நமது தமிழ் நாட்டின் தென் மாவாட்டங்களில் உள்ள பெரும்பாலான
தொழிலாளர்கள் தான் வளைகுடா நாடுகளில் கட்டிட வேலைகளில்
இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக எங்கள் ஊரில் உள்ளவர்களை
அதிகமாக பார்க்க முடியும். இவ்வாறு கட்டிட வேலைக்கு வருபவர்களில்
பெரும்பாலானவர்கள், குடும்ப தலைவர்களாக தான் இருப்பார்கள்.
குடும்பத்தின் குழந்தைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு உழைக்க
வந்தவர்கள்.