Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 29, 2012

தெரிந்து கொள்வோம் வாங்க!பகுதி-7

அறியாத சில விசயங்களை
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-7


உலகில் மொத்தம் 180 வகையான குதிரைகள் இருக்கின்றன. மிகக் குட்டையான வகைக் குதிரையின் பெயர் பாலபெல்லா. இதன் உயர் 75 செ.மீட்டர். மிகப்பெரிய குதிரையின் பெயர் ஷயர். இதன் எடை 910கிலோகிராம். குதிரைக்கு நல்ல நினைவாற்றல் உண்டு. இன்பமான நிகழ்வு அல்லது மிகவும் துன்பமான நிகழ்ச்சி நடந்த பல ஆண்டுகளுக்குப் பின்னரும் அதை நினைவில் வைத்திருக்குமாம் குதிரைகள்
*அண்டார்டிக் பகுதியில் காணப்படும் நீலத் திமிங்கலத்துக்கு ஒரு நாளைக்கு பத்து லட்சம் கலோரி சத்து தேவைப்படுகிறது. மனிதர்களுக்கு தேவை 2,500 கலோரிதான். இதற்காக நீலத் திமிங்கலம், கிரில் எனப்படும் கடற்பாசியை விழுங்கி விடுகிறது. இந்தக் கடற்பாசியில் 56 சதவீதம் புரதச் சத்து இருக்கிறது.

*உலகெங்கும் ஏப்ரல் முதல் தேதியை எல்லாநாடுகளும் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடுகின்றன. ஆனால் பிரான்ஸ் நாட்டில் மட்டும் அன்றைய நாள் மீன்கள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

*பறவைகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. எனவே அவை நெடுநேரம் எவ்வளவு வேகமாகப் பறந்தாலும் வியர்த்துக் கொட்டுவதில்லை.

*பென்சிலின் என்னும் உயிர் காக்கும் மருந்து பென்சிலியம் என்னும் பூஞ்சையிலிருந்து எடுக்கப்படுகிறது.

பெனிசிலியம் அழகிய அங்ககப் பொருட்களின் மீது வளரும்.

பாலினம் இல்லாத இனப் பெருக்கத்தின் மூலம் புதிய பெனிசிலியம் உருவாக்கப்படுகிறது.

பெனிசிலியம் ஆல்கா பிரிவினத்தைச் சார்ந்ததாகும்.

பெனிசிலியம் பாலாடைக் கட்டி தயாரிக்க பயன்படுகிறது.

பெனிசிலியம் எக்ஸ்பேன்சம் என்னும் பூஞ்சை ஆப்பிள், திராட்சையில் அழுகலை ஏற்படுத்தக் கூடியவை.


*இந்தியாவில் முதன் முதலில் தபால் தலை 1852-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆரம்ப காலத்தில் இந்தியத் தபால் தலைகள் வட்டவடிவில் இருந்தன.


முள்ளம் பன்றி காட்டுப்பிராணி. இதன் உடம்பு முழுவதும் விரைப்பாக நிறுத்தும் சக்தியை இதன் தசைகள் பெற்றுள்ளன. இவை பகல் நேரங்களில் புதர்களிலும் மரப் பொந்துகளிலும் ,பாறை இடுக்கு களிலும் மறைந்திருக்கும். இரவு நேரங்களில் வெளிப் பட்டு இரை தேடச் செல்லும். பகை மிருகங்கள் தாக்க வந்தால் உடம்பிலுள்ள முட்களை விரைப்பாக நிமிர்த்தி, பந்து போல் உருண்டையாக்கிக் கொள்ளும். பாம்புக்கடி விஷம் முள்ளம் பன்றியை ஒன்றும் செய்யாது. இது சுண்டெலி, தவளை போன்ற பறவைகளின் முட்டைகளைத் தின்னும்.

காண்டா மிருகம் மிகவும் பெரிய உருவமுடையது. 1.7 மீட்டர் உயரமும், 2 ஆயிரம் கிலோ எடையும் கொண்டது. 50 சென்டி மீட்டர் நீளமுள்ள ஒற்றைக் கொம்பை உடையது. (இரட்டைக் கொம்பு கொண்ட காண்டா மிருகங்களும் உண்டு) இதன் தோற்றம்தான் பயமுறுத்துவதாக இருக்கிறதே தவிர இது சாந்தமான மிருகம். சைவப் பிராணி. தழையையும் புல்லையுமே உணவாகக் கொள்கிறது. இதன் கொம்பு அடர்த்தியான ரோமங்களால் ஆனவை. இந்த கொம்பு எதிரிகளை விரட்டவும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகிறது. காண்டா மிருகத்துக்கு கால்களில் மூன்று விரல்கள் உள்ளன.


பறவை இனத்தில் மூன்றில் ஒரு பகுதி பாடக் கூடிய பறவைகள். அவைகளில் வானம்பாடி, இரவுப் பறவை ஆகியவை சிறந்த பாடும் பறவைகளாகும். ஐரோப்பாவில் பல வகையான பாடும் பறவைகள் உள்ளன.

பாடும் பறவைகள் பொதுவாக மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவே பாடுகின்றன. வழி தவறிச் சென்ற பறவைகளை அழைப்பதற்காகவும் சில பறவைகள் பாடுகின்றன. தன் எல்லைக்குள் மற்ற பறவைகள் வரக் கூடாது என எச்சரிக்கை விடுப்பதற்காகவும் சில பறவைகள் பாடுகின்றன.


விலங்குகள், பூச்சிகள், ஒரு வித வாசனையை வெளிப்படுத்தி அதன் மூலம் செய்திகளைத் தெரிவிக் கின்றன. இந்த வாசனைப் பொருளை `பெரமோன்'கள் என்றழைக்கிறார்கள்.

மான்கள் இனத்தில் ஒன்றான சிவப்பு மான், தன் கண்களுக்கு அருகே சுரக்கும் ஒரு வித நீரை புதர்கள் மீதும், மரங்களின் மீதும் வீசித் தெளித்து அதன் மூலம் அவற்றின் எல்லையை வரையறுத்துக் கொள்கின்றன.


குழந்தைகள் இனிப்பை விரும்பிச் சாப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது. பொதுவாக உடல் நலமாக உள்ள குழந்தைகள் எப்போதும் துருதுருவென்று இருக்கும். தூங்கும் நேரம் தவிர, எஞ்சிய வேளைகளில் ஓடியாடி விளையாடிக் கொண்டும் வேறு ஏதாவது செய்து கொண்டும் இருக்கும்.இவ்வாறு சுறுசுறுப்பாக இயங்கும்போது மிகுந்த ஆற்றல் செலவாகிறது. இதனை ஈடு செய்ய எளிதாக ஆற்றலையளிக்கும் சர்க்கரைப் பொருட்கள் தேவைப்படுகிறது. சுவை மிகுந்த இனிப்புப் பண்டங்களில் கார்போஹைடிரேட் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் இவற்றை பெரிதும் விரும்புகின்றன.


பாபா வெஸ்ட்ரே ஐலண்ட் என்கிற அமெரிக்கப் பயணிகள் விமானம் வெஸ்ட்ரே ஐலண்டுக்கும் ஸ்காட்லாந்துக்கும் இடையிலுள்ள ஒன்றரை மைலுக்காக பறக்கிறது. பயண நேரம் இரண்டே நிமிடங்கள்தான்.


ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு வகைச் செடியிலிருந்து தயாரிக்கப்படும் டாலிம் என்ற பொருள் சர்க்கரையை விட 5 ஆயிரம் மடங்கு இனிப்பானது.

தெருவிளக்கைக் கண்டு பிடித்தவர், முதன் முதலில் அரசியல் கார்ட்டூன் வரைந்தவர், வாடகை நூலகத்தை ஆரம்பித்தவர், ஆடும் நாற்காலி, ஸ்டவ், இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர், செய்தித்தாளை தபாலில் அனுப்பும் முறை, தெருவை சுத்தம் செய்யும் பிரிவை துவக்கியவர், நவீன தாபல்நிலையத்திட்டத்தை உருவாக்கியவர்- இப்படி பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர், பெஞ்சமின் பிராங்க்ளின்.

இத்தாலியிலுள்ள ரெல்ரேன்கோ என்னும் சிறு நகரத்தில் ஒரு நாய் ஆறு குட்டிகளைப் போட்டது. அவற்றில் 5 கருப்பு வெள்ளை நிறத்தில் இருந்தன. ஒன்று மட்டும் பச்சை நிறத்தில் இருந்தது. இதுதான் உலகின் முதல் பச்சை நிற நாய்க்குட்டி. 25 நாட்களுக்குப்பின்னர் நாய்க் குட்டியின் நிறம் தனி பச்சை நிறமாகவே மாறிவிட்டது.

இந்தியாவில் புகை பிடிக்கும் பழக்கத்தை போர்ச்சுகீசியர்கள்தான் அமெரிக்காவிலிருந்து 17-ம் நூற்றாண்டு வாக்கில் கொண்டு வந்தனர்.

அது மட்டுமல்ல, போர்ச்சுகீசியர்கள் பொடி போடும் பழக்கத்தையும் தங்களுடன் கொண்டு வந்தனர். புகையிலைச் செடியும் அமெரிக்காவிலிருந்துதான் இந்தியாவிற்கு வந்தது.

சிகரெட் பிடிப்பவர்களுக்கு சுவாசப்பை புற்று நோயும், பைப் பிடிப்பவர்களுக்கு உதட்டுப் புற்று நோயும், சுருட்டு பயன்படுத்துபவர்களுக்கு நாக்கில் புற்றுநோயும் ஏற்படும்.
*தொடரும்...

முழு அளவு படத்தைப் பார்
இணைய தள கடலில் மூழ்கி உங்களுக்காக முத்துக்கள் எடுத்து கோர்த்து தருபவன்,
Engr.Sulthan
-

No comments:

Post a Comment