Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, November 19, 2013

வட்ட கல் தட்டுகளும்.. வேற்றுகிரக வாசிகளும்..

ட்ரோபா வட்ட கல் தட்டுகளும்.. வேற்றுகிரக வாசிகளும்..

சீன தொல்பொருள் ஆராய்சியாளர் ச்சூ-பு-அய் (Chu Pu Tei ) இந்த வட்ட (Dropa Stones) கல்தட்டுகளை 1937 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு குகையில் கண்டுபிடித்தார்.

மேற்படி, குகை சீன-திபெத் எல்லையில் உள்ள பயன்கரஉலா (BayanKara-Ula) என்ற சிகரத்தில் உள்ளது.


அந்த குகையில் பல சவக்குழிகள் இருந்தன. ஒவ்வொரு சவக்குழியிலும் மூன்றடி உயரமே உள்ள எழும்புக்கூடுகள் இருந்தன. ஒவ்வொன்றின் மேலும் ஒரு அடையாளம் போல் இந்த வட்ட கல் தட்டுகள் இருந்தன. >>> http://goo.gl/i2O87B

வட்ட தட்டில் சீரான வட்டத்துளை மையத்தில், மையத்தில் இருந்து சுழற் சுற்று கோடுகள் இருந்தன. (பழைய இசைத் தட்டுகள் போல.) பார்பதற்கே அவை கோடுகள் போல இருந்தன ஆனால் அவை (மைக்ரோ) மிக நுண்ணிய புரியாத குறியீட்டு எழுத்துக்கள். >>> http://goo.gl/sz98Z9

இவருக்கு பின், பெய்ஜிங் தொல்லியல் அகாடமியை சேர்ந்த பேராசிரியர் சும்-உம்-நூய் (Professor Tsum Um Nui, of the Beijing Academy for Ancient Studies ) இதுபற்றிய சில விளங்கங்களை கொடுத்தார். இந்த எலும்பு கூடுகள் வேற்றுகிரக வாசிகளாக இருக்கலாம் என்றும் அவர்கள் பெரிய தலைகளை கொண்ட குள்ளமான அசிங்கமான தோற்றத்தினர். மேலும் அந்த வேற்றுகிரக வாசிகளை ட்ரோபா மலைவாழ்மக்கள் தங்கள் மூதாதையர் என நம்பியதாகவும் தெரிகிறது. அதனாலேயே இந்த வட்டக்கல் தட்டுகள் ட்ரோபா கற்கள் என பெயரிடப்பட்டது. ஏதோ விபத்து அல்லது ஏதேனும் காரணத்தினால் இறந்து போயிருக்கலாம் என்றும் சொன்னார். >>>http://goo.gl/BdOdw4

ஆரம்பத்தில் இந்த மண்டை ஓடுகள் மனிதக் குரங்கினுடையது (ஏப் வகை) என்றே நினைத்தனர். >>> http://goo.gl/SOFdqH

பின்னர்,இந்த தட்டுகளின் காலங்கள் 10000 முதல் 12000 வருடங்களுக்குள் இருக்குமென கணிக்கப்பட்டது. >>> http://goo.gl/ikli6W

அந்த குகைசுவர்களில் பூமி, உதய சூரியன்,நிலா,நட்சத்திரங்கள் இன்னும் ஏதேதோ புரியாத குறியீடுகள் இருக்கிறதாம், ஒரு வரைபடம் போல.

வேற்று கிரக வாசிகள் பூமியில் இறங்கி இருக்க வேண்டும் என்றும் அப்போது அவர்களின் வாகனம் விபத்துக்குள்ளாகி விட்டது. இந்த வேற்று கிரக வாசிகள் இக்குகைகளில் இருந்த பழங்குடிகளை கொன்று விட்டார்கள் அதோடு அவர்கள் திரும்பி போக வாகனம் இல்லாமல் இறந்து போயிருக்கலாம். சுற்றியிருந்த மலைவாழ்மக்கள் அவர்களை ட்ரோப்பாக்கள் என்கின்றனர் ( கர்ண பரம்பரைக் கதைகளும் உண்டு !! ).

1965 ல் மேலும் 716 வட்டத்தட்டுகள் இந்த குகையில் கிடைத்ததாம்.

தட்டுகளில் கோபால்ட் மற்றும் பல உலோக கூறுகள் உள்ளன. மின்சாரம் செலுத்தப்பட்டால், இதனுடாக கடத்தப்படுகிறது. வெவ்வேறு குறியீடுகள் ஒவ்வொரு தட்டிலும் இருப்பதால் இது ஏதேனும் சர்க்யூட்டாக இருக்குமோ ? என்ற சந்தேகமும் உள்ளது. >>> http://goo.gl/1yvNBt

(oscillograph )ஆசிலோகிராப் கொண்டு சோதனை செய்யப்பட்டதில்

” ஹம் “ என்ற ரிதம் மட்டுமே உணரப்பட்டது.

1965 உடன் இதைப்பற்றிய ஆராய்சிகள் கைவிடப்பட்டதாக தெரிகிறது.

படத்தில் காணப்படும் இந்த கற்கள் இப்போது இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதில் இல்லை. அப்போதைய கால கட்டத்தில் (1938ல்) இவை அனைத்தும் ரஷ்யாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதன் பின் என்ன ஆயிற்று ? தெரியவில்லை ஆனால் இந்த நிழற்படங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. >>> http://goo.gl/xooeaL

இரும்புத்திரை நாடும், பெருஞ்சுவர் நாடும் இரகசியம் காத்தன. விடை தெரியாத மர்மங்களில் இதுவும் ஒன்று.

No comments:

Post a Comment