ஒரு பாஸ்லி ஆண்டு என்பது ஆங்கில வருடத்தில் ஜூலை 1 ஆரம்பித்து ஜூன் 30
அன்று முடியும். இந்த ஒரு வருடத்தில் இரண்டு விவசாய பருவ காலங்கள்
இருக்கும் ஒன்று கரீப் (Kharif) எனப்படும் குறுவை சாகுபடி மற்றொன்று ராபி
(Rabi). இந்த இரண்டு விவசாயக் காலங்களிலும் என்னென்ன பொருட்கள், எந்த
அளவில் உற்பத்தி செயப்பட்டன என்பதை அறிந்து அவற்றின் அடிப்படையில் ஒரு வருட
நிலவரியை வசூலிக்க வேண்டும்.