Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, November 5, 2013

மார்பக புற்றுநோயை தடுக்கும் சூரிய ஒளி..!


தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி நம்மீது பட்டால், மார்பக புற்றுநோய் வரவே வராது என்கிறார்கள் கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.


சூரிய ஒளி நம்மீது படும்போது, வைட்டமின் டி உற்பத்தி தூண்டப்படுகிறது. மார்பக செல்கள், வைட்டமின் டியை, ஒருவித ஹார்மோனோக மாற்றும் திறன் பெற்றவை. இந்த ஹார்மோன்தான், மார்பகத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இளம், நடுத்தர, வயதான பெண்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டு இது கண்டுபிடிக்கப்பட்டது.
தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி நம்மீது படும்படி பார்த்துக்கொண்டால், மார்பக புற்றுநோய் ஆபத்தில் இருந்து விடுபடலாம். ஆண்களை பொறுத்தவரை, வைட்டமின் டி மாரடைப்பு போன்ற ஆபத்துகளில் இருந்து காக்கிறதாம்.

No comments:

Post a Comment