Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, May 28, 2012

தினமும் மூளை வளருகிறது! - ஒரு சிறு தகவல்

தினமும் மூளை வளருகிறது! - ஒரு சிறு தகவல்
மூளை - மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும் அதுதான் மனித உறுப்புகளில் சிக்கலானதும் அதுதான். மனிதனை ஆட்டிப் படைப்பதுவும் அதுதான். 'ஆலும் வளரனும் அறிவும் வளரனும்' என்பதொற்கொப்ப மனிதனின் பாரிய வளர்ச்சியோடு மூளையும் ஒவ்வொரு நாளும் வளருகிறது.
தினமும் மூளை வளருகிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக குறைந்தது 10 000 நரம்பு செல்கள் (நியுரோன்) மூளையில் பிறக்கின்றன. பிறந்த சில நாட்களிலேயே அவை அழிந்தும்விடுகின்றன. தினமும் செல்கள் பிறந்து பின்பு இறந்தும் போவதால் என்ன பயன்? இதில் மூளை வளருகிறது என்று எப்படி சொல்வது?புதிதாய் பிறந்த நரம்பு செல்கள் சாகவிடாமல் அவைகளை நமக்கு பயனளிக்கும் வகையில் மாற்ற ஒரே வழி; ஒவ்வொரு நாளும் புதிதாய் கற்றுக்கொள்வதுதான். புதிதாய் பிறக்கும் செல்லுக்கு வேலை கொடுக்கவில்லையானால் அது செத்துப்போய்விடும்.

எலிசபெத் கோல்டு என்பவர் நரம்பு செல்கள் புதிது புதிதாக மூளையில் பிறக்கிறது என்று கண்டறிந்த பின்னர் நரம்பியலில் பல ஆய்வுகள் அதன் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டன. மூளையில் காதுக் கதுப்புக்கு உள்ளே இருபுறமும் உள்ள 'ஹிப்போக் கேம்பஸ்' என்ற உறுப்பில்தான் புதிதாக நரம்பு செல்கள் தினமும் தோன்றுகின்றன எனவும் அறியப்பட்டுள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கான நரப்பு செல்கள் உருவாகி முழுவளர்ச்சியை 14 நாட்களில் அடைகின்றன. இப்படி தினமும் பத்தாயிரம் செல்களாவது முற்றி நினைவுகளை பதித்துக்கொள்ள தயாராய் நிற்கின்றன. அன்றைய தினம் ஏதாவது நினைவில் பதிய வேண்டியதாய் இருந்தால் அதற்காக ஒருசில செல்கள் மட்டும் நிறுத்து வைக்கப்பட்டு மற்றவை உடனே அழிக்கப்படுகின்றன. எத்தனை செல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன என்பது கற்றுக்கொள்ளும் அனுபவம்இ அதன் தீவிரம்இ அவசரம்இ அவசியம் ஆகியவை பொறுத்தே அமைகிறது. நினைவு பதிவில் ஈடுபடும் செல்களை தவிர மற்றவை அழிந்துவிடுகின்றன.

முதுமை வரும்போது கூடவே மறதியும் மந்த புத்தியும் வந்துவிடும். அவை வராமலிருக்க தினமும் எதையாவது படிக்க வேண்டும். இன்றைக்கு குறைந்தது நூறு நரம்பு செல்களாவது உங்களுக்கு புதிதாக கிடைத்திருக்கும்.
எப்படி என்கிறீர்களா?
இந்த கட்டுரையை படித்தீர்கள் அல்லவா அதன் வழிதான்..

No comments:

Post a Comment