அதிமதுரம்
என அழைக்கப்படும் இதன் தாவரவியல் பெயர்Glycyrrhiza glabra என்பதாகும்.
வயிறு, கழுத்து, தலை, நாரவாய் இவ்விடத்து நோய்கள்
சுரம் அதைப்பு ,உதாவர்த்தரோகம் ,வாயு மூலமுடி, எலி,
பாம்பு இவற்றின் விஷம் நீங்கும்.ஒன்றரை
அடி உயரம் வளரும் இச்செடி இயற்கையாக மலைப்பகுதிகளில் விளைகிறது. இலைகள்
கூட்டிலையானவை. ஊதா நிறமான சிறு பூக்கள் தண்டின் கணுக்களில் காணப்படும்.
காய்கள் 3 செ.மீ வரை நீளமாக சிறு முட்களுடன் காணப்படும். வேர்கள் கிளைத்தவை. இவை சிறியதும் பெரியதுமாக உட்புறம் மஞ்சள் நிறமாகவும், வெளிப்புறம் அடர்த்தியான பழுப்பு நிறமாகவும் காணப்படும். வேர்களே மருத்துவத்தில் அதிகமாக பயன்படுகின்றன. மேலும், இவை பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிமதுரம் வாணிப ரீதியாகப் பயிரிடப்படுகிறது. அதிங்கம்,அஷ்டி, மதூகம், இரட்டிப்பு
மதுரம் ஆகிய மாற்றுப் பெயர்களும் அதிமதுரத்திற்கு உண்டு. அதிமதுரம் நாட்டு
மருந்துக் கடைகளில் காய்ந்த நிலையில் கிடைக்கும்.
