Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, May 28, 2012

உடலைக் குளிர வைக்கும் வெள்ளரிக்காய்!

உடலைக் குளிர வைக்கும் வெள்ளரிக்காய்!


Posted Image

வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியையும், நீர்ச்சத்தையும் வழங்க வல்லது. இத்தகைய வெள்ளரிக்காய் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் சிறந்த காயாகும். கோடைகாலத்தில் ஏற்படும் அதிகமான நா வறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும்.

வெள்ளரியில் வைட்டமின்களும், கலோரிகளும் குறைவாக உள்ளது. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு.

இதில் பொட்டாசியம் மிகுதியாக இருப்பதால் இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகமாக உருவாக்கும். மேலும் புகைப்பிடிப்போரின் குடலை சீரழிக்கும் நிக்கோடின் நஞ்சை அழிக்கும் ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.

வெள்ளரிக்காய் மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது. மூளையில் வேலை அதிகம் ஆகும் போது கபாலமானது சூடு அடைகிறது. இதை சாப்பிடுவதன் மூலம் மூளையானது குளிர்ச்சியடைந்து புத்துணர்ச்சியாகும். மேலும் வெள்ளரிக்காய் மூட்டு வலி, வீக்க நோய்களை குணமாக்குகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது வெள்ளரிப்பிஞ்சு சாப்பிட்டால் பித்தத்தை தணித்து, சிறுநீரக கோளாறுகளைச் சரிசெய்கிறது. நீரிழிவு நோயாளிகளும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் அதிகமாக சாப்பிட்டால் மிகவும் நல்லது.

நுரையீரல் கோளாறு,இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆகவே வெள்ளரிக்காய் சாப்பிடுங்க! உடலை குளிர்ச்சியா வெச்சுகோங்க!

No comments:

Post a Comment