சில வாரங்கள் முன்பு சிங்கபூர் சாங்கி விமான நிலையத்தின் கழிவறை ஒன்றின் வாயிலில் ஒரு தமிழ் இளைஞன் தலை குனிந்தவாறு நின்றிருந்தான். என்னவென்று விசாரித்தபோது தான் ஒரு பட்டதாரி இளைஞன் என்றும் ஆனால் குடி நுழைவுத் தாளை நிரப்பத் தெரியவில்லை என்றும் உதவுமாறும் கேட்டான். ஆச்சரியமும் வருத்தமும் மேலிட அவனிடம் பேசியதில் அவன் ஒரு இளங்கலை பொருளாதாரப் பட்டதாரி என்றும் தற்போது தான் சென்னையில் இருந்து வேலை நிமித்தமாக வந்துள்ளதாகவும் தெரிவித்தான். கொத்தனாரின் உதவியாளன் போன்ற வேலை என்றும் கை நிறைய ரூபாய் பதினைந்தாயிரம் கிடைக்கும் என்றும் அதற்காக இந்தியாவில் ஒரு தரகரிடம் ருபாய் ஒரு லட்சம் கொடுத்து அதன்மூலம் வந்துள்ளதாகவும் தெரிவித்தான்.
Tuesday, January 7, 2014
Monday, January 6, 2014
"நாண்" ரொட்டி செய்யும் முறை
தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 400 கிராம்
ஈஸ்ட் - 2 தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
பால் - 2 மேசைக்கரண்டி
பட்டர் - சிறிது (மேலே தடவுவதற்கு)
உப்பு - ஒரு தேக்கரண்டி
தண்ணீர் - அரை கப்
செய்முறை :
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஈஸ்ட் - 2 தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
பால் - 2 மேசைக்கரண்டி
பட்டர் - சிறிது (மேலே தடவுவதற்கு)
உப்பு - ஒரு தேக்கரண்டி
தண்ணீர் - அரை கப்
செய்முறை :
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் அற்புத வழிகள்

ஒரு மனிதனின் சராசரி ரத்த அழுத்தமானது 120/80 என்ற இரண்டு அளவுகளில் கணக்கிடப்படுகின்றது. முதல் அளவானது அவரது இதயம் எந்த அளவிற்கு தமனிகளில் ரத்தததைத் செலுத்துகின்றது என்பதினையும், இரண்டாவது அளவு தொடரும் துடிப்புகளுக்கிடையே இதயமானது சீராக செயல்படுவதைக் கண்டறியவும் உதவுகின்றது.
Sunday, January 5, 2014
பயமுறுத்துகிறதா பருமன்?

கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது.
கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்:
அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும்கூட உடல்பருமனுக்குக் காரணங்கள். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.
தங்கம், வெள்ளி:எப்போதும் குறையாத மோகம்!

2008 முதல் 2012 வரை ஏறுமுகத்திலே இருந்த ஆபரணத் தங்கத்தின் விலையானது, 2013-ல் 19 ஆயிரம(8 கிராம்) ரூபாயைத் தொட்டுவிட்டு, தற்போது ரூ.22 ஆயிரத்துக்கு சற்று அதிகமாக வர்த்தகம் ஆகிறது. தங்கம் விலை இன்னும் குறையும் என வல்லுநர்கள் சொன்னாலும், தங்கம் வாங்குவதை மக்கள் நிறுத்தவே இல்லை. இந்தப் புத்தாண்டில் மக்களிடம் தங்கம் வாங்குவது எப்படி இருக்கிறது என்பதை அறிய பலருடன் பேசினோம். முதலில், ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி ட்ரெய்னிங் சென்டரின் இயக்குநர் கே.சுவாமிநாதனுடன் பேசினோம்.
உனக்கும் மேலே நீ!
பள்ளியில் தமிழ் மீடியத்தில்படித்தவர்களால் ஆங்கிலம் சரளமாக பேச முடியாதா?

தமிழா, ஆங்கிலமா, இந்தி மொழியா..? நாலுபேர் உட்கார்ந்திருக்கிற இடத்தில் இந்தக் கேள்வியைக் கொளுத்திப் போட்டால், நாலு மணி நேரம் பேசினாலும் அதற்கொரு தீர்வு கிடைக்காதபடிக்கு, ஏகத்துக்கும் பேசித் தீர்த்துவிடுவார்கள் நம்மவர்கள்.
செம்மொழி - கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை

ஒலிக்கடலில் முதன் முதலாய்
உதித்து வந்த பேரலையே
கலைக்கடலை நாவினால்
கடையவந்த செவியமுதே !
பிறந்தநாள் அறியாத
பேரழகே! பிறமொழிகள்
இறந்தநாள் காண நிதம்
இளமை பெற்று வந்தவளே
நயந்த மொழிகளிங்கு
நாலாயிரமிருந்தும்
உயர்ந்தவளே! உன்னைப்போல்
உயிமெய்யோடிருப்பவர் யார்?
பென்டிரைவ் வைத்து உள்ளீ ர்களா ?

பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE ஆகும்.
இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?
ஸ்பினாச் எனப்படும் பசலைக்கீரை
சின்ன வயதிலிருந்து நமது அம்மாக்கள் கீரை சாப்பிடுவது உடம்புக்கு நல்லது என்று அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளச்சொல்லி வற்புறுத்துவார்கள். இந்தக்கீரையில் விட்டமின் C மற்றும் E நிறைந்திருக்கிறது.
விட்டமின் Eயை உடம்பில் வழங்கி செய்யப்பட்ட ஆராய்ச்சியில் மூளை மற்றும் நெர்வ் திசுக்கள் 500 முதல் 900% வரை வளர்ச்சி கண்டிருப்பதும், மூளையிலிருந்து உடம்பு முழுக்க தகவல்களை அனுப்புவதை கட்டுப்படுத்தும் டோபோமைன் என்ற திரவம் சுரப்பது அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
மரவள்ளிக் கிழங்கு (Tapioca Cassava) ..!

மரவள்ளி (உள்நாட்டுப் பெயர்கள்: குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு) என்பது இயுபோபியேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகைச் செடி. தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைசீரியாவே இன்று உலகின் மிகப்பெரிய மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. வெப்பவலய, துணைவெப்பவலயப் பகுதிகளில் ஆண்டுப் பயிராகப் பயிரிடப்படும் மரவள்ளியிலிருந்து உணவுக்குப் பயன்படக்கூடிய கிழங்கு பெறப்படுகின்றது. இது மாவுப்பொருளைத் தரும் ஒரு முக்கிய உணவுப் பண்டமாகும். மனிதர்களின் உணவுக்கான கார்போவைதரேட்டுக்களைத் தருவதில் உலகின் மூன்றாவது பெரிய மூலம் மரவள்ளியாகும்.
மாரடைப்புக்கு ‘ஸ்டென்ட்’ சிகிச்சை !!

யாருக்காவது மாரடைப்பு வந்து விட்டால் நோயாளியை பரிசோதிக்கும் டாக்டர் “ஆஞ்சியோ பண்ணிடலாம்; ‘ஸ்டென்ட்’ வைத்து விட்டால் போதும்” என்பார்.
வெள்ளைப்படுதல் குணமாக
சின்ன வயசுலயே சில பிள்ளைகளுக்கு வெள்ளைப்படுதல் அதிகமாகி பாடாபடுத்தும். படிகாரம்னு ஒண்ணு இருக்குதுல்ல... அதை வாங்கி, மண்சட்டியில போட்டு நல்லா பொரிக்கணும். மாசிக்காயை தூளாக்கி, படிகாரம் எவ்வளவு இருக்கோ... அதே அளவுக்கு எடுத்துக்கிட்டு ரெண்டையும் கலந்துக்கிடணும். அதுல கால் ஸ்பூன் அளவு எடுத்து, வெண்ணெய் விட்டு கொழச்சி, காலைல ஒரு தடவை, சாயங்காலம் ஒரு தடவைனு சாப்பிடணும். 10 நாள்லயே குணம் கிடைக்கும். ஆனாலும், ஒரு மண்டலம் வரைக்கும் சாப்பிட்டு முடிக்கறது நல்லது.
ஆஸ்துமாவை விரட்டும் வெல்லம்…!
ரத்த சோகைக்கு தீர்வு நம் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது. தவிர இதிலுள்ள சத்துக்கள் பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மற்றும் ஜின்க் ஆகும். வெல்லத்தில் மினரல்ஸும் அதிகம் இருப்பதால் சத்துணவாக இது அமைந்துள்ளது. இதில் மேக்னிஷியம் இருப்பதால் நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும், தசைகளை ரிலாக்ஸ் செய்யும்.
சுவாரசியமாக ஒரு கட்டிடம்
கட்டிடக் கலை ஏராளமான உட்பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. கட்டிடக் கலை பற்றிப் படிப்பதும் தெரிந்து கொள்வதுமே ஒரு வகை சுவாரசியம் என்றால், புதுமைக் கட்டிடக் கலை (Novelty architecture) என்றொரு வகையே இருந்தால் எப்படி இருக்கும்?
வழக்கமான பாணியில் அல்லாத கட்டிடக் கலை புதுமைக் கட்டிடக் கலை வடிவத்தில் அடங்குகிறது. வழக்கமாக நாம் பயன்படுத்தும் ஏதேனும் ஒரு பொருள் அல்லது விலங்கு, பிடித்தமான வடிவம் போன்றவற்றை மாதிரியாகக் கொண்டு கட்டப்படும் கட்டிடங்கள் இவ்வகையில் வருகின்றன.
பழைய சைக்கிள் இருந்தால் ஜூஸ் போடலாம்
சைக்கிள் பெடலில் ஜூஸ் கருவி இயங்குவதை விளக்கும் சென்னை விஐடி மாணவர்கள்.
சைக்கிள் பெடலை சுற்றினால் இயங்கும் ஜூஸ் கருவியை சென்னை விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
சென்னை விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் அட்சய், சுபம்தார் திவேதி, சவுரப் வஸ்தவா, கஜேந்திர பத்வா ஆகியோர் சேர்ந்து சைக்கிள் பெடலை இயக்கினால் சுற்றும் ஜூஸ் கருவியை வடிவமைத்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:
எல்லாவற்றுக்கும் நாம் மின்சாரத்தை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அதே நேரம், மின்தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பல்வேறு வகைகளிலும் ஆற்றல் வீணாகாமல் சேமிக்க வேண்டியது அவசியம்.
Friday, January 3, 2014
தமிழ்நாட்டின் 7 புகழ்பெற்ற அரண்மனைகள்
தமிழ்நாட்டை பல்வேறு காலகட்டங்களில் சோழர்களும், பாண்டியர்களும், பல்லவர்களும் ஆண்டு வந்துள்ளனர். இவர்களைத் தவிர ஏராளமான குறுநில மன்னர்களும், ஜமீன்தார்களும் தமிழ்நாட்டின் பல பகுதிகளை ஆண்டுள்ளனர். அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் நாம் வாழவில்லை என்றாலும், அந்த ராஜரீக காலத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அவர்களுடைய அரண்மனைகள் பல இன்று நம்மிடையே எஞ்சியுள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று காணக்கூடிய அரண்மனைகளில் பிரபலமாக அறியப்படும் 7 அரண்மனைகள்

2013 டாப் 10 பிரச்னைகள் - தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு
மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அமைதியான சூழலை உருவாக்கித் தருவதுதான் சட்டம் ஒழுங்கின் அடிப்படை. ஆனால், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, கடந்த ஆண்டும் ஒரு பெரிய விடுப்பில் சென்றுவிட்டதுபோல் இருக்கிறது!
மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெருவிழாவை ஒட்டி மரக்காணத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் தொடர்ச்சியாக, வட மாவட்டங்கள் வன்முறைப் பூமியானது. பேருந்துகளுக்குத் தீவைப்பு, கல் எறிதல் எனப் பெரும் பதற்றம் நிலவியது. விழுப்புரம், செங்கல்பட்டு பிராந்தியங்களில் பேருந்துப் பயணம் மேற்கொள்வதே பெரும் சவாலாக அமைந்தது!
2013 டாப் 10 பிரச்னைகள் - மின்வெட்டு
இந்த ஆண்டு மட்டுமல்ல, எதிர்வரும் பல ஆண்டுகளுக்கு மின்வெட்டுதான் தமிழகத்தின் தலையாயப் பிரச்னையாக இருக்கும். வறுமைக்கோடு போலவே, மின்சாரப் பற்றாக்குறைக் கோடும் இனி நிரந்தரம்தான். இது எதிர்மறைப் பார்வை அல்ல... .jpg)
.jpg)
யதார்த்தமே இதுதான்.
தமிழ்நாட்டின் மின் தேவை 12,000 மெகாவாட். இதில் மூன்றில் ஒரு பங்கான 4,000 மெகாவாட், இப்போது பற்றாக்குறை. ஆண்டின் மூன்றில் ஒரு பகுதிக் காலத்தில் பருவக்காற்று வீசுகிறது. அப்போது தமிழகம் மின் மிகை மாநிலம். ஆண்டில் மூன்றில் ஒரு பங்கான கோடையில் மின் பற்றாக்குறை. மூன்றில் ஒரு பங்கான மழை, பனிக்காலத்தில் மின் பற்றாக்குறை.Thursday, January 2, 2014
2013 டாப் 10 பிரச்னைகள் - தண்ணீர்... தண்ணீர்...
2013-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 தலையாயப் பிரச்னைகளைப் பற்றி
பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...
பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

"2013 -ம் ஆண்டின் தொடக்கத்தில் பசுமைத் தீர்ப்பாயத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து, சென்னையில் விதிமுறைகளைப் பின்பற்றாத சுமார் 103 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் அரசால் அதிரடியாக இழுத்து மூடப்பட்டன. உடனே சென்னைவாசிகள் குடிநீர்ப் பற்றாக்குறையில் தவித்தார்கள்.
2013 டாப் 10 பிரச்னைகள் - யானைகள்
''மலை இறங்குவதும், ஏறுவதும் யானைகளின் அடிப்படை குணம். அவை ஒரே இடத்தில் நிலையாக வாழக்கூடியவை அல்ல. மனிதர்களில் நாடோடிகள் போல, யானைகள் காடோடிகள்! ஆனால், 'ஊருக்குள் புகுந்து மிரட்டும் யானைகள்’ என்றும், 'யானைகள் அட்டகாசம்’ என்றும் தொடர்ந்து யானைகளை மனிதர்களின் எதிரிகளாகச் சித்திரித்துக் கொண்டிருக்கிறோம்.2013 டாப் 10 பிரச்னைகள் - சூறையாடப்படும் இயற்கை வளங்கள்
''தென் தமிழகக் கடலோரத்தில் மணல் வளத்தை வாரிக் குவிக்கும் தாதுமணல் நிறுவனங்கள் கழிவு நீராக வெளியேற்றும் ரசாயனக் கழிவால், கடல் நீர் ரத்தச் சிவப்பாக மாறிவிட்டது. பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஆதாரமான கடல் ஆமைகள், நண்டுகள், சிங்க இறால், கடல் பூச்சிகள் போன்றவை அதிவேகமாக அழிந்துவருகின்றன. சதுப்புநிலக் காடுகள், சவுக்கு, பனை, தென்னை மரங்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு, புற்றுநோய், கர்ப்பப்பை சிதைவு, கல்லடைப்பு, தோல் நோய், மூளை வளர்ச்சி குன்றல் போன்ற கொடிய நோய்கள் பீடிக்கப்பட்டு, கடற்கரைகளில் சுதந்திரமாக நடமாடக்கூட முடியாமல் அகதிகளைப் போல வாழ்கிறார்கள் மக்கள்.Wednesday, January 1, 2014
Subscribe to:
Posts (Atom)







