Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 7, 2013

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !!!

அப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்று சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் .அப்பொழுது தான் ஹிந்தி மொழிக்கு எதிராக தமிழகத்தில் பல எதிர்ப்பு போராட்டங்கள் அரங்கேறிய சமயம். அண்ணா அவர்கள் டில்லியில் ஒரு பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்தார் .



அந்த கூட்டத்தில் எல்லோரும் பேசி முடித்த பிறகு அண்ணா அவர்கள் சென்றார் .அந்த இடத்தில் ஹிந்தி மொழிக்கு ஆதரவாக பல ஊடகங்கள் குவிக்க பட்டிருந்தன . அண்ணா பேசும்போது ,அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் அண்ணாவிடம் நீங்கள் பேசுவதை காட்டிலும் எங்களுக்கு பதில் அளித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார் .அண்ணா அவர்களும் பதில் அளிக்க சம்மதித்து இருக்கிறார் .

அப்பொழுது அந்த பத்திரிகையாளர் அண்ணாவிடம் "நீங்கள் எதற்கு ஹிந்தியை ஆட்சி மொழியாக்க கூடாது என்று மறுக்கிறீர்கள் " என்று கேட்க அறிஞர் அண்ணாவோ "நீங்கள் எதற்கு ஹிந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள் " என்று திருப்பி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பத்திரிகையாளரோ " இது ஒரு பொதுவுடைமை நாடு .இங்கு யாருக்கு பெரும்பான்மை இருக்கிறதோ அவர்களுக்கு தான் முன்னுரிமை .அந்த வகையில் இந்தியாவில் அதிகமான மக்கள் பேசும் மொழி ஹிந்தி . அப்படியானால் ஹிந்தி தானே தேசிய மொழி " என்று சொல்லியிருக்கிறார் .

ஆனால் அறிஞர் அண்ணாவோ சிறிதும் தயங்காமல் அடுத்த வினாடியே பதில் அளித்தாராம் ." நீங்கள் சொல்வது போல பார்த்தால் நமது இந்தியாவில் மயில்களின் எண்ணிகையை விட காக்கைகளின் எண்ணிக்கை தானே அதிகம். காக்கைகள் அதிகம் இருப்பதால் நாம் அதை தேசியப்பறவயாக வைக்கவில்லையே ,மயிலை தானே வைத்து இருக்கிறோம் " என்றாராம்

இந்த பதிலைக் கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் வியந்து கை தட்டும் ஓசை நிற்க பல நிமிடங்கள் ஆனது என்றால் பார்த்து கொள்ளுங்களேன் .

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !!!

No comments:

Post a Comment