2030-ம் ஆண்டில் தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை
ஏற்படும், மத்தியக் கிழக்கு நாடுகளைப் போல இந்தியாவும் தண்ணீர் நெருக்கடி
நாடாக மாறும்’ என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது, சர்வதேச தண்ணீர்
மேலாண்மை நிறுவனம். குளம், குட்டைகள், ஆறுகளை ஆழப்படுத்துவது ஒரு புறம்
இருந்தாலும், தண்ணீர் சிக்கனம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளதால், கழிவு
நீரைக் கூட ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயத்துக்குத்
தள்ளப்பட்டுள்ளோம். அவ்வகையில், வீட்டுக் கழிவு நீர் மூலம் வீட்டுத்
தோட்டத்துக்குப் பாசனம் செய்து வருகிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த
ஜெல்ஜோசப்.