Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 7, 2013

நிலநடுக்கத்தால் தங்கமாக மாறும் நீர்: ஆய்வில் தகவல்



நிலநடுக்கத்தால் பூமிக்கு அடியில் இருக்கும் நீர் தங்கமாக மாறுவதாக ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
Image
அவுஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து பல்கலைகழகத்தின் புவியியல் துறையின் சார்பில் பூமியில் நிலநடுக்கத்தால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் ஒவ்வொரு முறை நிலநடுக்கம் ஏற்படும் போதும் நீர் மூலக்கூறுகள் தங்கமாக மாற்றமடைவதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த ஆய்வில், நிலநடுக்கத்தால், பூமியின் அடிப்பகுதியில் உள்ள நீர், அதிக அழுத்தத்திற்கு உட்படுகிறது.

இதனால் நீர் மூலக்கூறுகள் இரசாயன மாற்றத்திற்கு உள்ளாகின்றன. இந்த மாற்றம் பூமியின் மத்திய பகுதியில் நிலவும் அதிக வெப்பத்தின் காரணமாக மேலும் சில மூலகங்களுடன் இரசாயனமாற்றத்திற்கு உள்ளாகின்றன. இதனால் பல மாற்றங்களுக்கு பின் நீரானது தங்கமாக மாறுகிறது. சாதாரணமாக இந்நிகழ்வு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது.

ஆனால் நியூசிலாந்தில் நிலவும் சாதகமான தட்ப வெட்ப நிலையின் காரணமாக வெகு விரைவிலேயே இந்த மாற்றம் நிகழ்கிறது.

சில நூறு ஆண்டுகளுக்கு பின்னர் நியூசிலாந்தில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்திய செய்தி:

நியூஸிலாந்தில் நில நடுக்கத்தினால் நிலத்தடி நீர் விரைவாக தங்கமாக மாறி வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலநடுக்கத்தினால் புவியில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். இது தொடர்பில் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைகழக புவியியல் துறை சார்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வின் மூலமே நிலநடுக்கத்தினால் நியூஸிலாந்தில் விரைவாக நீர் மூலக்கூறுகள் தங்கமாக மாற்றமடைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் நிலத்தடி நீர் மிக அதிகளவான அழுத்தத்திற்குள்ளாகிறது. பின்னர் நீர் மூலக்கூறுகள் இரசாயன மாற்றத்திற்கு உள்ளாகின்றன. தொடர்ந்து நீரானது தங்கமாக மாறுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நீர் தங்கமாக மாறும் செயற்பாடானது பூர்த்தியாவதற்கு சுமார் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் எடுக்கும். ஆனால் நியுஸிலாந்தில் நிலவும் தட்ப வெட்ப நிலை நீர் தங்கமாக மாற உகந்தாக காணப்படுகிறது. எனவே சில நூற்றாண்டுகளிலேயே நியூசிலாந்தில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது என ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment