Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, December 11, 2013

யார் இந்த வன்சாரா?


ந்திய காவலர்களில் கிரண்பேடி போன்ற சிலர் மட்டுமே ‘Super Cop’ என்று அழைக்கப்பட்டனர்.
2007ல் சிறையில் அடைக்கப்படும் வரை குஜராத்தின்  ‘Super Cop’ ஆக       எல்லா அதிகாரமும் பெற்று திகழ்ந்தவர் தான் டி. ஜி. வன்சாரா.
1987 பேட்ச் குஜராத் கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான வன்சாரா குற்றவியல் பிரிவு தலைவராக பணியாற்றிய நாளிலிருந்தே என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக அறியப்பட்டவர். பல்வேறு என்கவுண்டர்களை நடத்தி மீடியாவின் புகழ் வெளிச்சத்தில் இருந்த வன்சாரா மத்திய பிரதேசத்தை சார்ந்த சொஹ்ராபுதீனை என்கவுண்டரில் சுட்டதிலிருந்து அவரின் சரிவு தொடங்கியது.

சொஹ்ராபுதீன் என்கவுண்டர் போலியானது என்று மனித உரிமை அமைப்புகள்  கொடுத்த அழுத்தத்தால் காவல்துறையால் மீண்டும் விசாரிக்கப்பட்டு குஜராத் மாநில சிஐடியால் 2007ல் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு பிறகு தான் வன்சாரா நடத்திய பல என்கவுண்டர்கள் போலியானவை என தெரிய வந்தது. என்கவுண்டரில் தான் சுடும் எல்லோரையும் பாகிஸ்தான் அல்லது லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்று சொல்வது தான் வன்சாராவின் ஸ்டைல். வன்சாரா நடத்திய போலி என்கவுண்டர்களில் குறிப்பிடத்தகுந்த என்கவுண்டர்கள் போலியானது என தெரிய வந்தது.
வன்சாரா நடத்திய போலி என்கவுண்டர்களில் குறிப்பிடத்தகுந்த  சிலஎன்கவுண்டர்கள் இந்நேரம் வாசகர்களுக்காக:
வீழ்ச்சிக்கு வழி வகுத்த சொஹ்ராபுதீன்
நவம்பர் 2005ல் மத்திய பிரதேசத்தை சார்ந்த சொஹ்ராபுதீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கவுசர் பீவி பேருந்தில் சென்று கொண்டிருந்த போது குஜராத் மாநில தீவிரவாத எதிர்ப்பு படையால் கைது செய்யப்பட்டனர். சொஹ்ராபுதீன் அஹமதாபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சில நாட்கள் வைக்கப்பட்டு பின் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் சுடப்பட்டு கிடந்தார். அவரது மனைவி கவுசர் பீவியோ காணாமல் போனார். பின் செய்தியாளர்களின் கூட்டத்தில் லஷ்கர் இ தொய்பாவால் அனுப்பட்ட தீவிரவாதி சொஹ்ராபுதீன் என்றும் மோடியை கொல்ல திட்டமிட்டார் என்றும் கூறினார்.
இஷ்ரத் ஜஹான்
சொஹ்ராபுதீன் என்கவுண்டருக்கு ஒரு வருடம் முன்பாக ஜுன் 2004ல் கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் மற்றும் மூவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்கள். வழக்கம் போல் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்று காவல்துறை கூறியது.
அது போல் 2003ல் பவ்நகரை சார்ந்த சாதிக் ஜமாலும் 2002ல் அஹமதாபாத்தில் கொல்லப்பட்ட சமீர் கானின் என்கவுண்டர்களும் போலியானவை என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
துளசி பிரஜாபாதி
 சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கின் முக்கிய சாட்சியும் காவல்துறை இன்பார்மருமான துளசி பிரஜாபதி போலி என்கவுண்டரில் டிசம்பர் 2006ல் கொல்லப்பட்டார். தற்போது அக்கொலை சம்பந்தமாக அமித் ஷாவை காப்பாற்ற நடந்த முயற்சி குறித்த சிடி வெளியாகி பாஜகவை பீதிக்குள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கவுசர் பீவி
சொஹ்ராபுதீன் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட பின் அவரது மனைவி கவுசர் பீவி விஷம் கொடுக்கப்பட்டு பின் வன்சாராவின் கிராமத்தில் எரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று சிஐடி கருதினாலும் அவரது நிலை தெரியவில்லை. சிறையில் இருந்த போது கவுசர் பீவி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு "யார் அந்த கவுசர் பீவி" என்று கேட்டார் வன்சாரா.
சிறையில் வன்சாரா
சிறையில் இருந்த போது செய்திதாள்களை படிப்பதில்லை என்றும் தொலைக்காட்சியை பார்ப்பதில்லை என்று கூறிய வன்சாரா மன நிம்மதிக்காக சர்ச்சை புகழ் ஆசாராமின் யோகாவை பின்பற்றுவதன் மூலம் தான் மன நிம்மதி பெறுவதாக கூறியிருந்தார். 2008ல் இவருடன் சிறையில் இருந்த இன்னொரு காவல்துறை அதிகாரி அமீன் வன்சாராவால் தான் தாம் சிறையில் இருப்பதாக கூறி, கிரிக்கெட் மட்டையால் சிறைக்குள்ளேயே மோதி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மிகப் பெரும் நகைச்சுவை என்னவென்றால், சிறையில் இருக்கிற வன்சாரா மனித உரிமைகள் குறித்த பட்டயப்படிப்பை  படித்து கொண்டிருக்க்கிறார் என்பது தான்.

No comments:

Post a Comment