Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, November 3, 2013

KFC, MCDONALD – Chicken எச்சரிக்கை ரிப்போர்ட்…!!


KFC மற்றும் MCDONALD போன்ற புகழ்பெற்ற fried chicken பாஸ்ட் பூட் கடையில் விற்கப்படும் கோழி கறிகள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை பார்ப்பவர்கள் மறுமுறை மறந்துகூட kfc பக்கம் போக மாட்டார்கள்.
kfc கோழிகளில் தடவப்படும் மசாலாவில் ஒருவகை வாத்துகளின் கொழுப்புகள் சேர்க்கப்படுகிறது.

இந்த கொழுப்பானது தயாரிக்கப்படும் விதம் கொடுமையானது. வாத்துகளுக்கு உணவுகள் கட்டாயமாக திணிக்கப்படுகிறது. இவ்வாறு உட்கொள்ளும் வாத்துகள் சில நேரங்களில் செத்தும் போய் விடுகின்றன. இவ்வாறு தீவனம் திணிக்கப்பட்ட வாத்துகள் பெருத்து உப்பி போய், அதிக எடையுடன் ஆன பிறகு அவைகள் அறுக்கப்பட்டு அதிலிருந்து கொழுப்புகள் எடுக்கப்படுகின்றன.



அந்த கொழுப்புகள் kfc கறி கோழிகளில் மசாலாவில் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. ஏற்கனவே சில இஸ்லாமிய அமைப்புகள் kfc ஹராம் உணவு என்று அறிவித்துள்ளது. எனவே இந்த உணவை தவிர்ப்பது சிறந்தது.

மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே.எப்.சி பிரைட் சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்தில் கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்றி இயற்கையானது மற்றும் 100 சதவீதம் சத்தானது என்று பல்வேறு பொய்களைக் கூறி விற்பனை செய்கின்றனர்.

இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை சோதனை செய்த போது அதில் அளவுக்கு அதிகமாக டிரான்ஸ் என்ற கொழுப்பு வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக தெரிந்திருக்கிறது. இந்த உணவுப் பொருட்களை குழந்தைகளும் இளம் வயதினரும் அதிகம் விரும்பி சாப்பிடுவதால் அதிகம் பேர் ஒபிசிடி, நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு ஆளாகின்றனர்.

எனவே இதுபோன்ற கலப்பட உணவு பண்டங்களை தவிர்க்க முயல வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்விற்கு அறிவுரை கூறியிருக்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு இதயத்தில் உள்ள வால்வுகளின் படிந்து பாதையை குறுகலாக்குகிறது. இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது என்றும் எச்சரிக்கின்றனர் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வகத்தினர்.

No comments:

Post a Comment