Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, November 1, 2013

திராவிட முன்னேற்றக் கழகம்          திராவிட இன மக்களின் உரிமைகளை, தன்மான உணர்வுகளை, தனித்தன்மையை தன்னிகரற்ற சிறப்பினை பாதுகாத்திடவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், “மக்கள் குரலே மகேசன் குரல்” என்ற தத்துவத்தின் அடிப்படையில், நாடு வாழ, நலிவுகள் தீர போராடவும், திராவிட முன்னேற்ற கழகத்தை 1949 செப்டம்பர் 17ல் சென்னை ராபின்சன் பூங்காவில் அப்போதைய கோவை மாவட்டம் தற்போதைய திருப்பூர் மாவட்டம் பெத்தாம்பாளையம் பழனிச்சாமி அவர்கள் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கினார்.          தி.மு.கழகத்தின் முதல் அமைப்பு கூட்டடம் 18.9.49 அன்று காலை 7 மணிக்கு சென்னை பளக்காரத் தெரு 7வது எண் இல்லத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில்தான் பேரறிஞர் அண்ணா அவர்களை பொதுச் செயலாளராகவும், நாவலர் இரா.நெடுஞ்செழியன், தலைவர் கலைஞர், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராஜன், ஈ.வெ.கி. சம்பத் உள்ளிட்ட 130  பேரைக் கொண்ட பொதுக் குழுவையும், பொதுக் குழுவிலிருந்து ஒரு பிரச்சாரக் குழுவும், அமைப்பு குழுவும், நிதிக்குழுவும், சட்ட திட்டக் குழுவும் உருவாக்கப்பட்டு திராவிட முன்னேற்ற கழகம் சமூக மாற்றத்திற்கான பயணத்தை தொடங்கியது. திராவிடர் கழகத்திற்கு போட்டியாக அல்ல அதே கொள்கை பாதையில்தான் திராவிடர் கழகத்தின் அடிப்படை கொள்கைகளின் மீதே தான் திராவிட முன்னேற்ற கழகம் அமைக்கப்பட்டுள்ளது.


           அடிப்படை கொள்கைகளில், கருத்துக்களில் மாறுதல், மோதுதல் எதுவும் கிடையாது. சமுதாயத்துறையிலேயே சீர்திருத்தம், பொருளாதார துறையிலே சமதர்ம குறிக்கோள், அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை ஆகிய கொள்கைகள்தான் திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்பாடுகள் ஆகும். அம்மூன்று துறையிலும் உள்ள இருண்ட நிலையை போக்கி ஒளி நிலையை உண்டாக்க வேண்டும் என்பதை காட்டும் பொருள்படும் வகையில்தான் கருப்பு அரசியல், சமுதாயம், பொருளாதார வாழ்விலள்ள இருண்ட நிலையை உணர்த்தி நிற்கும் அறிகுறியாகும்.


          சிவப்பு அம்மூன்று துறையிலும் உள்ள இருண்டநிலையை போக்கி ஒளி நிலையை அழித்துக் கொண்டு வர வேண்டும். அழித்துக் கொண்டு வருகிறது இருண்ட வானின் அடியில் தோன்றி எழும்பும் இளம்பாரிதி ஒளி போல் என்ற கருத்துடன் கருப்பு மேலும், சிவப்பு கீழுமாக உருவாக்கப்பட்டு உள்ளதுதான் கழகத்தின் இரு வண்ணக் கொடி ஆகும். கழக கொடி நீண்ட சதுர வடிவில் மேல் சரிபாதி கருப்பு நிறமாகவும், கீழ் சரிபாதி சிவப்பு நிறமாகவும் அமைந்து இருக்க வேண்டும். அகலம் 2 அடியிருந்தால் நீளம் 3 அடி இருக்க வேண்டும்.
          1955 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 4 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை தியாகராயர் கல்லுரியில் திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு கூட்டம் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக கழகத்தின் பொதுச் செயலாளர் தேர்வு நடைபெற வேண்டும் என்றும், ஜனநாயக முறைப்படி தாம் மீண்டும் பொதுச் செயலாளராக இருப்பதற்கு சம்மதிக்கவில்லை என்றும், மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பை அளித்து தானும் உடன் இருந்து பணிபுரிவதாகவும் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசிய பிறகு பொதுக்குழு அதை ஏற்றுக் கொண்டு கழகத்தின் பொதுச் செயலாளராக நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களை ஏகமனதாக தேர்வு செய்தது.          சட்ட மன்றத்திற்கு சென்றால் மட்டுமே ஜனநாயக வழியில் கழக இலட்சியங்களை நிறைவேற்ற முடியும் என்பதற்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் 1956 இல் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநில மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தி அதற்கான ஒப்புதலை தொண்டர்களிடம் பெற்றார். 1957இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. 15 சட்டமன்ற இடங்களிலும், 2 பாராளுமன்ற இடங்களிலும் வெற்றி பெற்றது. பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், பேராசிரியர் அன்பழகனார் ஆகிய முன்னணி தலைவர்களை வெற்றிவாகை பாடினார். அசைக்க முடியாது என ஆணவ முரசம் கொட்டிய காங்கிரஸ் கோட்டையில் கீறல்கள் உருவாயின. இவ்வெற்றியால் தி.மு.கவிற்கு உதயசூரியன் தேர்தல் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது.

                                   ‘உதித்து விட்டான்’ செங்கதிரோன் தென்திசையில்
                                    கொதித் தெழுவோம் கொத்தடிமை தீர்வதற்கே'
என தி.மு.க வீரர்கள் பரணி பாடினர். கழகத்தின் செல்வாக்கு கோபுரம் போல உயர்ந்து எழுந்தது. 1959இல் சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. 100 பேர் கொண்ட மாநகராட்சி மன்றத்தில் தி.மு.க. 45 இடங்களைப் பெற்றது. தி.மு.க. உறுப்பினர் அ.பொ.அரசு கழகத்தின் முதல் மேயராக பதவியேற்றார். தமிழகத்து அரசு கட்டியிலும் தி.மு.கழகமே அமரப் போகிறது என்பதற்கு இது ஓர் அறிகுறியாக அமைந்தது.

           25.09.1960 ஆம் ஆண்டு நடைபெற்ற கழக அமைப்பு தேர்தலில் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு கழகத்தினர் பலர் போட்டியிட்ட காரணத்தினால் பொதுச் செயலாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், கழக மேல் மட்டத் தலைவர்களும் முயன்று முடியாமல் போகவே கழகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்கி, கோஷ்டி மனப்பான்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க பேரறிஞர் அண்ணா அவர்களே பொதுச் செயலாளராக இருக்க வேண்டுமென அனைவரும் முடிவுக்கு வந்தனர். அதன்படியும், புதிய சட்டதிட்டத்தின் படியும் கழகத்தின் அவைத் தலைவராக ஈ.வெ.கி. சம்பத் அவர்களையும், பொதுச் செயலாளராக பேரறிஞர் அண்ணா அவர்களையும், பொருளாராக தலைவர் கலைஞர் அவர்களையும், தலைமைக்கழக செயலாளராக கே.ஏ.மதியழகன் அவர்களையும், அமைப்பு செயலாளராக என்.வி.நடராஜன் அவர்களையும், பிரச்சார செயலாளராக பேராசிரியர் க.அன்பழகனார் அவர்களையும், கழக வெளியீட்டு செயலாளராக சி.பி.சிற்றரசு அவர்கள் உள்ளிட்ட கழகத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலர் செயற்குழு உறுப்பினர்களாக கழகத்தின் சட்டதிட்ட விதிப்படி தேர்வு பெற்றார்கள்.

          ஈ.வெ.கி. சம்பத் அவர்கள் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 19 ஆம் நாள் கழகத்தை விட்டு வெளியேறி புதிய கட்சியை தொடங்கினார். அதன் பிறகு நடைபெற்ற கழகத்தின் பொதுக்குழுவில் தி.மு.கழகத்தின் அவைத் தலைவராக நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.

          தி.மு.க. திராவிட நாடு கோரிக்கை மூலமாகவும், சாதியொழிப்பு, இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் மூலமாகவும், தொடக்கத்தில் வளாச்சி பெற்று வந்தது. தனித்துவமான மேடைப் பேச்சு, திரைப்படம், பத்திரிக்கை, நாடகம் போன்ற ஊடகங்கள் மூலமாக தீவிர பிரச்சாரத்தில் மக்கள் செல்வாக்கை பெற்றது. 1963 இல் சீனா இந்தியாவை ஆக்கிரமிப்பு செய்த போது இந்திய அரசுக்கு முழு ஆதரவு அளித்த தி.மு.கழகம் நாட்டு நலனையும், ஒற்றுமையையும் கருத்தில் கொண்டு திராவிட நாடு கோரிக்கையை தற்காலிகமாக கைவிட்டது.

          1963 இல் மத்திய அரசின் மொழிக் கொள்கையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் தி.மு.க. மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டது. 1967இல் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியலிருந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அமைந்த கூட்டணியில் தி.மு.க. தலைமையில் தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் தோல்வி அடைந்தது. தி.மு.க. ஆட்சியை பிடித்தது. பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலைமைச்சரானார். அவர் இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தார். 1969இல் அண்ணா மறைவை தொடர்ந்து டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றார்.

          1969 இல் பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்கு பிறகு நடைபெற்ற கழக பொதுக் குழுவில் தலைவர் கலைஞர் அவர்கள் கழகத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

           1972 ஆம் ஆண்டு எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் கழகத்திலிருந்து வெளியேறி அ.தி.மு.க தொடங்கினார்.

          1974 ஆம் ஆண்டு நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் ஐந்தாம் அமைப்பு தேர்தலில் இரண்டாவது முறையாக கழகத்தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்

          1978 ஆம் ஆண்டு நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் கழகத்திலிருந்து விலகினார். அதையொட்டி நடைபெற்ற பொதுக்குழுவில் தலைவர் கலைஞர் கழகத் தலைவராகவும், பேராசிரியர் க.அன்பழகனார் பொதுச் செயலாளராகவும், சாதிக்பாட்சா அவர்கள் பொருளாளராகவும் முறையாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

           1994 ஆம் ஆண்டு சாதிக்பாட்சா அவர்கள் மறைந்தார். 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற 11 வது தி.மு.கழக அமைப்பு தேர்தலில் தலைவர் கலைஞர் அவர்கள் கழகத்தலைவராகவும், பேராசிரியர் க.அன்பழகனார் பொதுச் செயலாளராகவும், ஆர்க்காடு வீராச்சாமி அவர்கள் பொருளாளராகவும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்கள்.

           2003 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் தலைவராக போட்டியின்றி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்

          2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தி.மு.கழகத்தின் 13வது அமைப்பு தேர்தலில் பத்தாவது முறையாக தலைவர் கலைஞர் அவர்கள் தலைவராகவும், பேராசிரியர் அன்பழகனார் அவர்கள் பொதுச் செயலாளராகவும், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பொருளாளராகவும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுத்த மாபெரும் இயக்கமான தி.மு.கவிற்கு ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 60000 க்கும் மேற்பட்ட கிளைக் கழகங்கள் உள்ளன. உள்கட்சி தேர்தல்களை காலந்தவறாது ஜனநாயக வழியில் நடத்தும் ஒரே இயக்கம் தி.மு.க. ஆகும். பல்வேறு சமூகத்தினரின் நலன் காக்க தொண்டர், இளைஞர், மகளிர், மாணவர், தொழிலாளர், நெசவாளர் உழவர், ஆதி திராவிடர், மீனவர் என தனித்தனி அணி அமைத்து பணிபுரிகிறது. சென்னையில் கம்பீரமாக நிற்கும் கழகத்தின் தலைமைச் செயலகம் “அண்ணா அறிவாலயம்” தலைவர் கலைஞாரின் தளரா உழைப்பிற்கும், தொண்டர்களின் ஆதரவுக்கும் தலையாய சான்று ஆகும்

          தி.மு.கழகத்தின் இம்மகத்தான வளர்ச்சிக்கும், சாதனைக்கும் முதன்மை காரணங்கள் ஏழை, எளிய மக்களின் நலனை தனது இலட்சியமாக ஏற்றது ஆகும். அவர்களோடு தொடர்ந்து பணியாற்றியது. அவர்களுக்காக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பல நடத்தியது. அவர்களின் தூய தொண்டிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம் தி.மு.க.

          தி.மு.கழகத்தின் முதல் மாநில மாநாடு சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. மைதானத்தில் 1951 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

          தி.மு.கழகத்தின் முதல் மாநில மாநாடு சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. மைதானத்தில் 1951 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

          தி.மு.கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு திருச்சியில் 1956 ஆம் ஆண்டு மே திங்கள் 17,18,19,20 ஆகிய தேதிகளில் பொதுச் செயலாளார் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் மாநட்டுத் தலைவரை வழிமொழிந்து பேசிய பேரறிஞர் அண்ணா அவர்கள் தம்பி வா!  தலைமை தாங்க வா! உன் ஆணைக்கு நாங்கள் எல்லோரும் அடங்கி நடப்போம்!  தலைமை ஏற்று நடத்த வா!  என்று கூறிய மணி வாசகங்கள் கூடியிருந்த லட்சோபலட்சம் மக்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி பெருக்கெடுத்தோட செய்த நிகழ்வு வரலாறு ஆகும். இம்மாநாட்டில் தான் தி.மு.கழகம் பொதுத் தேர்தலில் கலந்த கொள்வதா? வேண்டாமா? என்ற பிரச்சனைக்கு முடிவெடுக்கப்பட்டது. மாநாட்டில் கலந்து கொண்ட அறுபதினாயிரத்திற்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் என்போர் சிவப்பு நிற பெட்டியிலும், வேண்டாம் என்போர் கருப்பு நிற பெட்டியிலும் வாக்குகளை நிறப்புமாறு கோரப்பட்டது. அதன் அடிப்படையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில் 56942 பேர் தி.மு.கழகம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும், 4203 பேர் போட்டியிட வேண்டாம் என்றும் வாக்களித்து இருந்தனர். பெரும்பான்மை கருத்துப்படி பொதுத் தேர்தலில் தி.மு.கழகம் போட்டியிடுவது என்று கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு தீர்மானித்து வரலாறு ஆகும்.

          கழகத்தின் மூன்றாவது மாநில மாநாடு மதுரை திருப்பரங்குன்றத்தில் 1961 ஆம் ஆண்டு ஜுலை திங்கள் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் கழக பொதுச் செயலாளர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கழகத்தின் நான்காவது மாநில மாநாடு சென்னை விருகம்பாக்கத்தில் 1966 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 29, 30, 31 மற்றும் 1967 ஆம் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

          கழகத்தின் ஐந்தாவது மாநில மாநாடு கோவையில் 1975 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

          கழகத்தின் ஆறாவது மாநில மாநாடு திருச்சியில் 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 9, 10, 11 ஆகிய தேதிகளில் எழுச்சியுடன் நடைபெற்றது. அம்மாநாட்டு திடலில் தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் திராவிட இயக்க வரலாறு புடைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.

          கழகத்தின் ஏழாவது மாநில மாநாடு கோவையில் 1993 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 26, 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது.

          1993 ஆம் ஆண்டு வை.கோபால்சாமி அவர்கள் கழகத்திலிருந்து வெளியேறி கழக கொடிக்கும், உதயசூரியன் சின்னத்திற்கும் உரிமை கோரினார். கழக கொடியையும், சின்னத்தையும் காப்பாற்றி கொடுத்தவர் நம் தலைவர் கலைஞர்.

          கழகத்தின் எட்டாவது மாநில மாநாடு திருச்சியில் 1996 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அம்மாநாட்டில் இளைஞர் அணியின் திராவிட இயக்க வரலாற்று காட்சியும், தென்னரசு தியாகிகள் மணி மண்டபமும் திறக்கப்பட்டன.

           கழகத்தின் ஒன்பதாவது மாநில மாநாடு திருச்சியில் 2006 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 3,4,5 ஆகிய தேதிகளில் வரலாற்று சிறப்பு மிக்க வகையில் நடைபெற்றது. மாநாட்டின் முதல் நாள் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி வெள்ளிவிழா மாநாடு சிறப்புக்குரியது ஆகும்.

 தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு தான்

          1. சென்னை மாகாணம் தமிழ்நாடு எனப் பெயர் பெற்றது.
          2. சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும், சட்டம் இயற்றியது.
          3. இருமொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தவும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.   

No comments:

Post a Comment