Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label ராபியா அல் பாஸ்ரி:. Show all posts
Showing posts with label ராபியா அல் பாஸ்ரி:. Show all posts

Thursday, November 14, 2013

ராபியா அல் பாஸ்ரி: முதல் சூஃபி பெண் கவிஞர்

ஈராக் நாட்டின் பாஸ்ராவில் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ராபியா-அல்-பாஸ்ரி. பெண் சூஃபி கவிஞர்களில் முதன்மையானவராக அவர் இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. பெண்களுக்கு முற்றிலும் சுதந்திரம் மறுக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் பக்தி மார்க்கமாக சுதந்திரத்தை அடைய முற்பட்ட கவிஞர்களின் வரிசையில் ஆண்டாள், மீரா, லல்லா போல ராபியாவிற்கும் முக்கியமான ஒரு இடம் உண்டு. தமிழ்நாட்டில் ஆண்டாளும் ஈராக்கில் ராபியாவும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது சுவாரஸ்யமான ஒற்றுமை.