Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, December 11, 2013

இரு வேளையும் பல் தேய்ப்பதால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும்



காலை, மாலை இரு வேளையும் பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதயத்தில் ரத்தம் உறையும் நோய் ‘த்ராம்போசிஸ் எனப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்யும் நிறுவனம் லண்டனில் உள்ளது. மாரடைப்பு, ஸ்டிரோக் வருவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அதில் தெரியவந்த தகவல் பற்றி இதய சிகிச்சை நிபுணர் விஜய் காக்கர் கூறியதாவது.


உடலில் தேவையற்ற கொழுப்பு, லிப்பிட் பொருட்கள் அதிகமானால் ரத்தக்குழாயில் அவை படிகின்றன. ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பை ஏற்படுத்துகின்றன என்று பல காலமாக கூறப்பட்டு வருகிறது. கொழுப்பு, லிப்பிட் மட்டுமல்ல.

வைரஸ் கிருமிகள் மற்றும் நோய்த் தொற்றுகளால் கூட மாரடைப்பு ஏற்படும். பெரும்பாலும் கிருமித் தொற்று பல்லில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. வாய் வழியாக வயிற்றுக்குள் போய்விடும் உணவுப் பொருட்கள் செரிக்கப்பட்டு சக்தியாகவும் சத்துகளாகவும் மாறுகின்றன. பல்லில் படியும் உணவுத்துகள்கள் கிருமிகளாக மாறுகின்றன. ஒழுங்காக பல் தேய்க்காவிட்டால் இவை உள்ளே சென்று படிப்படியாக மாரடைப்பு உள்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.தினமும் 2 வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு, ஸ்டிரோக் வரும் வாய்ப்பு 60 முதல் 70 சதவீதம் வரை குறையும். இதயம் பலமாக இருக்கும். இவ்வாறு இதய நிபுணர் விஜய் கூறினார்.

No comments:

Post a Comment