Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, October 8, 2013

செல்போன்களால் ஏற்படும் சமூகப்பிரச்சனைகள்…

அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்துள்ள அறிவை பயன்படுத்தி மனிதன் பல வியத்தகு சாதனைகளை புரிகின்றான். கற்பனைக்கு எட்டாத புதிய புதிய கண்டுபிடிப்புகளை கணக்கின்றி தொடர்ச்சியாக வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறான். வெறும் நூறு வருட கால இடைவெளியில் அவனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்களை எண்ணிப்பார்த்தால் நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடிவதில்லை. உலக வாழ்வில் பல இன்னல்களை அகற்றி நேரத்தையும் வேலையையும் இவனது கண்டுபிடிப்புகள் மிச்சப்படுத்தித் தருவதால் உலக மக்கள் அனைவரும் இக்கருவிகளை பெரிதும் விரும்புகிறார்கள். 

மக்களுக்கு பலனுள்ளதை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லா கண்டுபிடிப்பாளர்களும் தங்கள் படைப்புகளை வெளியிட்டாலும் நன்மையான காரியங்களுக்கு இவைகள் பயன்படுவதைப் போல் தீமையான காரியங்களுக்கும் பயன்படுகின்றன. இயற்கையாக மனிதன் தீமைகளை செய்யவே அதிக நாட்டம் கொள்பவனாக இருப்பதால் இச்சாதனைங்களையும் தீமையான காரியங்களுக்கு பயன்படுத்திக்கொள்கிறான். இதனால் உலகில் ஒரு புறம் இக்கருவிகள் மூலம் பல நன்மைகள் குவிந்துகொண்டிருந்தாலும் இதேக் கருவிகள் மூலம் ஏற்படுகின்ற தீமைகள் மாபெரும் குவியலாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது.

இக்கருவிகளால் பலனடைந்து கொண்டிருந்த மக்கள் இதேக் கருவிகளால் பலத்த சங்கடத்திற்கும் ஆளாக வேண்டிய நிலை வருகிறது. கண்டுபிடிப்பு சாதனங்களால் ஏற்படும் விபரீதங்கள் படுபயங்கரமானதாக இருப்பதால் தங்களையும் தங்கள் குடும்பத்தார்களையும் காத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் இக்கருவிகளால் நன்மை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தீமைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்று கருதி இச்சாதனங்களை முற்றிலும் புறக்கணித்துவிடுகிறார்கள்.
தீமைசெய்பவர்களுக்கு இக்கருவிகள் வலுமையான கூட்டாளியாகவும் உதவும் நண்பனாகவும் இருப்பதால் இச்சாதனங்களை தீயவர்கள் விரும்பி நேசிக்கிறார்கள்.

நல்லவர்களாக வாழ நினைப்பவர்களும் சில தருணங்களில் தடம்புரண்டு செல்வதற்கு இச்சாதனங்கள் காரணமாகிவிடுகின்றது. இவற்றின் மூலம் ஏற்படுகின்ற தீமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும் தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருப்பதாலும் தீமைகள் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாகரீகம் என்று போற்றக்கூடிய படுமோசமான நிலை ஏற்படுகிறது.

பிஞ்சில் பழுத்த பழம்

மனிதனால் உருவாக்கப்பட்ட இத்தகைய கருவிகளில் ஒன்று தான் செல்போன் என்பது. பழம் சுவையானதாகவும் உண்ணுவதற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டுமானால் நன்கு காய்த்தப் பின்பு தானாக கனியும் நிலையை அப்பழம் அடைய வேண்டும். அவ்வாறில்லாமல் காய்க்கும் பருவத்தை அடைவதற்கு முன்பு பிஞ்சாக இருக்கும் நிலையில் பழுத்துவிட்டால் அதில் எந்தப் பயனும் இல்லை. குப்பைத் தொட்டி தான் அது சேர வேண்டிய இடம். செல்போன்களால் சீரழிந்துகொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறைகளுக்கு இந்த உதாரணம் மிகவும் பொருந்தக்கூடிய வகையில் உள்ளது.

படிப்பிலும் அறிவை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டிய பருவத்தில் இருக்கும் பள்ளி மாணவ மாணவிகள் இன்றைக்கு திருமணமான தம்பதிகள் கூட அறிந்திராத அளவிற்கு ஆபாசங்களை அறிந்துவைத்திருக்கிறார்கள். புத்தகங்களை சுமந்து செல்லும் இளம் வயது சிறுமிகள் கருவை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. தாய் தந்தையிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை கற்பதற்காக பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் தந்தையாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

இளம் வயதிலேயே தங்களது வா­பத்தை வீணடித்து பருவ வயதை அடையும் போது எதற்கும் சக்தியற்ற கிளவர்களாக இவர்கள் மாறுகிறார்கள். செழித்து வளர வேண்டிய இந்தக் கதிர்கள் சீக்கிரமே சீரழிந்து போவதற்கு செல்போன்கள் முக்கிய காரணியாக இருக்கிறது.

பூக்கடை சாக்கடையாகலாமா?

சிறுவர் சிறுமிகள் மட்டுமின்றி பெரும் பெரும் கல்லூரிகளில் படிக்கும் வா­பர்களின் நிலையும் இதைப் போன்று தான் உள்ளது. அல்லது இதை விடவும் மோசமாக உள்ளது. படங்களை பார்ப்பதற்கான வசனதி செல்போன்களில் செய்யப்பட்டு இருப்பதால் ஆபாசக் காட்சிகள் மற்றும் சினிமாப் பாடல்களை அதில் பதிவு செய்துகொண்டு பார்த்து இரசிக்கிறார்கள். ஆபாசத்தின் இன்னொரு பெயர் தான் சினிமா என்பது. பாடல்களிலும் காட்சிகளிலும் ஆபாசத்தைக் கலக்காவிட்டால் அந்த படம் நீண்ட நாள் திரையரங்குகளில் ஓடாது என்கின்ற அளவிற்கு சினிமாவில் ஆபாசம் பெருகியிருக்கிறது.

இந்த சினிமாக்காட்சிகளும் பாடல் வரிகளும் இசையும் பூக்கடையாக இருந்த மனிதனுடைய மூளையை மழுங்கச் செய்து நாற்றமெடுக்கும் சாக்கடையாக மாற்றிவிடுகிறது. இந்தப் பருவத்தில் இரத்தம் அதிக துடிப்புடன் இருப்பதால் இவர்களின் கவனம் வழிகேட்டின் பக்கம் செலுத்தப்படும் போது தடம்புரண்ட குதிரையின் வேகத்திற்கு இவர்கள் வழிகேட்டை நோக்கி ஓடுகிறார்கள். திரையரங்குகளுக்குச் செல்வது பள்ளிக்கூடம் போகாமல் கட்டடிப்பது போன்ற பல தீமையான காரியங்களுக்கு பலரை கூட்டு சேர்த்து கொள்வதற்கு இக்கருவி அவர்களுக்கு மிகவும் பயன்படுகிறது.

இளமையில் கல். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் போன்ற உபதேசங்களை கூட கற்க வழியில்லாமல் பொன்னான காலத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள். விலைமதிக்க முடியாத கல்வி காலம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை மாணவன் இழப்பதற்கு செல்ஃபோன்கள் தான் மிக முக்கியமான காரணம். தற்போது காதல் என்ற உயிர்கொல்­ நோய் நாகரீகம் தெய்வீகம் என்ற போர்வையில் தற்போது படிக்கும் மாணவ மாணவியர்களுக்கிடையே காட்டுத் தீ போல் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த காதல் பைத்தியம் தலைவிரித்து ஆடுவதற்கும் இந்த செல்போன்களின் பங்கு இணையற்றது.

நல்ல நல்ல செய்திகளை பரிமாறிக்கொள்ள வேண்டிய மாணவ மாணவிகள் ஆபாச எஸ்எம்எஸ்களை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் தான் தமிழகத்தில் சில கல்லூரிகளில் மாணவ மாணவியர்கள் செல்போன்களை கல்லூரி நேரத்தில் பயன்படுத்தக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது. பிறருக்கு ஆபாச செய்திகளையும் படங்களையும் அனுப்பி குறும்பு செய்வதால் அனுப்பிய மாணவன் பள்ளி படிப்பைத் தொடர முடியாமல் சிறைக்குச் சென்றுவிடுகிறான். பயத்துடன் கல்லூரிக்கு சென்று வந்த மாணவிகள் வீட்டுக்கு வந்தப் பின்பும் நிம்மதியாக இருக்கமுடிவதில்லை.

அத்துமீறி நுழையும் அக்கிரமம்.

செல்போன்களில் காமிர வசதியுள்ளவைகளும் உள்ளன, பெண்கள் அஜாக்ரதையாக இருக்கும் போது வக்கிரபுத்தி கொண்ட ஆண்கள் பெண்களின் மறைவிடங்களை செல்போன்களின் மூலம் படம் எடுத்துவிடுகிறார்கள். இப்படி எடுக்கப்பட்டக் காட்சி ஊர் உலகத்தையெல்லாம் சுற்றிக்கொண்டு கடைசியில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் வருகிறது. இதற்குப் பிறகு அப்பெண்ணால் எப்படி தலை நிமிந்து நடக்க முடியும்?. இந்த அவமானம் தாங்க முடியாமல் மணமுடைந்து உயிரை மாய்த்துக் கொள்பவர்களும் உண்டு. செல்போன்களில் ப்ளூடூத் என்ற ஒரு வசதி உள்ளது. இதன் மூலம் செய்திகளையோ பாடல்களையோ படங்களையோ பலருடை செல்களுக்கு அனுப்ப முடியும். இவ்வசதியை தவறாக பயன்படுத்திக் கொண்டு பலருடைய செல்போன்களுக்கு தப்பான விஷயங்களை பரப்புகிறார்கள். இதனால் ஆபாசத்தை எட்டிப்பார்க்காதவர்கள் கூட அவசியம் பார்த்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஏனென்றால் வந்த செய்தியை திறந்தால் தான் அது நல்லதா கெட்டதா என்பது தெரியவரும்.

ஒழுக்கமாக வாழ நினைப்பவனை இக்கருவிகள் வாழவிடுவதில்லை. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு நாள் அவனும் அசிங்கமான விஷயங்களை அங்கீகரிக்கத் தொடங்கிவிடுகின்றான். இப்படி நம்முடைய அனுமதி இல்லாமலேயே நம்முடைய பொருளில் அன்னியர்கள் விளையாடிவிடுகிறார்கள்.

வீடு தேடி வரும் அழைப்பு

கெட்ட எண்ணம் கொண்டவன் விபச்சாரத்திற்கு துணையை தேடும் நோக்கில் பலருக்கு போன் செய்து பேசுபவர் ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொண்டு பெண்ணாக இருந்தால் அவளை வலையில் சிக்கவைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் செய்கிறான். விபச்சாரம் செய்வதற்கு அழைப்பு ஊர்கடந்து நாடுகடந்து வீடு தேடி வருகின்றது.

ஆண்களை தவறானப் பாதைக்கு அழைக்கும் பெண்களும் இத்தகயை யுக்தியை கையாளுகிறார்கள். எனவே தான் விபச்சாரிகள் கைது செய்யப்பட்டதை குறிப்பிடும் போôது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட செய்தியையும் சேர்த்தே சொல்லுவார்கள்.

கணவன் ஊரில் இல்லாத போது தனிமையில் வாடும் எத்தனையோ பெண்கள் தங்கள் கற்புக்களை காத்துக்கொண்டாலும் சில பெண்கள் அயோக்கியர்கள் வீசும் இந்த மாயவலையில் சிக்கிவிடுகிறார்கள். கணவனை நினைத்து வாடும் பெண்களிடம் எந்த ஆணாவது வேறு நோக்கத்தில் பேசினாலும் இப்பெண்களே அந்த ஆண்களை தவற்றுக்கு அழைக்கிறார்கள். தெரிந்த ஆண்களுக்கு போன் செய்து பலமணி நேரம் அவர்களிடம் உறையாடுகிறார்கள்.

எந்தவிதமான சிரமுமின்றி யாருக்கும் தெரியாமலும் வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமலும் வீட்டுக்குள் இருந்துகொண்டே விபச்சாரத்திற்கு ஆள் தேடுவது என்பது இக்கருவியால் எளிதாகிவிடுகின்றது. கள்ளத்தொடர்பு எங்கேயோ யாருடனோ முடிந்துவிடாமல் காலம் முழுக்க நீடிக்கும் பந்தமாக தொடர்வதற்கு இந்த செல்போன்கள் உறுதுணைபுரிகிறது.

பொன்னான காலம் வீணாய் போகிறதே !

சிலர் விளையாட்டாக முக்கிய பிரமுகர்களுக்கு செல்போன்களின் மூலம் கொலை மிரட்டல் விடுகிறார்கள். விஷயம் பெரிதாகி செய்தியை அனுப்பியவர் சிறையில் அடைக்கப்படுகிறார். நாம் அனுப்பாவிட்டாலும் நமக்குத் தெரியாமல் எவனாவது நமது செல்போனை பயன்படுத்தி இத்தகைய செய்திகளை பிறருக்கு அனுப்பிவிடுகிறான். இதனால் பாதிப்பு நமக்குத் தான் வருகிறது.

ஏப்ரல் 1 ம் தேதியை பிறரை ஏமாற்றுவதற்குரிய நாள் என்று பலர் நினைக்கிறார்கள். இந்நாளில் பிறரை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களை பிறருடைய செல்போன்களுக்கு அனுப்பிவிடுகிறார்கள். இதனாலும் பல விபரீதங்கள் ஏற்படுகின்றது.

பேசுவதற்கு விஷயமே இல்லாவிட்டாலும் சிலர் எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். இல்லையென்றால் அவர்களுக்குத் தலை வெடித்துவிடும். எத்தனையோ வேலைகள் பல இருந்தும் கூட அவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்து விட்டு பிரயோஜனம் இல்லாத பேச்சுக்களை மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருப்பார்கள். செல்போன்களில் பேசுவதையே பலர் பொழுதுபோக்காக ஆக்கிக்கொள்கிறார்கள்.

வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்றாலும் சரி பேசுவதை நிறுத்தமாட்டார்கள். செல்போன்களின் மீது இவர்களுக்கிருந்த எல்லை கடந்த பாசம் விபத்திற்குக்காரணமாகி உயிரையே பறித்துவிடுகிறது. பிறரை தொல்லை செய்வதற்காக ஒன்றும் எழுதப்படாத வெற்று மெஸ்úஸஜ்களை 50 100 என்ற கணக்கில் அனுப்பி தங்கள் காலத்தை விரையம் செய்துகொள்கிறார்கள். பிறரையும் துன்புறுத்துகிறார்கள். சென்றால் திரும்ப வராத நம் காலத்தையும் உயிரைûயும் அழித்துக்கொள்வதற்கு செல்போன் கருவிகள் உதவிபுரிகின்றன. நேரம் வீணாகுவதுடன் கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தில் ஒரு குறிப்பிட்டத் தொகை செல்போன்களுக்காக வீண்விரயம் செய்யப்படுகின்றது.

அவதூறுக் கருவி

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்த பாவங்களை பாதிக்கப்பட்டவன் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்கமாட்டான். இந்த பாவங்களில் ஒன்று தான் பிறரைப் பற்றி அவதூறு பேசுவது. இன்றைக்கு செல்போன்கள் இந்த மாபெரும் பாவத்தை நமக்கு சம்பாரித்து தந்துகொண்டிருக்கின்றன. ஒரு தனிநபரைப் பற்றி அல்லது ஒரு இயக்கத்தைப் பற்றி தவறான பொய்யான விஷயங்கள் இந்தக் கருவிகளின் மூலம் பரப்பப்படுகின்றது. தனக்கு வந்த தகவல் உண்மையானதா? பொய்யானதா? என்றெல்லாம் பார்க்காமல் வந்த மாத்திரத்திலேயே தன்னுடைய பங்கிற்கு ஒவ்வொருவரும் அவதூறுகளை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

பண்டையக் காலங்களில் ஒரு அவதூறு பலருக்குப் பரவ பலமணி நேரமானது. பல நாட்களானது. ஆனால் இன்றைக்கு செல்போன் கருவியின் மூலம் பல நூறு பேருக்கு ஒரு நிமிடத்தில் பல பொய்யான செய்திகளை பரப்பிவிடமுடியும். நாம் அனுப்பிய ஆதாரமற்ற தகவலை நம்பி யார் யாரெல்லாம் பரப்பினார்களோ அவர்களுடைய பாவத்தில் நமக்கும் கட்டாயம் பங்குண்டு. நாம் பாவியானதோடில்லாமல் பிறரையும் பாவியாக்கிக்கொண்டிருக்கிறோம்.


எனவே ஒருவன் பாவச்சுமையை சுமந்து நரகத்திற்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினால் அவன் இதற்காக பெரும் சிரமத்தை எடுக்க வேண்டியதில்லை. ஒரு இயக்கத்தைப் பற்றி அல்லது ஒரு தனிநபரைப் பற்றி ஒரு பொய்யை போன்கள் மூலம் அனுப்பினாலே போதும்.. இங்கு சொல்லப்பட்ட விஷயங்கள் மட்டுமில்லாமல் நமக்குத் தெரியாத இன்னும் பல தீமைகளும் செல்போன்களால் ஏற்படலாம்.

விஞ்ஞான வளர்ச்சியின் விளைவால் நாமும் இதை வாங்குவதற்கு நிர்பந்திக்கப்படுகிறோம். எனவே முடிந்த அளவு இக்கருவிகளை நமது பிள்ளைகளுக்கும் வீட்டுப் பெண்களுக்கும் வாங்கிக்கொடுக்காமல் இருப்பதே சிறந்தது. இக்கருவியின் பயன்பாடு நமக்கு அவசியப்பட்டால் இஸ்லாமிய வரம்பை மீறாத வகையில் பல கட்டுப்பாடுகளை நமக்குள் நாமே இட்டுக்கொண்டு முறையான அடிப்படையில் கையாளுவது அவசியம். மறுமை நாளில் செவியும் கண்ணும் நாம் செய்த குற்றங்களை ஆவணங்களாக தயாரித்து அல்லாஹ்வின் முன் நிறுத்தும். நமக்கு கொடுக்கப்பட்ட காலம் குறித்தும் செல்வம் குறித்தும் அல்லாஹ் விசாரணை செய்வான். இந்த நம்பிக்கையை மனதில் ஆழமாக பதித்து அல்லாஹ்விற்கு பயப்படுவதை நாம் மறந்து விடக்கூடாது.

எல்லாம் வல்ல இறைவன் நம்மை தீமைகளி­ருந்து காத்து நன்மைகளில் செலுத்துவானாக.

No comments:

Post a Comment