Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, October 23, 2013

வீட்டில் கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி


நன்கு வளர்ந்த கற்றாழையை தேர்வு செய்து கவனமாக மென்மையாக மற்றும் மிக அகலமான கற்றாலைகளை பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்களுக்கு கற்றாலையை நேராக வைத்து அதிலிருந்து வெளியாகும் மஞ்சள் நிற திரவத்தை முழுவதுமாக நீக்கிவிடவேண்டும். பின்னர் கற்றாலையை நன்கு கழுகி முடிந்தவுடன் கற்றாலையில் உள்ள ஜெல்லை எடுத்து ஒரு க்யூப்ல போட்டு அடைத்து வைக்க வேண்டும்.


அலோ வேரா ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்


கற்றாழை, மஞ்சள், தேன், பால், ரோஸ் வாட்டர்

எப்படி செய்வது
?
மஞ்சள், தேன், பால், ரோஸ்வாட்டர் என அனைத்திலும் ஒரு தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் தயாரித்து வைத்துள்ள அலோ வேரா ஜெல்லைப் போட்டு கலந்தால் பேஸ்ட் தயாராகிவிடும். சுமார் 20 நிமிடங்கள் முகம், கழுத்தில் தேய்த்துக்கொள்ளலாம். பின்னர் முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுகி தூய்மையான முகம் துடைக்கும் டவல் கொண்டு முகத்தை ஒத்தி எடுக்கலாம்.

சன்லெஸ் நீக்க கற்றாழை ஃபேஸ் மாஸ்க்:

தேவையான பொருட்கள்
கற்றாழை, எலுமிச்சை சாறு.

எப்படி செய்வது?


வெயிலில் அலைந்து விட்டு வீட்டிற்கு வந்தால் முகம் கருப்பாகி விடும். இதை போக்க கற்றாழை ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம்.

கற்றாலை ஜெல், எலுமிச்சை சாறு கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 10 நிமிடங்களுக்கு பின்னர் முகம் கழுவ வேண்டும்.

No comments:

Post a Comment