மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம்.
நான் இந்த பதிவில் பேசும் விடையம் உங்கள் கணினிகளில் அழிந்த கோப்புகளை மீளப்பெறுவது எப்படி என்பது பற்றியே ஆகும். எனக்கு தெரிந்த வகையில் அழிந்து போன கோப்புகளை மீளப்பெறும் நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆனால் 100% பயன் தரக்கூடிய ஒரு வழி உள்ளது.
அதற்கு Power Data Recovery மிக பொருத்தமான மென்பொருளாகும். இந்த தளத்தில் சென்று இம்மென்பொருளை தற்காலிக மென்பொருளாக தறவிறக்கிக்கொள்ளவும்.
கம்ப்யூட்டருடன் சேர்ந்து, நம் அன்றாட வாழ்வில் நம்முடன் கலந்ததாக மவுஸ் மாறிவிட்டது. நாம் அறியாமலேயே நம் கைகளில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்குக் காரண மாகவும் மவுஸ் அமைந்துவிட்டதாகப் பல டாக்டர்கள் கூறுகின்றனர். கைகளில், குறிப்பாக மணிக்கட்டினைச் சுற்றி ஏற்படும் வலி மற்றும் எலும்பு தேய்மானத்திற்கு மவுஸ் காரணமாய் அமைகிறது என்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் musculoskeletal injury என்று அழைக்கின்றனர். இதற்குக் காரணம் அதனைப் பிடித்துப் பயன்படுத்தும் விதத்தில் நாம் சரியாக அக்கறை காட்டாததுதான். இங்கு மவுஸைப் பிடித்துப் பயன்படுத்தும் வழிகளில் பின்பற்ற வேண்டிய சில மருத்துவ அறிவுரைகளை இங்கு காணலாம்.
தாங்கள் அமைத்திடும் ஒர்க்ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டா விட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஓர் அம்சத்தை இங்கு பார்ப்போம்.
பிரிண்ட் பிரிவியூவில் எடிட்: வேர்ட் டாகுமெண்ட்
ஒன்று அச்சில் எப்படிக் காட்சி அளிக்கும் என்று காண, பிரிண்ட் பிரிவியூ
என்ற வசதியை வேர்ட் தருகிறது. இதில் அந்த டாகுமெண்ட்டில் உள்ள அனைத்து
பார்மட்டிங் வேலைகளையும் ஒரே நேரத்தில் காணலாம். நெட்டு வரிசைகள்,
பாராக்கள், ஹெடர் மற்றும் புட்டர் மற்றும் படங்கள் என அனைத்தையும் காணலாம்.
இப்படி பார்க்கும் போது அதில் திருத்தங்கள் மேற்கொள்ள நாம் விரும்பலாம்.
இதே தோற்றத்தில், திருத்தங்களையும் மேற்கொள்ள வசதி உள்ளது. ஆனால் எப்படி
மேற்கொள்வது என்பதுதான் பலருக்குப் புரியாத புதிராய் உள்ளது. அதை இங்கு
பார்க்கலாம்.
இன்றைய உலகில் நாம் பல டிஜிட்டல் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். அவை
இயங்காமல் போனால், உடனே நம் அன்றாடப் பணிகள் முடங்கிப் போகின்றன. இதனாலேயே
இதற்கு மின் இணைப்பு தருவதிலும், அவற்றைச் சீராக வைத்துக் கொள்வதிலும் நாம்
பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. நம்
கம்ப்யூட்டருக்கான மின்சக்தி தரும் சாதனங்களை எப்படி, எந்த வகையில்
அமைத்து இயக்க வேண்டும் என இங்கு காணலாம். அவற்றின் மூலம் கிடைக்கும்
மின்சக்தியின் தன்மை குறித்தும் சில விவரங்களை இங்கு பார்ப்போம்.
syscheckup-குறைந்த கொள்ளவே கொண்ட இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கணினியின் வேகத்தை கூட்ட முடியும்.
கணினியில் தேவையில்லாமல் சேர்ந்திருக்ககும் குப்பைப் போன்ற பழைய கோப்புகளை, நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருக்கிற தேவையில்லாத கோப்புகளையும் நீக்கி, வேண்டாத Registry File-களையும் நீக்கித் தருகிறது இம்மென்பொருள்.
எக்ஸெல் தொகுப்பில், நீங்கள் தயாரிக்கும் ஒர்க் புக்கினை நீங்கள் மட்டுமே பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என ஒரு கட்டத்தில் எண்ணலாம்; கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்ற யூசர்கள் அதில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது என்று எண்ணினால், அதனை அவ்வாறே செட் செய்திடலாம். Tools மெனுவில் Share Workbook என்பதனைத் தேர்ந்தெடுத்தால் எக்ஸெல் ஷேர் ஒர்க்புக் டயலாக் பாக்ஸைக் காட்டும். அதில் Allow Changes என்ற வரிக்கு முன் உள்ள பாக்ஸில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இணைய தளம் வழியே சமூக சேவைகளை வழங்குவதில், கூகுள் நிறுவனத்தை அடித்துக் கொள்ள வேறு எந்த நிறுவனத்தாலும் முடியவில்லை. புயல் வேகத்தில் தன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டு, இந்த பூமியில், அனைவரின் வாழ்க்கை தடங்களைப் பதிவு செய்திடும் ஓர் தளமாக, கூகுள் தளம் இயங்கி வருகிறது. இதில் கடந்த சில மாதங்களில், கூகுள் ப்ளஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக, இணையப் பயன்பாட்டை ஆய்வு செய்திடும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை, இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர்.
இன்றைய அவசர உலகில் நாளைக்கு செய்வோம் என்று எந்தவொரு வேலையையும் ஆறுதலாக செய்ய முடியாத வகையில் எமது வாழ்க்கை போகின்றது. எந்தவொரு பொருளையும் எமது தேவைக்கு ஏற்ற மாதிரி பயன்படுத்த நவீன தொழில்நுட்பத் துறையானது வழிவகுக்கின்றது.
என்னடாப்பா?? இவன் என்ன சொல்லவாறான் என்று குழம்பாதீர்கள்..
சம்பந்தம் இருக்கு…
அந்த வகையில் தான்; பெரிய Capacity கொண்ட அதாவது GB வரிசையில் உள்ள பைல்களை (File- Data, Video) அல்லது மென்பொருட்களை சிறிய Capacity கொண்டபைல்களாக அதாவது MB யாக மாற்ற KGB Archiver எனும் மென்பொருள் பயன்படுகின்றது. KGB Archiver மென்பொருளானது இலவச மென்பொருள் என்பது சந்தோசம் தரக்கூடிய விடயம்.
இதோ இன்று நாம் பார்க்கப்போவது எமது Desk top இற்கு Water Effect கொடுப்பது எவ்வாறு என பார்ப்போம். எமது கணணி திரைகளை அழகாக வைத்திருக்க நினைப்பவர்களுக்கு இதோ அருமையான பதிவு. சொல்லப்போனால் இது ஒரு சிரிய மென்பொருளாகும். இதன் மூலம் எமது Desk top இற்கு இலகுவாக Water Effect கொடுக்க முடியும்.
மென்பொருளை பெற்றுக்கொள்வதன்றல் பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். ஆனால் நாம் Full version மென்பொருளை இலவசமாக பெற்றுத்தருகிறோம்.
டேப் அளவைத் துல்லியமாக அமைத்திட: வேர்ட் புரோகிராமில் தரப்பட்டிருக்கும் டேப் நிறுத்தங்கள், வேகமாகவும், துல்லியமாகவும் தகவல்களை வரி ஒன்றில் அமைக்க உதவுகின்றன. நீங்கள் டைப்ரைட்டர் பயன்படுத்தி இருந்தால், இந்த டேப் ஸ்டாப் எந்த அளவிற்கு பயனுள்ளவை என்று உணர்ந்திருப்பீர்கள். இப்ப எங்க சார்! டைப்ரைட்டரை எல்லாம் பயன்படுத்துறாங்க! என்று கேட்காதீர்கள். இன்னும் சில அலுவலகங்களில் டைப்ரைட்டர் மற்றும் அதற்கான டைப்பிஸ்ட் என உள்ளனர்.
கம்ப்யூட்டருக்குப் புதியவரா? கம்ப்யூட்டர் பராமரிப்பு நம் சாலைகளில் ஓடும் பெரிய லாரிகளைக் கவனித்தால், அதன் நீளமான பேட்டரி பெட்டிகளில் ""தினமும் என்னைக் கவனி'' என்று எழுதப்பட்டிருக்கும். அதில் உள்ள டிஸ்டில்ட் வாட்டர் மாற்றுவது, சேர்ந்திருக்கும் தூசு மற்றும் துருவினை நீக்குவது போன்ற வேலைகளை அன்றாடம் கவனிக்க வேண்டும். அது போல லாரி மட்டுமின்றி, ஆட்டோமொபைல் வாகனம் ஒவ்வொன்றையும் அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் அது ஓடாத மோட்டார் வாகனமாக மாறிவிடும்.
கம்ப்யூட்டரில் தங்கும் தேவையற்ற பைல்களை அழிப்பது, ரெஜிஸ்ட்ரியில் நீக்காமல் விடப்படும் குறியீடுகளை நீக்குவது, பயனற்ற குக்கீ பைல்களை ஒழிப்பது போன்ற பல பணிகளுக்குப் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சி கிளீனர் தொகுப்பின் புதிய பதிப்பு, v4.07.4369 அண்மையில் வெளியிடப்பட்டது.
பழைய கம்ப்யூட்டர்களை வாங்கிப் பயன்படுத்துபவர்கள், தங்களின் விண்டோஸ் பாஸ்வேர்டை மாற்றியபின் அல்லது அதற்கு முன்பாகவும் மறந்து போகிறவர்கள் எனப் பல வகையினர், ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் உள்ள அட்மினிஸ்ட் ரேட்டர் பாஸ்வேர்டினை எப்படி மாற்றலாம்? எனக் கேள்வி கேட்டு வருகின்றனர். இதற்கு மூன்று வழிகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
காந்த சக்தியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஹார்ட் டிஸ்க்குகள், அதிக
பட்சம் பத்து ஆண்டு காலம் நல்லபடியாக இயங்கும். பல்லாண்டுகள் தகவல்களைச்
சேர்த்துப் பாதுகாக்க விரும்பு பவர்கள், இதனாலேயே மேக்னடிக் டேப்களைப்
பயன்படுத்தி வருகின்றனர். இந்த தேவைக்குப் பதில் கொடுக்கும் வகையில், பத்து
லட்சம் ஆண்டுகள் கூடப் பாதுகாப்பாக தகவல்களைப் பதிந்து வைக்கக் கூடிய
டிஸ்க்குகளை நானோ தொழில் நுப்ட வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர்.
இணையத்தில் கண்காணிப்பது யார்?- அடையாளம் காட்டும் லைட்பீம்!
கண்காணிக்கப்படுவதும், கவனிக்கப்படுவதும்தான் இப்போதைய இணைய யதார்த்தம்.
தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும்
இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன. அதாவது
டிராக் செய்கின்றன. பொருத்தமான விளம்பரத்தை அளிக்கவும், பயனாளியின்
எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயல்படவும் இவ்வாறு செய்யப்படுவதாக
சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அரசுகள் இமெயில் வாசகங்களையும் தேடல்
பதங்களையும் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.
கம்ப்யூட்டரில், விண்டோஸ் சிஸ்டத்தில் செயலாற்றிக் கொண்டிருக்கையில், சற்று
நேரம் ஓய்வெடுக்க விரும்பினால், அதன் இயக்கத்தை முடிவிற்குக் கொண்டு
வராமல், சற்று நேரம் செயலற்ற நிலையில் வைத்திருக்கலாம். இதனால், மின் சக்தி
மிச்சமாகும். அனைத்து சாதனப் பிரிவுகளும்
ஓய்வெடுக்கும். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான வழி முறைகளை இரண்டு
வகைகளில் தருகிறது. அவை ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் (Sleep மற்றும்
Hibernate) விண்டோஸ் 7 சிஸ்டத்தில், Hybrid Sleep என்ற வசதியும்
தரப்பட்டுள்ளது.
நாம் கணினியை
பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை
பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும்
கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.