பிரபல ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷியன் சைனி சந்திரன்: "சூப்' பசியைத் தூண்டும்.
உடல் பருமனைக் குறைப்பதற்கு உதவும். ஆரோக்கியத்தைக் கூட்டும். இதற்காகத்
தான், சூப் சாப்பிடும் வழக்கம் ஏற்பட்டது.ஆனால்,
இன்றைக்கு பீச், பார்க் போன்று, மக்கள் அதிகம் கூடும் இடங்களில்
விற்கப்படும், சூப், பசியைத் தூண்டுவதற்கு பதில், பசியை அடக்கி விடுகிறது.
ஆரோக்கியத்தை மேம் படுத்துவதற்கு பதில், வேறு சில பிரச்னைகளையும் கொண்டு வருகிறது.தினமும் சூப் பருகலாம் தவறில்லை.