Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, October 27, 2013

என்றுதான் விடியுமோ விவசாயிகளின் வாழ்வு?


கலைஞர் பதில்கள்
கேள்வி :- போலீஸ் பக்ருதீன் கைது விவகாரம் பெரிதாகிக்கொண்டு போகிறதே?
கலைஞர் :- அதைப்பற்றி நான் முன்பே விரிவாக எழுதியிருக்கிறேன். கொலைக் குற்றவாளிகள் போலீஸ் பக்ருதீன் குழுவினரா? அல்லது ஏற்கனவே டி.ஜி.பி. அறிக்கையில் தெரிவித்திருந்த நபர்களா? பக்ருதீன் எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார்? கைது செய்த போலீஸ் அதிகாரி யார்? என்பதற்கான விளக்கங்களையெல்லாம் அரசு தெளிவு படுத்த வேண்டு மென்று எழுதியிருந்தேன். ஆனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களைப்போக்கிடும் வகையில் அரசு அதைப்பற்றி விளக்கமளிக்க வில்லை. இதற்கிடையே வேலூரில் செய்தியாளர்களிடம் போலீஸ் பக்ருதீன் தான் கொலையாளி அல்ல என்றும், அவ்வாறு சொல்லக் காவல் துறையினர் வலியுறுத்துவ தாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெ. அப்துல் ரகிம் தாக்கல் செய்த மனுவில், பக்ருதீன் தனது நண்பர் என்றும், அவரைப் போலீசார் சுட்டுக் கொன்று விடுவார்களோ என்று அச்சமாக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அவருடைய வழக்கறிஞர் நேற்றையதினம் நீதிமன்றத்தில் வாதாடும்போது, பக்ருதீனின் கைது குறிப்பாணையின் நகலை வேலூர் கோர்ட்டிலிருந்து வாங்கிப் பார்த்ததாகவும், அதில் பக்ருதீனை கைது செய்ததாகக் கூறி, திருவண்ணாமலை சி.பி., சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கே. அண்ணாதுரை கையெழுத்திட்டிருப்பதாகவும், ஆனால் 15-10-2013 அன்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், பக்ருதீனைக் கைது செய்த காவல்துறையினரான லெட்சுமணன், ரவீந்திரன் மற்றும் வீரகுமார் ஆகியோருக்கு பரிசு வழங்கப்படுவதாகக்குறிப்பிடப் பட்டுள்ளது என்றும், அது உண்மையென்றால் வேலூர் நீதிமன்றத்தில் பக்ருதீனை கே. அண்ணாதுரை கைது செய்ததாகக் குறிப்பிடும் குறிப்பாணை தவறானது என்று தெரிய வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
பக்ருதீனை எந்த இடத்தில் எப்போது கைது செய்தனர் என்பதை உறுதி செய்வதற்காக அருகிலே உள்ள சாட்சிகளிடம் கையெழுத்து வாங்க வேண்டும் ஆனால் அப்படிப்பட்ட சாட்சிக் கையெழுத்து எதுவும் கைதுக் குறிப்பாணையில் காணப்படவில்லை என்றும், பக்ருதீனை கைது செய்தது குறித்து அவருடைய தாயாருக்கு தகவலை காவல் துறையினர் அனுப்பியதாகத்தெரிவித்தபோதிலும், அந்தத் தகவலைக்கொடுத்ததற்கான ஆதாரம் எதையும் அரசு தாக்கல் செய்யவில்லை என்றும், ஒருவரைக் கைது செய்யும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டு மென்பதற்கு, "டி.கே. பாசு வழக்கில்" உச்சநீதிமன்றம் வரையறுத்த விதிகளை மீறி பக்ருதீனைக் காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டு மென்றும் அப்துல் ரகிம் அவர்களின் வழக்கறிஞர் கோரியிருக்கிறார். வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீஸ் பக்ருதீன் கைது விவகாரம் இடியாப்பச் சிக்கலாகிக்கொண்டிருக்கும் நிலையில், ஜெயலலிதாவும், காவல்துறைத் தலைவரும் விளக்கமேதும் தராமலிருப்பது விந்தையாக இருக்கிறது!
கேள்வி :- "ஊழலைத்தவிர வேறு எதுவும் அ.தி.மு.க. ஆட்சியில் உயரப்போவதில்லை" என்று நீங்கள் எழுதியதற்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்லவில்லையே?
கலைஞர் :- அதற்கு எந்தவிதப்பதிலும் சொல்ல முடியாத நிலையில்தான் ஆட்சியாளர்கள் இருக் கிறார்கள். அதை உறுதி செய்வது போல இந்த வார ஜூ.வி. இதழில் "கழுகார் பதில்கள்" பகுதியில் "ஊழலைத் தவிர வேறு எதுவும் அ.தி.மு.க. ஆட்சியில் உயரப் போவ தில்லை என்று கருணாநிதி கூறுகிறாரே?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "ஜெயலலிதா கவனித்தே ஆக வேண்டிய ஊழல், முறைகேடுகள் அதிகார மட்டத்தில் பரவி வருகின்றன. அவசியமற்று நடக்கும் டிரான்ஸ்ஃபர்களுக்கான காரணங்களை மட்டும் முதல்வர் கேள்வி கேட்டால் போதும். பெரும்பாலும் இவை "ஆதாய" டிரான்ஸ்ஃபர்களாக இருக்கின்றன. குரூப் குரூப்பாக டிரான்ஸ்ஃபர் செய்வதும், அவர்கள் மறுபடியும் தங்கள் இடங்களுக்கு வர பணம் கொடுப்பதுமான, கொடுக்கல் - வாங்கல் அதிகமாகி வருகிறது. அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மத்தியில் இது பெரும் கொந் தளிப்பாகவே மாறி வருகிறது" என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மாறுதல் தொடர்பான ஒரு விஷயத்தி லேயே உண்மை இவ்வாறிருக்க எவ்வாறு என் கேள்விக்குப்பதில் அளிப்பார்கள்?
கேள்வி :- 24-10-2013 அன்று தமிழகச்சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகம் தொடங்கி விட்ட தாகப்பதில் அளித்திருக்கிறாரே?
கலைஞர் :- அந்தத்திட்டத்தைப்பற்றி கடந்த மாதம் நான் விரிவாக எழுதியிருக்கிறேன். ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்தை "வீடியோ கான்பரன்சிங்" மூலமாக முதல் அமைச்சர் 29-5-2013 அன்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே இருந்தவாறு திறந்து வைத்தார். அப்போது அவர் பேசிய போது, கழகத்தின் மீது வழக்கம் போல் பல குற்றச்சாட்டுகளைக் கூறி, நான் அவற்றுக்கெல்லாம் 31-5-2013 அன்று விளக்கமாகப்பதில் அளித்திருந்தேன்.
அ.தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகுதான் ஒகேனக்கல் திட்டம் முடுக்கி விடப்பட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார். இந்தத்திட்டம் யார் ஆட்சிக்காலத்தில் விரைந்து தீட்டப்பட்டு, நிதி ஆதாரங்களைத்திரட்டி முடுக்கி விடப்பட்டு, நிறை வேற்றப்பட்டது என்பதைப் பற்றியும், கழக ஆட்சியில் இந்தத்துறையின் அமைச்சராக இருந்த தளபதி மு.க.ஸ்டாலின் எந்த அளவிற்கு இந்தத் திட்டத்தை ஆர்வத்தோடு ஒவ்வொரு கட்டத்திலும் விரைவுபடுத்தினார் என்பதைப் பறியும், இந்தத்திட்டத்திற்காகக்கால அட்டவணை ஒன்றே தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில்தான் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் திட்டம் முடியக்கூடிய அளவிற்குக்கழக ஆட்சியில் முறைப்படுத் தப்பட்டு, அவ்வாறே பணிகள் வேகமாக நடைபெற்று வந்ததைப்பற்றியும் நான் தெளிவாகத்தெரிவித்திருந்தேன்.
ஒகேனக்கல் திட்டப்பணிகள் முழுமை பெறாமல் என்ன காரணத்தாலோ அவசர அவசரமாக இந்த ஆட்சியில் முதலமைச்சரைக்கொண்டு அதனைத்திறந்து வைத்ததைப் பற்றி நான் மாத்திரம் கூறவில்லை. ஒகேனக்கல் திட்டப் பணிகள் முழுமை பெறவில்லை, பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன என்பதற்கு அடையாளமாக "தினமலர்" நாளேடு வெளியிட்டிருந்த புகைப்படத்தையே எடுத்துக்காட்டி, அவசர அவசரமாக இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்படுவது ஏன் என்று நான் கேட்டிருந்த கேள்விக்கு முதலமைச்சர் ஏனோ இதுவரை பதிலே அளிக்கவில்லை.
நான் கூறியது உண்மை என்பதை மேலும் நிரூபிக்கத்தக்க வகையில், "இந்து" நாளேட்டிலேயே "ஞநடியீடந அயலே சரசயட யசநயள றநசந ரயீளநவ வாயவ வாந றயவநச னனை வ சநய வாநஅ" (கிராமப்புறங்கள் பலவற்றுக்கு குடிநீர் சென்று சேராததால், மக்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்) என்று வெளியிட்டிருந்தது.
12-8-2013 தேதிய "தினமலர்" நாளேட்டில் வெளிவந்த செய்தியில், "தர்மபுரி, கிருஷ்ண கிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கத்துவங்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த்திட்டம், முழுமை பெறாத நிலையில், கிராமப்பகுதிகளில், மீண்டும் "புளோரைடு" கலந்த நீரே, குடிநீராக விநியோகிக்கப்படுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலத்தடி நீரில், "புளோரைடு" அளவு, நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் கூடுதலாக உள்ளது. இந்த நீரைச்சுத்திகரிக்க வழி இல்லாததால், குடிநீராகப் பருகுவோருக்கு எலும்பு, நரம்பு சம்பந்தமான நோய்களும், பல் கறைபடிதல் உள்ளிட்ட நோய்த் தாக்கமும் அதிகரித்தது. இதையடுத்து, இரு மாவட்டத்துக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க, 2008ஆம் ஆண்டு (திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்) ஜப்பான் நிதி உதவியுடன், 1,928 கோடி ரூபாய் மதிப்பில் ஒகேனக்கல் குடிநீர்த்திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டப்பணி முழுமை பெறாத நிலையில், சில மாதங்களுக்கு முன், சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, ஓசூர், தர்மபுரி மாவட்டம், அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி தாலுகா பகுதிகளில் திட்டப்பணிகள் ஆரம்பக்கட்டத்தில் உள்ள நிலையில், திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தில் 15 முதல் 20 சதவிகிதப்பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இத் திட்டத்தின் மூலம், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய நகராட்சிப் பகுதிகளுக்கு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட போதும், நகராட்சிப்பகுதியில், முழு அளவில் குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளது. ஒகேனக்கல் குடிநீரை, முதலில் திட்ட மிட்டபடி முழு அளவில் இரு மாவட்ட மக்களுக்கும் வழங்க வில்லை. இதனால், "புளோரைடு" கலந்த நீரையே, மக்கள் குடிநீராகப்பயன்படுத்தும் நிலை தொடர்கிறது. "போர்வெல்" தண்ணீர் மற்றும் ஒகேனக்கல் தண்ணீர் இரண்டும் கலந்தே கிராமப்பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது" என்று எழுதப்பட்டிருந்தது தினமலரில்!
ஆனால் நான் எழுதியதற்கோ, "தினமலர்", "இந்து" ஆகிய நாளேடுகள் சுட்டிக் காட்டியதற் கோ ஆளும் தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. முதல் அமைச்சர் ஜெயலலிதா அவசர அவசரமாகத் திறந்து வைத்த, அந்தத்திட்டம் எந்த நிலையிலே உள்ளது என்பதைப்பற்றி, 24-8-2013 தேதிய "இந்து" நாளேடு, புகைப்படத்தோடு விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின் சுருக்கம் வருமாறு :-
"கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட மக்களின் தேவையைப்பூர்த்தி செய்வதற்காக நீண்ட நாட்களுக்குப்பிறகு 1,928 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் துவக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டிய ஊரகப்பகுதிகளின் மக்கள் இன்னமும் அந்தத் திட்டத்தின் பலனை அனுபவிக்க முடியவில்லை என்கிற நிலைதான் இருக்கிறது. அதிகாரிகளைக்கேட்டால் நிலுவையில் இருக்கும் குழாய்ப்பதிப்புப்பணிகள்தான் காரணம் என்கிறார்கள். நிலத்தடி நீரில் அதிக அளவிலான "புளோரைடு" இருப்பதன் காரணமாக இம்மாவட்ட மக்கள் பலன் அடைய வேண்டும் என்பதன் அடிப்படையில், அன்றாடம் 16 கோடி லிட்டர் தண்ணீர் காவிரி ஆற்றிலிருந்து பெறக்கூடிய வகையில் இந்தத்திட்டம் துவக்கப்பட்டது. ஆனால் காவிரிக் கரையோரம் உள்ள மக்கள் இன்னமும் 3 ரூபாய்க்கும், 4 ரூபாய்க்கும் ஒரு குடம் நீரை விலைக்கு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஏறத்தாழ 33 லட்சம் மக்களை உள்ளடக்கிய கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் ஓசூர் ஆகிய நகர மன்றங்களும், 15 நகரப் பஞ்சாயத்துக்களும் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையும் வண்ணம் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த்திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் பாதி அளவுக்கு என்று சொல்லத்தக்க வகையில், 6,755 ஊரகக்குடியிருப்புகள் குடிநீர் பெற முடியாத பரிதாப நிலைதான் உள்ளது"
- இவ்வாறு எழுதியுள்ள "இந்து" நாளிதழின் செய்தியாளர், அந்தப்பகுதியிலே உள்ள ஒருசிலரைப் பேட்டி கண்டு அதையும் வெளியிட்டிருக்கிறார்.
ஆனால் சட்டப்பேரவையில் துறையின் அமைச்சர் அனைத்துப்பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் தொடங்கியது என்று பதிலளித்திருக்கிறார். உண்மை என்ன என்பதை அந்தப்பகுதி மக்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி :- தர்மபுரி மாவட்டம் முழுமைக்கும் இரண்டு மாதமாக 144 தடை உத்தரவு போடப் பட்டிருப்பது எதைக் காட்டுகின்றது?
கலைஞர் :- இந்த அரசின் இயலாமையையும், ஜனநாயகத்துக்கு வாய்ப்பூட்டு போடும் முயற்சியையும் தான் காட்டுகின்றது. அந்த மாவட்டத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையே கலவரம் ஏற்படுமோ என்ற நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது அதிலே சம்பந்தப்பட்டவரே தற்கொலை செய்து கொண்டதால், பிரச்சினை எல்லாம் முடிந்து விட்டது. ஆனால் 144 தடை உத்தரவு மட்டும் இன்னும் திரும்பப்பெறப்படாமல் உள்ளது. இதுகுறித்து பா.ம.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றே தாக்கல் செய்து, தமிழக அரசிடம் நீதிபதி விளக்கம் கேட்டிருக்கிறார். பொதுவாக 144 தடை உத்தரவை மாதக்கணக்கில் நீட்டிப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அழகல்ல!
கேள்வி :- விவசாயிகளின் பிரச்சினை குறித்து அரசு கவனம் செலுத்தவில்லை என்றும், அண்மையில் முதலமைச்சர் அறிவித்த 287 கோடி ரூபாய் திட்டத்தினால் எந்தவிதமான பயனும் விவசாயிகளுக்குக் கிடைக்காது என்றும் கூறப்படுகிறதே?
கலைஞர் :- அதைத்தான் நான் முதலமைச்சர் அந்தத் திட்டத்தை அறிவித்த போதே குறிப்பிட்டிருந்தேன். கடந்த இரண்டாண்டுகளாக எல்லா வகைகளிலும் பாதிப்புக் காளாகி, தற்போது குறுவைச்சாகுபடியையும் அறவே இழந்து விட்டு, சம்பாவிலாவது ஏதாவது கிடைக்குமா என்று ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் விவசாயிகள் ஏமாற்றமடையும் அளவிற்கு கடைமடைப் பகுதிக்குத் தண்ணீரே சென்றடையவில்லை என்று அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட நிவாரணத் தொகையும் முறையாக அவர்களைச் சென்றடைய வில்லை என்று கூறப்படுகிறது. சாகுபடிக் காலம் முடிந்த பிறகு நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவதற்காக 287 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். விவசாயிகளின் பிரதிநிதிகளை நேரில் அழைத்துப் பேசிக் கலந்தாலோசித்து அதன் பின்னர் பிரச்சினைகளுக்குச்சுமூகமான முறையில் தீர்வு காணாமல் முதலமைச்சர் தன்னிச்சையாக திட்டங்களை அறிவிப்பதால் உருப்படியான பயன் எதுவும் கிடைக்காது. உதாரணமாக விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளான, கோடைக் காலத்தில் ஆறு, குளம், பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி இந்த ஆட்சியில் நடைபெறவில்லை மானிய விலையில் வழங்கப்பட வேண்டிய பூச்சி மருந்துகள் தரமானதாக வும், விவசாயிகளின் வாங்கும் சக்தியை அனுசரித்து, விலை குறைவாகவும் வழங்கப்படவில்லை அரசு வேளாண் மையங்களில் விவசாயத்திற்குத் தேவையான இடுபொருள்கள் போதுமான அளவிற்கு இல்லை மும்முனை மின்சாரம் வழங்கப்பட வில்லை சுமையைத் தாங்கிட முடியாமல் தளர்ந்து தள்ளாடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் வேளாண்மைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை கடைமடைப் பகுதிக்குப்பாசன நீர் வரவில்லை நீரைச் சேமித்து வைக்கத்திட்டம் தீட்டப்படாத நிலையில், மேட்டூர் அணை திறந்து விடப்பட்டும் அந்த நீர் வீணாகக்கடலுக்குப்போகும் நிலை என்பன போன்ற விவசாயிகளின் கோரிக்கைகள் எதுவும் காது கொடுத்துக் கேட்கப்படவில்லை தீர்வு காண்பதற்கான முயற்சி எதுவும் இல்லை. திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு லட்சத்து 76 ஆயிரம் விவசாயிகளுக்கு, ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 500 ஏக்கருக்கான காப்பீட்டுத் தொகை 277 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்ததற் கேற்ப, அந்தத் தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டையாவது அரசு உடனடியாகச்செய்து விவசாயிகளுக்குக் கைகொடுக்க முன்வர வேண்டும்.
கேள்வி :- சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் "லிப்டு"கள் பழுதாகிக் கிடப்ப தாகவும், பணியாளர்கள் அவதிப்படுவதாகவும் "தினமணி" செய்தி வெளியிட்டிருக் கிறதே?
கலைஞர் :- சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகக்கட்டிடம் தி.மு.கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு கட்டப்பட்ட கட்டிடம். "லிப்ட்" அமைப்பது போன்ற பணிகள் மட்டும் மீதமிருந்து, இரண்டு ஆண்டு காலம் அதைத்திறந்து பயன்படுத்தாமல் இந்த ஆட்சியில் போட்டு வைத்திருந்து, அதன் பிறகு வேறு வழியின்றி முதலமைச்சர் சென்று திறந்து வைத்தார். கழக ஆட்சியில் கட்டப்பட்டது என்பதால், அந்தக் கட்டிடத் திறப்பு விழாவில் ஒரு வார்த்தை கூடப்பேசவில்லை. வேண்டா வெறுப்பாக சென்னை மாநகரக் காவல் துறைக்கான அந்தக்கட்டிடம் திறக்கப்பட்ட நிலையில் அதன் திறப்பு விழா நடைபெற்ற பத்து நாட்களுக்குள் "லிப்டு"கள் பழுதாகி, பணியாளர்களும், அந்த அலுவலகத்திற்கு வந்த பார்வையாளர்களும் மிகுந்த அவதிப்பட்டதாக "தினமணி" செய்தி வெளியிட்டிருக் கிறது. மேலும், அந்தப் புதிய ஆணையரகத்தில் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளும் பற்றாக்குறையாக உள்ளதாக "தினமணி" எழுதியுள்ளது. காவல் துறையினருக்கு அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று பெருமை பேசிடும் இந்த அரசு முதலில் இந்த அடிப்படைப்பணிகளை நிறைவேற்றட்டும்.
ம்ம்ம்

No comments:

Post a Comment