Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, October 23, 2013

அத்தி பழமும் அதன் பயன்களும்


அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது
1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,

2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,
3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.
விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவி லும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள
சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்



1.செவ்வாழைப்பழம்
கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்
2.பச்சை வாழைப்பழம்
குளிர்ச்சியை கொடுக்கும்
3.ரஸ்தாளி வாழைப்பழம்
கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.
4.பேயன் வாழைப்பழம்
வெப்பத்தைக் குறைக்கும்
5.கற்பூர வாழைப்பழம்
கண்ணிற்குக் குளிர்ச்சி
6.நேந்திர வாழைப்பழம்
இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்
7.ஆப்பிள் பழம்
வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது
8.நாவல் பழம்
நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்
9.திரட்சை
1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்
10.மஞ்சள் வழைப்பழம்
மலச்சிக்கலைப் போக்கும்
11.மாம்பழம்
மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்
12.கொய்யாப்பழம்
உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புன் இருந்தால் குணப்படுத்தும்.
13.பப்பாளி
மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது.
14.செர்ரி திராட்சை
கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.

1 comment:

  1. குடல் அலற்சி அழற்சி என்று எழுதுவது நல்லது

    ReplyDelete