Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, November 17, 2013

பணப் புழக்கம் என்றால் என்ன?


எந்த ஒரு முதலீடும் சில காலம் வரை தொடர்ந்து வருவாயைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். இதனை பணப் புழக்கம் (Cash Flow) என்பர். உதாரணமாக, ஒரு கடன் பத்திரம்வாங்கினால், அதில் குறிப்பிட்டுள்ள வட்டி விகிதம் (Coupon Rate),முக மதிப்புக்கு (Face Value) ஏற்ப வருடந்தோறும் வட்டி வருவாய் வரும், அதே போல், அந்தக் கடன் பத்திரத்தின் முதிர்வு காலத்தில், முக மதிப்பும் திரும்பக் கிடைக்கும்.

நான் 10 வருட முதிர்வுள்ள ஒரு கடன் பத்திரம் வாங்கியுள்ளேன், அதனின் coupon rate 10%,முக மதிப்பு ரூ 1,000. இப்போது பத்து வருடம் வரை தொடர்ந்து எனக்கு வருடந்தோறும் ரூ 100 வட்டியாகவும், 10ஆவது வருடம், முக மதிப்பான ரூ 1,000 மும் கிடைக்கும். அதாவது, இங்கு பணப்புழக்கம் என்பது இன்று (t0) என்னிடமிருந்து ரூ 1000 வெளியே செல்கிறது ஆகவே, அடுத்த பத்து வருடங்களின் Cash Flow = -1000 (t0)+100(t1)+100(t2)+100(t3)+100(t4)+100(t5)+100(t6)+100(t7)+100(t8)+100(t9)+1100(t10), இதில் கடைசி வருடம், முக மதிப்பையும் சேர்த்துக் கொடுக்கப்படும் என்பதை அறிக.
இதே போல் ஒரு பங்கினை வாங்குகிறேன். பங்கின் முக மதிப்பு ரூ 100 ஆனால், நான் அதனின் சந்தை விலையான ரூ 250-க்கு வாங்கினேன். இதற்கு முதல் இரண்டு வருடங்கள் முக மதிப்பில் 10% ஈவுத் தொகை (dividend)எனப்படும் லாபத்தின் ஒரு பகுதி பங்கு உரிமையாளருக்குக் கொடுக்கப்பட்டது. அடுத்த வருடம் dividend கொடுக்கவில்லை, எனவே, அன்றைய சந்தை விலையான ரூ 300-க்கு விற்றுவிட்டேன். சில வருடங்களில் dividend கொடுக்காமல், அதனை அந்நிறுவனம் மீண்டும் முதலீடு செய்யும், இதனால் பங்கின் விலை மேலும் உயரும். இந்த பங்கின் மூலம் என்னுடைய cash flow பின்வருமாறு:
-250(t0)+10(t1)+10(t2)+300(t3). இந்த இரண்டு cash flow விலும் முதல் வருடம் negative (-) cash flow, அடுத்த 10 வருடங்கள் positive (+) cash flow. இவை இரண்டையும் ஒரே வருடத்தின் அளவாக மாற்றி ஒப்பிட்டு பார்த்துதான், நம் முதலீடு எவ்வளவு லாபத்தை, அல்லது வருவாயை பெற்று தந்திருக்கிறது என்று அறியலாம், இதற்கு present value, discount rate,போன்றவற்றை நாளை பார்க்கலாம்.

No comments:

Post a Comment