Saturday, November 2, 2013
கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்
கோதுமை மருத்துவ குணங்கள்
கோதுமையின் மகத்தான பயன்களை பார்க்கலாம்....
* முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும்.
* வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.
* கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.
* கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.
* முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும்.
* வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.
* கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.
* கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.
Friday, November 1, 2013
திராவிட முன்னேற்றக் கழகம்
திராவிட இன மக்களின் உரிமைகளை, தன்மான உணர்வுகளை, தனித்தன்மையை தன்னிகரற்ற சிறப்பினை பாதுகாத்திடவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், “மக்கள் குரலே மகேசன் குரல்” என்ற தத்துவத்தின் அடிப்படையில், நாடு வாழ, நலிவுகள் தீர போராடவும், திராவிட முன்னேற்ற கழகத்தை 1949 செப்டம்பர் 17ல் சென்னை ராபின்சன் பூங்காவில் அப்போதைய கோவை மாவட்டம் தற்போதைய திருப்பூர் மாவட்டம் பெத்தாம்பாளையம் பழனிச்சாமி அவர்கள் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கினார். |
இந்திரா காந்தி: இந்தியாவின் இரும்பு மனுஷி
இந்தியாவின் இரும்பு மனுஷி இந்திரா காந்தி தன் காவலர்களாலே சுட்டுக் கொல்லப்பட்ட தினம் அக்டோபர் 31.
அடிப்படையில் பஞ்சாபி மொழி பேசும் மக்களை தனி மாநிலமாக அறிவிக்கவேண்டும் என்கிற கோரிக்கையோடு வலுப்பெற்றது சிரோன்மணி அகாலிதளம்; அதை நீர்க்கச் செய்ய பஞ்சாப் மாநிலத்தை மூன்றாகப் பிரித்து ஹரியானா, பஞ்சாப் மற்றும் இரண்டுக்கும் பொதுவாக சண்டிகரை வைத்தார் இந்திரா. இத்தனைக்குப் பிறகும் பஞ்சாபில் சிரோன்மணி அகாலிதளம் காங்கிரசின் வசமிருந்த ஆட்சியை எமெர்ஜென்சி காலத்துக்குப் பின்கைப்பற்றிக்கொண்டது.
கண்ணுக்குத் தெரியாத காவலாளி
நாம் உயிர் வாழவும் பூமி ஆரோக்கியமாக இருக்கவும் பங்காற்றி வருவது காற்று. நம் கண்களுக்கு வெளிப்படையாகத் தெரியாததால், ஓரிடத்தில் காற்று இருப்பதை பெரும்பாலான நேரம் நாம் உணர்வதில்லை.
நம்மைச் சுற்றி எங்கெங்கும் காற்று விரவியிருக்கிறது. பல்வேறு வகைகளில் அது தாக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. காற்று, வெளியை அடைத்துக் கொள்கிறது. அதற்கு எடை உண்டு. அனைத்து திசைகளிலும் அழுத்தத்தையும் செலுத்துகிறது.
உருகும் இமய மலைப்பாறைகள்
மதச் சடங்குப் புகையால் உருகும் இமய மலைப்பாறைகள்.
மதச் சடங்குகளின்போது வெளியேறும் கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் புவி வெப்பமடைதலுக்கு காரணமாக அமைந்துள்ளன. அதன் காரணமாக இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருகின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
காற்று மாசுபடுவதற்கு இந்தியா, நேபாளம் உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் மேற்கொள்ளப்படும் மதச் சடங்குகளின்போது வெளிப்படும் புகையும் ஒரு காரணம் என்று நீண்ட நாள்களாக சூழலியலாளர்களிடையே கருத்து நிலவி வந்தது.
Thursday, October 31, 2013
பிரமாண்டமாய் ஓர் உலகம்-2
துபாய் அல்-மஹ்தும் சர்வதேச விமானநிலையம்
உலகின் மிகப்பெரிய விமான நிலையமான அல்-மஹ்தும் சர்வதேச விமானநிலையம் துபாயில் நேற்று திறக்கப்பட்டது.
(இன்னும் முழுமையாக திறக்கப்படாத சென்னை சர்வதேச விமானநிலையத்தின் மேற்கூரை அடிக்கடி இடிந்து விழுவதையும் வயித்தெரிச்சலோடு நினைத்துப் பார்க்கிறேன்)
(இன்னும் முழுமையாக திறக்கப்படாத சென்னை சர்வதேச விமானநிலையத்தின் மேற்கூரை அடிக்கடி இடிந்து விழுவதையும் வயித்தெரிச்சலோடு நினைத்துப் பார்க்கிறேன்)
Wednesday, October 30, 2013
Tuesday, October 29, 2013
மாதாந்திர செலவில் கவனம் வையுங்கள்
சில விஷயங்களில் நாம் கவனம் செலுத்தாததால் தான் மாதாந்திர செலவு அளவு எகிறுகிறது. பின்வரும் விஷயங்களில் கவனமாக இருங்கள்...
• தேவையில்லாத கட்டணங்களை தவிர்த்து விடுங்கள். உதாரணமாக உங்கள் வங்கி ஏ.டி,எம் களிலிருந்து பணம் எடுப்பதைத் தவிருங்கள். உங்கள் வங்கி ஏ.டி.எம் சேவைக்கு கட்டணம் வசூலித்தால் அது போன்ற கட்டணம் இல்லாத கணக்குக்கு மாறுங்கள் அல்லது வங்கியை மாற்றுங்கள்.
“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்”
(ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவர், சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்பித்தார். தனது ஆய்வுகளை முடிப்பதற்காக தன் அரசுப் பணிக்கு 2ஆண்டுகள் விடுமுறை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.)
கண்ணாடிக் கட்டிடங்களுக்குள்!
கடந்த சில தினங்களில் தகவல் தொழில்நுட்பத் துறையினர் தொடர்பான செய்திகள்
ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இது நம்மில் எத்தனை பேருக்கு எட்டியிருக்கும்
என்ற அறியாமையும், இந்த செய்திகள் பற்றி நாம் கவலைப்பட என்ன இருக்கிறது
என்பதை சொல்லவுமே இதனை எழுதுகிறேன்.
நாளைய இந்தியா-2 நேற்றும் இன்றும்
இந்தியா, ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947ம் ஆண்டு அரசியல்
சுதந்தரம் பெற்றது. ஆனால் சுதந்தரத்துக்குப் பிறகும் பொருளா-தார மற்றும்
தனிநபர் சுதந்தரங்கள் மறுக்கப்பட்டே வந்தன. அவற்றைப் பெறுவதற்கு இந்தியா
2014-ம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியிருந்தது. இந்தியாவின் பொருளாதார
விடுதலை (தாராளமயமாக்கல்) வரலாற்றியலாளர்களால் பல நூற்றாண்டுகளுக்குக்
கட்டியம் கூறப்படும் கதையாக ஆகிப்போனது.
1947க்கு பிறகு இந்தியாவின் அரசியல் சுதந்தரம் தார்மிக அளவில் உண்மையாக
இருந்தாலும், நடைமுறையில் அப்படி இல்லை. மக்கள்தொகையின் பெருவாரியான
பகுதிக்கு பொருளாதாரச் சுதந்தரம் மறுக்கப்படும்போது, அது அவர்களை
பொருளாதார ரீதியாக ஏழைமைப் படுத்துகிறது. பொருளற்ற வறுமையில் உள்ள மக்கள்
பொதுநல விநியோகங்களைப் பெற்றுக் காலத்தைத் தள்ளுவது, சுதந்தரம் என்ற
வார்த்தைக்கு அர்த்தமே இல்லாமல் செய்துவிடுகிறது.வலுவிழக்கும் நம் பாரம்பரிய காய்கனிகள், மூலிகைகள்:
Monday, October 28, 2013
உயிர் மூச்சும் உயிர் துடிப்பும்…பாகம்1
October 28, 2013 at 2:21pm
என்அன்பு உடன் பிறப்புகளே!
1967 ல் தி.மு.க வை அரியணை ஏற்றி அழகு பார்த்தவர்களில் எமக்கும் பெரும் பங்குண்டு என்ற உரிமையோடும், அது எம் கடமையென்ற எண்ணத்தோடும் உங்களிடம் சில தகவல்களை பகிர்ந்து கொள்ளும் நேரம் இது. நாடாளு மன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. நாற்பதும் நமக்கே என்று மீண்டும் சரித்திரம் படைக்க வேண்டிய நேரம் வந்து விட்ட்து.
உறக்கம் கலைவோம். சலிப்பு வேண்டாம். அனைவரும் ஒன்று கூடி நமக்குள் ஏற்பட்ட சிறு சிறு சச்சரவுகளை மறந்து உழைக்க வேண்டிய தருணமிது.
நாளைய இந்தியா-1 ( இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற ஒரு செயல்திட்டம்)
ஒரு முன்னேறிய, செல்வச் செழிப்பான நாடாகக்கூடிய ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது. ஆனால், இந்தியாவோ 120 கோடி மக்களைக் கொண்ட ஒரு ஏழை நாடு. வெறும் ஏழைமை மட்டுமல்ல, ஏழைமைப்படுத்தப்பட்ட நாடு. நாட்டில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதிபேர் சத்தான உணவுக்கு வழியற்றவர்கள். உலகிலேயே படிப்பறிவற்ற மக்களை அதிகபட்சமாகக் கொண்ட நாடு. மனிதவள மேம்பாடு சம்பந்தபட்ட பல அளவீடுகளில் இந்தியா மிக மோசமான நிலையில் உள்ளது.
பத்து லட்சம் ஆண்டு டேட்டா பாதுகாக்கும் டிஸ்க்!
காந்த சக்தியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஹார்ட் டிஸ்க்குகள், அதிக
பட்சம் பத்து ஆண்டு காலம் நல்லபடியாக இயங்கும். பல்லாண்டுகள் தகவல்களைச்
சேர்த்துப் பாதுகாக்க விரும்பு பவர்கள், இதனாலேயே மேக்னடிக் டேப்களைப்
பயன்படுத்தி வருகின்றனர். இந்த தேவைக்குப் பதில் கொடுக்கும் வகையில், பத்து
லட்சம் ஆண்டுகள் கூடப் பாதுகாப்பாக தகவல்களைப் பதிந்து வைக்கக் கூடிய
டிஸ்க்குகளை நானோ தொழில் நுப்ட வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர்.
தமிழ் உணவு தயாரிப்பது எப்படி?
சமையல் செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுப்பது ஒரு கலை.
ஆனால், இந்தக் காலத்தில் பெண்கள், ஆண்களுக்கு இணையாக, ஏன், அவர்களுக்கும்
மேலாக அலுவலகங்களில் சென்று பணியாற்றுகின்றனர். இதனால், அவர்களுக்கும்
விதம் விதமான உணவினைத் தயாரிப்பது குறித்துக் கற்றுக் கொள்ள நேரம்
இருப்பதில்லை. தங்கள் மகள்களுக்குக் கற்றுக் கொடுக்கவும்,
பழக்கப்படுத்தவும் முன் வருவதில்லை.
நபி(ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை
நபி(ஸல்) அவர்கள் புனித மதினா நகர் விட்டு திருமக்கா நகர் நோக்கி ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள்.
பெருமா நபியவர்களுடன் ஒரு லட்சத்து இருபத்தி நாலாயிரம் தோழர்களும் ஒன்று
சேர்ந்து பயணம் செய்தார்கள். இதுவே பூமான் நபியின் இறுதி ஹஜ்ஜாகும்.
மக்காவுக்கருகிலுள்ள ஹஜ் பூர்த்தியாகும்– உங்கள் வேண்டுதல்கள் யாவும் மறை
போற்றும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும்
ஆயிஷா(ரலி) அவர்களின் சிறப்புகள்
நபித்தோழர்களை அல்லாஹ் தன் தூதருக்கு
துணையாக தேர்ந்தெடுத்தான். அவர்கள் பற்றி இஸ்லாமிய விசமிகளால் சில
விமர்சனங்கள் கூறப்பட்டிருப்பதை யாவரும் அறிவோம். அதிலும் குறிப்பாக அன்னை
ஆயிஷா (ரலி) அவர்கள் பற்றி. உத்தம நபிக்கு உத்தமிகளையே அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.
அவர்களை குறை கூறி நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்திற்கு இழுக்கை
ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கமாகும். அல்லாஹ் அதிலிருந்து நபி (ஸல்)
அவர்களை பாதுகாத்துவிட்டான். திருமறையும் நபி மொழிகளும் அன்னை பற்றி கூறும்
சில தவகல்கள்.
Sunday, October 27, 2013
நபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி
1430 ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய
அரபுலகத்தில் அறியாமை இருள் நிறைந்த காலகட்டத்தில் அந்த இருளை நீக்கி இறுதி
இறைதூதராக நம் நபி(ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். நபி(ஸல்) அவர்களின்
அழகிய போதனைகள் நிறைந்த வாழ்க்கையானது அறியாமை இருளை அழகிய வாழ்க்கை
முறையை மக்களுக்கு தந்ததோடு, இன்றும் அந்த வாழ்க்கை முறையை பின்பற்றி
நடக்கும் அறிய வாய்ப்பை நபி(ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் நமக்கு தந்ததோடு அல்லாமல் நபி(ஸல்) அவர்களின் நற்குணங்களைத் தன் திருமறையிலும் நமக்கு அறிவித்து கொடுத்துள்ளான்.
பாஸ்லி ஆண்டு - என்றால் என்ன?
ஒரு பாஸ்லி ஆண்டு என்பது ஆங்கில வருடத்தில் ஜூலை 1 ஆரம்பித்து ஜூன் 30
அன்று முடியும். இந்த ஒரு வருடத்தில் இரண்டு விவசாய பருவ காலங்கள்
இருக்கும் ஒன்று கரீப் (Kharif) எனப்படும் குறுவை சாகுபடி மற்றொன்று ராபி
(Rabi). இந்த இரண்டு விவசாயக் காலங்களிலும் என்னென்ன பொருட்கள், எந்த
அளவில் உற்பத்தி செயப்பட்டன என்பதை அறிந்து அவற்றின் அடிப்படையில் ஒரு வருட
நிலவரியை வசூலிக்க வேண்டும்.
இணையத்தில் கண்காணிப்பது யார்?
இணையத்தில் கண்காணிப்பது யார்?- அடையாளம் காட்டும் லைட்பீம்!
கண்காணிக்கப்படுவதும், கவனிக்கப்படுவதும்தான் இப்போதைய இணைய யதார்த்தம்.
தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும்
இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன. அதாவது
டிராக் செய்கின்றன. பொருத்தமான விளம்பரத்தை அளிக்கவும், பயனாளியின்
எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயல்படவும் இவ்வாறு செய்யப்படுவதாக
சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அரசுகள் இமெயில் வாசகங்களையும் தேடல்
பதங்களையும் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.
வெளிநாடு வாழ்க்கையில்...
ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்ல என்னதான் நீங்க கருத்தா, ஸ்டேட்டஸ்
போட்டாலும் அதிக லைக்ஸ் விழ மாட்டேங்குதா? டோன்ட் வொர்ரி! இதோ.. இந்த
ஐடியாவை ஃபாலோ பண்ணுங்க, நீங்க போடுற ஒவ்வொரு ஸ்டேட்டஸுக்கும் லைக்ஸ்
அள்ளும். ( பி.கு: இது முழுக்க முழுக்க, வளர நினைக்கும் மற்றும் வளர்ந்துவரும் ஃபேஸ்புக் எழுத்தாளர்களுக்கு மட்டுமே பொருந் தும்.)
ஷரியா முதலீடுகள்!
இஸ்லாமியர்களுக்கு ஏற்ற முதலீடு... ஷரியா முதலீடுகள்!
இஸ்லாம் மதச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்யப்படும் பங்கு சார்ந்த முதலீடுகள் உலகெங்கிலும் அதிகமாகி வருகிறது. ஷரியாவுக்கு உட்பட்டு முதலீடு செய்ய விரும்பும் இஸ்லாமிய முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டிலும் மற்ற பிற மாநிலங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடு என்றால் என்ன, அவ்வகையான முதலீடுகள் இந்தியாவில் என்னென்ன உள்ளன என்பதைப் பற்றி சற்று விரிவாக எடுத்துச் சொல்லவே இந்தக் கட்டுரை.
இஸ்லாம் மதச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்யப்படும் பங்கு சார்ந்த முதலீடுகள் உலகெங்கிலும் அதிகமாகி வருகிறது. ஷரியாவுக்கு உட்பட்டு முதலீடு செய்ய விரும்பும் இஸ்லாமிய முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டிலும் மற்ற பிற மாநிலங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
ஷரியாவுக்கு உட்பட்ட முதலீடு என்றால் என்ன, அவ்வகையான முதலீடுகள் இந்தியாவில் என்னென்ன உள்ளன என்பதைப் பற்றி சற்று விரிவாக எடுத்துச் சொல்லவே இந்தக் கட்டுரை.
என்றுதான் விடியுமோ விவசாயிகளின் வாழ்வு?
கலைஞர் பதில்கள்
கேள்வி :- போலீஸ் பக்ருதீன் கைது விவகாரம் பெரிதாகிக்கொண்டு போகிறதே?
கலைஞர் :-
அதைப்பற்றி நான் முன்பே விரிவாக எழுதியிருக்கிறேன். கொலைக் குற்றவாளிகள்
போலீஸ் பக்ருதீன் குழுவினரா? அல்லது ஏற்கனவே டி.ஜி.பி. அறிக்கையில்
தெரிவித்திருந்த நபர்களா? பக்ருதீன் எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார்?
கைது செய்த போலீஸ் அதிகாரி யார்? என்பதற்கான விளக்கங்களையெல்லாம் அரசு
தெளிவு படுத்த வேண்டு மென்று எழுதியிருந்தேன். ஆனால் பொதுமக்களுக்கு
ஏற்பட்டுள்ள சந்தேகங்களைப்போக்கிடும் வகையில் அரசு அதைப்பற்றி விளக்கமளிக்க
வில்லை. இதற்கிடையே வேலூரில் செய்தியாளர்களிடம் போலீஸ் பக்ருதீன் தான்
கொலையாளி அல்ல என்றும், அவ்வாறு சொல்லக் காவல் துறையினர் வலியுறுத்துவ
தாகவும் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)