Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, December 11, 2013

நாம் மண்ணைக் காத்தால், மண் நம்மை காக்கும்!

னம் இனத்தோடுதாம் சேரும் என்பது ஒவ்வொரு நபருக்கும், உயிரினத்திற்கும் சாலப் பொருந்தும் போல் இருக்கிறது.
ஆம்! நான் சட்ட ஆராய்ச்சியை விட்டு வெளியில் வந்து எட்டிப்பார்த்தால், கிடைக்கும் நட்புகளில் ஆராய்ச்சியாளர்களே அதிகமாக கிடைக்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் என்றால், எல்லோரும் முனைவர் பட்டம் பெற்ற முட்டாள்கள் என நினைக்காதீர்கள்.

என்னைப் போன்ற பள்ளிப்படிப்பையும், தொழிற்படிப்பையும் முடித்தவர்களே!

படிப்பிற்கும் செய்யும் ஆராய்ச்சிக்கும் சற்றும் சம்பந்தம் இல்லாதவர்களே!!

நான் எப்படி நீதித்துறையில் நடக்கின்ற எல்லாமே தவறு என்று தெளிவாக குறிப்பிடுகிறேனோ, இதுபோலவே அவரவர்கள் செய்யும் ஆராய்ச்சி பற்றி பேசும் போது, இவர்களின் பேச்சும், செயல்பாடும் அத்துறையில் நடக்கின்ற எல்லாமே தவறு, பித்தலாட்டம் என்றே தோன்றுகிறது.


நாங்கள் சொல்வது உண்மை என அவ்வப்போது நிரூபித்து காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

"இப்போல்லாம் யாரப்பாத்தாலும், ஆரோக்கியமா இருக்கனும்னா, சத்தான உணவ சாப்பிடணும். ஆனால், உணவுலியே சத்து இல்லியே. அப்புறம் நமக்கு எப்படி சத்து கிடைக்கும்" என புலம்பித் தள்ளுகிறார்கள்.

இப்புலம்பலை முதலீடாக வைத்தே, சத்தான உணவு வகைகள், சத்து மாவுகள் என எல்லா பொருட்களின் உள்ளே இருந்த சத்துக்கள் யாவும், சந்தடி சத்தமில்லாமல் பெயருக்கு முன்னால் சேர்க்கப்பட்டு, கொள்ளை லாபத்தில் விற்கப்படுகிறது.

உணவுக்கான அடிப்படை மூலக்கூறு பொருட்கள் எதற்குமே கால நிர்ணயம் இருக்காது. அரிசியை எடுத்துக் கொண்டால், அது பழகப்பழக சாதத்தின் கொள்ளளவு அதிகமாக கிடைக்கும் என்று, அடுத்த வருடத்துக்கு தேவையானதை இவ்வருடமே தயார் செய்து வைத்திருப்பார்கள்.

குற்றவாளிகளை சிறையில் அடைத்து, கொஞ்சம் கொஞ்சமாக (நோ, சா)கடிப்பது போல, இப்போது எல்லா பொருட்களையுமே பொட்டலங்களில் அடைத்து விடுகிறார்கள். இப்பொருட்களின் உயிர்ப்பு தன்மை இவ்வளவு நாட்கள்தான் என முத்திரை வேறு குத்தி விடுகிறார்கள்.

விரைவில் கெட்டுப் போகும் தன்மையுள்ள பொருட்களில் சிறிது உப்பை கலந்து வைத்தால் கெட்டுப்போகாது என கலந்து வைப்பார்கள். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதில் இதுவும் பொதிந்துள்ளது போலவே தெரிகிறது.

அந்த உப்பில் என்ன எழவ கலக்குறாங்களோ தெரியல, உப்பு பாக்கெட்ல கூட காலாவதி தேதியை முத்திரை குத்திடுறாங்க. எனக்கு தெரிஞ்சி இதுக்குதான், அதிகபட்ச கால வரையறை, இரண்டு வருடம்.

நாங்கெல்லாம் ரொம்பவே விழிப்பறிவுணர்வு உள்ளவங்க என்று சொல்லிக் கொள்பவர்கள், காலாவதி தேதி நேற்றோடு முடிந்திருந்தால், அதே சத்து மாவோ அல்லது வேறு எதுவோ விஷ மாவாகி அல்லது விஷப்பொருளாகி உயிரே போய் விடுவது போல வாங்க மறுக்கும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள்.

காலையில் செய்தது மாலையில் வீணாகி விடும் என்றால் அதற்கு மணி கணக்கு. இன்று செய்தது நாளை அல்லது ஓரிரு நாட்களில் வீனாகி விடும் என்றால் அதற்கு நாட்கள் கணக்கு. இப்படித்தான் வாரக்கணக்கு, மாதக்கணக்கு, வருடக்கணக்கு எல்லாமே.

ஆகவே, ஒரு வாரம்தான் காலக்கெடு என்றால், இரண்டு மூன்று வாரங்களுக்கு சாப்பிடலாம். மாதக்கணக்கில்தான் வைத்திருக்க கூடாது. இப்படி ஒவ்வொன்றுக்கும் காலக்கெடுவை கணக்கிட்டு நாமே நீட்டித்துக் கொள்ளலாம்.

இதில் உங்களுக்கு சந்தேகம் ஏதும் இருந்தால், ஒரே பொருளில் இரண்டு பொட்டலங்களை வாங்குங்கள். ஒன்றை காலக்கெடுவுக்கு முன் சாப்பிட்டு பாருங்கள். மற்றதை நீங்களே நீட்டித்த காலக்கெடுவுக்குப் பின் சாப்பிட்டு பாருங்கள். ஒன்றும் ஆகாது.

என் உடம்பு என்ன சோதனைச் சாலையா, எல்லாப் பரிசோதனைகளையும் செய்வதற்கு என எண்ணலாம். மருத்துவர்களிடம், இதிலும் குறிப்பாக ஆங்கில மருத்துவர்களிடம் சோதனை சாலையாகத்தான் உடம்பை ஒப்படைக்கிறீர்கள் என்பதை ஒருபுறம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மறுபுறம், காலக்கெடு முடிந்த பொருளை அதனை தயார் செய்தவர்கள் அழித்து விடுவார்கள் என எண்ணுகிறீர்களா... அவர்களுக்கு பொருட்களால் வரும் கொள்ளை லாபம் முக்கியமா அல்லது உங்களது உடல் நலத்திற்காக, பொருள் நட்டத்தை விரும்புவார்களா... காலக்கெடு முடிந்த பொருட்களை மீண்டும் புதிதாக பொட்டலம் போட்டு அனுப்பி விடுவார்கள். அவ்வளவே!

இந்த ரகசியத்தை எல்லாம், பொட்டலப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பவர்களை நைசா போட்டு வாங்குனிங்கனா தெரிஞ்சிக்கலாம்.

சரி, நம்ம விட்ட விசயத்தை திரும்பவும் ஆரம்பிப்போம்.

விளையும் பொருட்களிலேயே சத்து இல்லை என்றால், மண்ணில் சத்துக்கள் இல்லை என்றுதானே அர்த்தம். ஒரு விதை போட்டால், பல்லாயிரம் விதைகளாக பெருக்கித்தரும் ஆற்றல் கொண்ட மண்ணில் இருந்த சத்துக்கள் எல்லாம் எங்கே போயிற்று?

இதில் விதையில்லா ரகம் வேறு வந்து விட்டது. விதையோட எடை குறையுமே, விதைகளை நீக்கவேண்டிய அவசியம் இல்லியே என அதை விரும்பி சாப்பிடுபவர்களும் உண்டு.

இப்படி சாப்பிடுபவர்களை நான் கேட்கும் கேள்வி, நீங்கள் சாப்பிடும் விதையில்லாத பழம், எப்படி தன் வாரிசுகளை உருவாக்க இயலாதோ, அதுபோல நீங்களும் உங்களது வாரிசை உருவாக்க முடியாமல் போகலாம் இல்லியா?

வாரிசு இல்லாதவர்கள், தாங்கள் உட்கொள்ளும் உணவு முறை குறித்து பரிசீலனை செய்யவும்.

நாம் மருந்துகளை சாப்பிட்டு சாப்பிட்டு, நோஞ்சானாக ஆனது போல, மண்ணும் நாம் போடும் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு சாப்பிட்டு நோஞ்சானாகி விட்டது. ஆதலால் மண்ணைக் காக்காமல், நாம் நம்மை காக்க முடியாது. நாம் மண்ணைக் காத்தால், மண் நம்மை காக்கும் என்றார்கள், இந்த விவசாய ஆராய்ச்சியாளர்கள்.

உர வகைகளை பயன்படுத்தாமல், சாண வகைகளையும் இதர பொருட்களையும் உரமாக பயன்படுத்துகிறார்கள். பூச்சிக்கொல்லியை அடித்து பூச்சை கொலல்லாமல், பூச்சி விரட்டியை தெளித்து விரட்டுகிறார்கள். இவைகள் எல்லாம் இவர்களது சொந்த தயாரிப்புகளே!

வேதங்களில் இதுபற்றி எல்லாம் சொல்லப்பட்டுள்ளதாக சொல்லும் இவர்கள், திரு. தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களில் இருந்து இவர்களுக்கு எடுத்துச் சொல்வதாக சொல்கிறார்கள்.

இவர்களைப் பற்றி ஏற்கனவே ஆ! முள்ளங்கி...!!என்கிற தலைப்பில் எழுதி உள்ளேன். இது ஓர் அதிசய முள்ளங்கி!

இதேபோன்று, தற்போது மரவள்ளி கிழங்கை பயிர் செய்து எடுத்து, சுற்று வட்டார மக்களை எல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளனர். மேலும், அந்த சுற்று வட்டாரத்தில் இவர்கள் விவசாயம் செய்யும் இடம் மட்டுமே, பச்சை பசேல் என இருக்கிறது.

ஆ முள்ளங்கி கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ளபடி, இவர்கள் சொல்லும் முறையில் விவசாயம் செய்தால், இந்தியா மட்டுமன்று, சோமாலியா மட்டுமன்று, உலகிற்கே இந்தியா உணவு கொடுக்க முடியும் என்பதை யாராலும் மறுக்க முடியாது போலும்.

ஆம்! இந்த மரவள்ளி கிழங்கு 1.5 அடி சுற்றளவும், 2.5 அடி உயரமும், 5.4 கிலோ கிராம் எடை கொண்டதாகவும் இருக்கிறது.  

எல்லோரும் பசி, பட்டிணி, பஞ்சம் என பேசிக் கொண்டிருக்க, இவர்களோ இப்பிணிகளைப் போக்க என்னென்ன செய்யலாம் என யோசித்து, அதன்படி சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சொந்தமாக விவசாய நிலம் இல்லாதவர்கள் இப்படியெல்லாம் பாடுபடும் போது, ஏக்கர் கணக்கில் வைத்துள்ள நீங்களெல்லாம் என்ன செய்யப் போறிங்க என்பதே என் கேள்வி?
இவர்களின் வழிகாட்டுதல்களை பெற விரும்புபவர்கள் திரு.ராமானுஜம் +919444425801, திரு.குமார் +918453557193 ஆகிய உலாப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாமே!

யார் எந்த இனமாக இருந்தாலும், இனம் இனத்தோடு சேர்ந்தாலும், எல்லா இனங்களும் இறுதியில் மண்ணுக்குள்தாம் போக வேண்டும். ஆனால், அம்மண்ணுக்கே மருந்தடித்து மருந்தடித்து, நம்மை செரிக்கும் தன்மை இல்லாமல் செய்து, புழுபுழுத்துப் போகச் செய்து விடுவார்கள் போலிருக்கிறதே... அந்தோ கொடுமை...!

No comments:

Post a Comment