Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label புடலங்காய். Show all posts
Showing posts with label புடலங்காய். Show all posts

Wednesday, October 9, 2013

மூலநோயை குணப்படுத்தும் புடலங்காய்..!


நம் முன்னோர்கள் ஆரோக்கியம் அளிக்கும் செடி, கொடி, மர வகைகளை வீட்டைச் சுற்றியும், தோட்டங்களிலும் வளர்த்து பயன்பெற்று வந்தனர். இன்னும் கூட கிராமங்களில் கொல்லைப் புறத்தில் கீரைகள், கறிவேப்பிலை, முருங்கை, அகத்தி, அவரை, புடலை, கத்தரி, வெண்டை, எலுமிச்சை, தென்னை என பலவற்றை வளர்த்து அதன் பயன்களை முழுமையாகப் பெற்று வந்தனர்.
அதனால் அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். ஆனால் தற்போது வீட்டைச் சுற்றி சிமெண்ட் தளங்களை அமைத்துவிட்டோம். தோட்டம் ஏற்படுத்தி மேற்கண்ட செடி கொடிகளை வளர்ப்பதற்கு யாருக்கும் பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை.