Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு. Show all posts
Showing posts with label மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு. Show all posts

Sunday, December 15, 2013

மலையைப் பாதுகாப்போமா; பறிகொடுப்போமா?


கடந்த நவம்பர் மாதம் 13-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், கஸ்தூரிரங்கன் தலைமையிலான, மேற்குத்தொடர்ச்சி மலைகள் தொடர்பான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளைக் கொள்கையளவில் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தவுடன், கேரளத்தின் எதிர்க் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் மலைப்பகுதியை ஒட்டிய மக்களிடம் தாங்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படலாம் என்ற அச்சம் உருவாக்கப்பட்டிருக்கிறது.