடியாது. இந்த நடைமுறை சிக்கல் காரணமாக, உண்மையிலேயே எத்தனை குற்றங்கள், குறிப்பிட்ட காவல் நிலைய எல்லையில் நடக்கின்றன என்பது உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியாமல் போவது மட்டுமின்றி, வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாக பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ளதுதான், எப்.ஐ.ஆர் மிஷின். 

இந்த மிஷினில் ஆடியோ, வீடியோ, டச்-ஸ்கிரீன் வசதிகள் உள்ளன. இதன் வாயிலாக போலீஸ் அதிகாரியுடன் உரையாடி புகாரை பதிவு செய்ய முடிவதுடன், அதிலேயே கையெழுத்தும்போட்டு, பிரிண்ட்டும் எடுத்துக்கொள்ளலாம். ஆவணங்களை ஸ்கேனும் செய்யலாம். எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதும், உடனடியாக பிரிண்ட் செய்யப்பட்ட அக்னாலட்ஜ்மென்ட் புகார்தாரருக்கு கிடைத்துவிடும். முதல்கட்டமாக பெங்களூரு, மல்லேஸ்வரம் மந்திரி மாலில் இதுபோன்ற மிஷின் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை சிஸ்கோ என்ற நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. அந்த நிறுவன தலைவர் தினேஷ் மால்கனி கூறுகையில், எப்.ஐ.ஆர் மிஷினை ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளோம். பெங்களூருக்கு தக்கபடி சில மாற்றங்களை அதில் செய்து பொருத்தியுள்ளோம். மூன்று மாதங்களுக்கு பிறகு நகரின் பிற பகுதிகளிலும் மிஷின்கள் வைக்கப்படும் என்றார். பெங்களூரு போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி கூறுகையில், பெங்களூருவிலுள்ள 105 காவல் நிலையங்கள், 42 டிராபிக் போலீஸ் நிலையங்களை இணைக்கும் பாலமாக இந்த எப்.ஐ.ஆர் மிஷின்கள் செயல்படப்போகிறது என்றார்.

No comments:

Post a Comment