Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, October 29, 2013

வலுவிழக்கும் நம் பாரம்பரிய காய்கனிகள், மூலிகைகள்:


 
 
திட்டமிட்டு பரப்பப்பட்ட மரபணு மாற்ற விளைபொருட்களால் நம் பாரம்பரிய நாட்டு ரகங்களில் யாரும் அறியாமலேயே மிகப்பெரிய மோசமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. நமது பாரம்பரிய வேளாண் வித்துக்கள் மற்றும் நமது பாரம்பரிய மூலிகைகள் தற்போது யாரும் அறியாவண்ணம் மிகப்பெரும் மாற்றம் பெற்றுள்ளது.

அதாவது, கடந்த காலங்களில் மரபணு மாற்ற விதைகள் இங்கு வராததற்கு முன்னர் இருந்த அளவைவிட தற்போது பாரம்பரிய விளைபொருட்கள் இப்போது உருவத்தில் பெரிதாகியுள்ளன.
குறிப்பாக: காடுகளில் தானாக விளையும் கண்டங்கத்தரி, கொமட்டிக்காய் போன்றவைகள் கடந்த காலங்களில் உருவத்தில் மிகவும் சிறிதாக இருந்தன. ஆனால், இன்று அவை எங்கு கிடந்தாலும் முன்புபோன்று உருவத்தில் சிறிதாக இல்லாமல், உருவம் மிகவும் பெரிதாகியுள்ளன. இதற்கான காரணம்: மரபணு மாற்ற பயிர்களின் மலரிலுள்ள மகரந்த துகள்கள் இதன் துகள்களோடு ஈக்கள், தேனீக்கள், வண்டுகளால் பரப்பப்பட்டு, இவ்வாறு உருமாற்றம் நிகழ்ந்துள்ளன. இதனால், நம் பாரம்பரிய காய்கறிகள், மூலிகைகள் தங்கள் பாரம்பரிய மருத்துவத் தன்மையை இழந்துள்ளன. இதற்கு, அன்னிய விதை நிறுவனங்களும், அதை இங்கு விற்கும் நிறுவனங்களுமே காரணம். இதை தகுந்த ஆய்வுகள் மேற்கொண்டு இந்நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், இன்றைய அரசுகளை வழிநடத்துபவர்களே அதுபோன்ற நிறுவனகளின் ஏஜெண்டுகளாக இருக்கிறார்கள். இப்படியே போனால், கண்டிப்பாக நம் நாடு நம் பாரம்பரியத்தை அனைத்து விளைபொருட்களிலும், நமது மூலிகைகளிலும் இலக்கவேண்டியிருக்கும்.

1 comment:

  1. அருமையான பதிவு !
    இணையதள காய்கனி அங்காடி, சென்னை.
    http://vegvillage.in/

    ReplyDelete