Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 7, 2013

பெரியாரும் விபூதியும்...


1956ல் குன்றக்குடி அடிகளாரும் தந்தை பெரியாரும் ஈரோட்டில் சந்திக்கிறார்கள்.

தந்தை பெரியாரின் 78ஆவது பிறந்தநாள் விழா குன்றக்குடி அடிகளார் தலைமையில் திருச்சி பொன்மலையில் கொண்டாடப்படுகிறது.

அதன் பின் 05-9-1958ல் பெரியார் குன்றக்குடிக்கு வருகைத் தரும்போது அவருக்கு பூரணகும்ப மரியாதை செய்கிறார்கள்.

அப்போது பெரியார் நெற்றியில் ஆதினத்தைச்
சேர்ந்தவர்கள் விபூதி பூசினர்.

பெரியார் அதைப் பவ்வியமாக ஏற்றுக் கொண்டார்.

பெரியாரின் இச்செயல் மிகவும் சர்ச்சைக்குள்ளானது.


அப்போது அவர்களுக்குப் பெரியார் சொன்ன பதில்:

" நான் எங்கே பூசிக் கொண்டேன்? அடிகளார் பூசிவிட்டார்.

அவ்வளவு பெரியவர் இதை எனக்குச் செய்யும் மரியாதையாகக் கருதுகிறார்.

அந்த நேரத்தில் நான் தலையைத் திருப்பிக் கொள்வது

அவரை அவமதிப்பது போல ஆகாதா?"என்றாராம் பெரியார்.


மனிதர்களை மதிப்பது மட்டுமே,

கடவுளை விடவும்,

மதங்களை விடவும்

மதங்கள் எழுதி வைத்திருக்கும்

வேதங்களை விடவும்,

மேன்மையானது என்று

தன் செயல் மூலம் வாழ்ந்துக் காட்டிய மனிதர் தான் தந்தை பெரியார்..


No comments:

Post a Comment