இதுவும் கடந்து போகுமோ?
பள்ளிக்குச் செல்லும் குழந்தை, பள்ளிப் பேருந்தின் ஓட்டை
வழியே கீழே விழுந்து மரணிப்பதாகட்டும்; அரசு மருத்துவமனையில் இறந்த
குழந்தையின் முகம் எலி கடித்துச் சிதைந்துபோவதாகட்டும்... கற்பனையே செய்து
பார்க்க முடியாத சம்பவங்கள் தமிழகத்தில்தான் சாத்தியம். நமக்கு எதுவும்
சர்வசாதாரணம். ஊடகங்கள் ஒரு நாள் பரபரப்பாக்கும், உடனே அரசு இயந்திரங்களும்
பரபரப்பாகும். அடுத்து ஒரு பரபரப்புச் சம்பவம் நடந்து முடிந்ததும்
எல்லாவற்றையும் நாம் மறந்து கடந்துவிடுகிறோம். ஆனால், அரசு நடத்தும் திடீர்
சோதனைகள் - கைதுகள், ஆலோசனைக் கூட்டங்கள் - பரிந்துரைகள், புதிய விதிகள் -
சட்டதிட்டங்கள்... இவை எல்லாம் எந்த அளவுக்கு அமல்படுத்தப்படுகின்றன?
சூழல் எந்த அளவுக்கு மாறி இருக்கிறது? வாரம் ஒரு கள நிலவரத்தைப்
பட்டியலிடுவோம்... முதல் வாரம் பட்டாசு ஆலைகள்!