Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, November 3, 2013

மட்டன் உருண்டை கறி


 
தேவையானப் பொருட்கள்
  • மட்டன் கொத்துக் கறி – அரைக்கிலோ
  • பச்சைமிளகாய் – 10
  • வெங்காயம் – 100 கிராம்
  • மல்லித்தூள் – ஒரு மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
  • கரம்மசாலாத்தூள் – ஒரு மேசைக்கரண்டி
  • தேங்காய்ப்பால் – 2 மேசைக்கரண்டி
  • இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  • மல்லித்தழை – சிறிது
  • எண்ணெய் – பொரிப்பதற்கு
  • நெய் – 2 மேசைக்கரண்டி
  • முட்டை – ஒன்று
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை
  • ஒரு பாத்திரத்தில் கறியினை எடுத்துக் கொண்டு தேவையான உப்பு, ஒரு மேசைக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லித் தழை, ஒரு மேசைக்கரண்டி நறுக்கின பச்சைமிளகாய், ஒரு தேக்கரண்டி மல்லித் தூள், அரைதேக்கரண்டி கரம் மசாலாத் தூள், ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும்.
  • இத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கிக் கொள்ளவும். இவற்றை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மட்டன் உருண்டைகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
  • குழம்பிற்கு வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  • அரைத்தேக்கரண்டி மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள், ஒரு தேக்கரண்டி மல்லித்தூள், ஒரு தேக்கரண்டி நறுக்கின பச்சைமிளகாய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
  • பிறகு தேங்காய் பாலினை ஊற்றவும். சுமார் பத்து நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
  • கொதிக்கும் போது மட்டன் உருண்டைகளை அதில் போட்டு மேலும் பத்து நிமிடங்களுக்கு வேக விடவும். மல்லித் தழை தூவி, இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment