Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label ஆலம். Show all posts
Showing posts with label ஆலம். Show all posts

Thursday, October 2, 2014

அரசு, ஆலம், மாதுளை... குழந்தைப்பேறுக்கு கைகொடுக்கும் இயற்கை!

குழந்தை பாக்கியம் இல்லாம நிறையபேர் கஷ்டப்படுறாங்க. இதுக்கு உடல்ரீதியா நிறைய காரணங்கள் இருந்தாலும், ரசாயனம் கலந்த சாப்பாட்டை சாப்பிடுறதும் ஒரு காரணமா இருக்கு. இதைச் சொன்னா பலபேரு நம்ப மாட்டாங்க. ஆனா, நம்ம உடம்புல வர்ற பல பிரச்னைகளுக்கும் காரணமே... தினம் தினம் நாம சாப்பிடற சாப்பாடு, தண்ணி இது ரெண்டும்தான்.

இதை உறுதிப்படுத்திக்க எங்கயும் போகத் தேவையில்ல... ஒவ்வொரு நாளும் காலையில எழுந்திருக்கும்போது உடம்பு சும்மா ஃப்ரெஷ்ஷா இருந்தா... பிரச்னையே இல்லை. இதுக்கு மாறா எழுந்திரிக்க முடியாம, கஷ்டப்பட்டு எழுந்திரிச்சாலும், தூக்கம் தூக்கமாவே இருக்கும் சிலருக்கு. காலைக் கடன்களை உடனே முடிக்காத நிலையும் இருக்கும். அதுக்கும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். வயிறு கும்னு அடைச்சுக்கிட்டு இருக்கும். கண்ணு ரெண்டும் பொங்கிக்கிட்டு வரும். இதுமாதிரியான அறிகுறிகள் இருந்தா... நாம சாப்பிட்ட சாப்பாட்டுல ஏதோ பிரச்னைங்கிறத புரிஞ்சுக்கலாம்.